சல்லாப சாமியார்களின் உல்லாச் மோசடிகள்!ஆணுறுப்பு அறுபட்ட சிவனின் வாரிசு!

ஜூன் 01-15

பக்திப் போர்வையில் சாமியார்களின் லீலைகள் அக்காலந்தொட்டு நடைபெறுவது தான் என்றாலும் அண்மைக் காலங்களில் இது ஆயிரக்கணக்கில் அன்றாடம் நடைபெறுகிறது!

சாமியாராய்ப் போனவன் சபலப்பட்டு லீலைகள் செய்தான் அன்று. ஆனால், லீலைகள் செய்வதற்கென்றே சாமியாராய் நிறைய பேர் புறப்பட்டுவிட்டார்கள் இன்று.

இப்படிப்பட்ட சாமியார்களின் தொடக்க வாழ்வைத் தோண்டினால், கஞ்சா விற்றவன், கள்ளத்தனம் செய்தவன், டீக்கடை நடத்தியவன், குதிரைவண்டி ஓட்டியவன், குறி சொன்னவன், கொலை செய்தவன் என்று வண்டவாளம் வெளிப்படும்.

இப்படிப்பட்ட சாமியார்கள் பொதுவாகச் செய்வது, பொது இடங்களை ஆக்கிரமிப்பது, அற்புதம் செய்வதாய் விளம்பரப்படுத்துவது, அரசியல்வாதிகளோடு கை கோர்ப்பது, அப்பாவிப் பெண்களை தங்கள் வலையில் வீழ்த்திச் சீரழிப்பது.

அதிகப் பெண்கள் கிடைக்கும்போது அரசியல்வாதிகளோடு பங்கு போட்டு, அவர்களையும் வலையில் வீழ்த்தி தங்களைப் பாதுகாத்துக் கொள்வது.

இந்தச் சாமியார்களில் குடியரசுத் தலைவரே காலில் விழும் “ஹை கிளாஸ்’’ சாமியார்கள் முதல், காத்தாயியும், குப்பாயியும் குறைதீரச் செல்கின்ற “லோ கிளாஸ்’’ சாமியார்களும் உண்டு. பக்தி மயக்கத்தில் செல்கின்ற பக்தர்களில் படித்தவர்களும் உண்டு; பாமரர்களும் உண்டு.

இந்தியாவில் பந்தா காட்டும் உயர்நிலைச் சாமியார் காஞ்சிபுரத்துக் காமகோடி பீடத்தில் காட்சித் தருபவர்தான் “காமகோடி’’. நல்ல பொருத்தமான பெயர்! காமம் கரைபுரண்டு நுங்கும் நுரையுமாய் பொங்கிவழிவது மட்டுமல்லாமல், கொலை, குத்து, வெட்டு என்று எல்லாம் அங்கு அரங்கேற, காமகோடியல்ல காமகேடி என்று ஆகிவிட்டது.

காஞ்சி காமகேடி ஜெயேந்திரர்:

குடியரசுத் தலைவர், பிரதமர் முதல் உயர்நிலை அரசியல் தலைவர்கள், கார்ப்பரேட் முதலாளிகள் எல்லாம் வந்து தரிசிக்கும் தகுதி பெற்றவர். கவுண்டமணி பாணியில் சொல்ல வேண்டுமானால், இவர் ஓர் “ஆலினால் அழகுராஜா!’’ அனைத்திலும் எக்ஸ்பர்ட்!

இதோ சில:

தண்டத்தைப் போட்டுவிட்டு பெண்ணோடு ஓடியவர்!

1986இல் ஜெயேந்திரர் தண்டத்தைப் போட்டுவிட்டு யாருக்கும் தெரியாமல், வெங்கெட்ராமன் என்பவரின் பெண்ணை இழுத்துக் கொண்டு ஓடினார். ஒரு மாதத்திற்கு மேல் குடும்பம் நடத்தினார். அப்போது ஓடிப்போன இந்த ஓடுகாலி சங்கராசாரியை, சிபிஐ கொண்டு தேடிக் கண்டுபிடித்தனர். பின்னர் தலைக்காவிரிக்குப் போய் அந்தப் பெண்ணைப் பிரிந்து வந்த தகவல்கள் அப்போது ஊடகங்களுக்குப் பரபரப்புச் செய்திகள். அந்தக் கால இடைவெளியில் சின்ன சங்கராச்சாரி விஜயேந்திரனை நியமித்தது சங்கரமடம். இதுதான் இரண்டு சங்கராச்சாரிகள் இருப்பதன் ரகசியம்.

எழுத்தாளர் அணுராதா ரமணன் புகார்:

1992ஆம் ஆண்டு காஞ்சி சங்கரமடத்தில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. நானும் இன்னொரு பெண்ணும் (இவர்தான் சங்கராச் சாரியாரிடம் அறிமுகப்படுத்தியவர்) மடத்துக்குச் சென்றோம். அங்கு உட்கார்ந்து அவருடன் பேசிக் கொண்டு இருந்தோம். அப்போது சங்கராச்சாரியார் ஆன்மீகம் பற்றிப் பேசினார்.

நான் தலைகுனிந்து எழுதிக் கொண்டு இருந்தேன். ஆன்மீக வாதியின் பேச்சு திடீரென்று ஆபாசமாக மாறியது. அப்போது நான் என் தலையை நிமிர்த்தி அவரைப் பார்த்தேன். அப்போது எனக்கு தூக்கி வாரிப் போட்டது. என்னுடன் வந்து இருந்த பெண் சங்கராச்சாரியாருடன் மிக நெருக்கமாக உட்கார்ந்து கொண்டு இருந்தார்.

அவர் என்னிடம் மிக ஆபாசமாகப் பேசினார். அவரது விருப்பத்துக்கு என்னை இணங்கும்படி வற்புறுத்தினார். என்னால் கோபத்தைத் தாங்கிக் கொள்ளமுடியாமல் நீயெல்லாம் மனுஷனா என்று கேட்டு விட்டு வந்து விட்டேன்.

அப்போது ஒரு வாரப் பத்திரிகையில் எனக்கு ஏற்பட்ட துன்பத்தைத் தொடராக எழுதி வந்தேன். அப்போதும் எனக்கு மிரட்டல் வந்தது. அதேபோல போலீசில் புகார் கொடுக்க முடியாதபடி அவர்கள் எனக்குப் பல தொல்லைகள் கொடுத்தார்கள்.

‘தினபூமி’யில் (5.12.04) அன்று வெளிவந்த செய்தி.

“காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் அடிக்கடி இளம்பெண்கள் பலரை மடத்துக்கே வரவழைத்து சந்தித்திருக்கிறார். இதில் சென்னை அசோக் நகரைச் சேர்ந்த அனுராதா என்ற பெண்ணும் ஒருவர். இதேபோல, கும்பகோணம் வனஜா, ஆந்திராவைச் சேர்ந்த ஜெயா உள்ளிட்டப் பெண்கள் ஜெயேந்திரரை அடிக்கடி சந்தித்துள்ளதும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

காஞ்சி சங்கர மடத்துடனும், ஜெயேந்திரருடனும் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த நடிகைகளில் சொர்ணமால்யா முக்கியமானவர்.

ரவி சுப்பிரமணியம் வாக்குமூலம்:

ஜெயேந்திரர் பல பெண்களுடன் இருந்துள்ளதை நேரில் பார்த்த ரவி சுப்பிரமணியம் கூறிய அதிர்ச்சிகரமான தகவல்கள்:

லீலாவுடன் அரட்டை:

நான் பிராமண வகுப்பைச் சேர்ந்தவன். என் மனைவி சித்ரா, நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர். 1994ஆம் ஆண்டில் எனக்கும் மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு தோன்றியதால் பிரிந்துவிட்டோம்.

தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வந்த நான் பின்னர் கட்டட காண்ட்ராக்ட் எடுத்துச் செய்ய ஆரம்பித்தேன். என் நண்பர் விஸ்வநாதன் மூலமாக காஞ்சி மடத்துடன் தொடர்பு கிடைத்தது. விஸ்வநாதனின் அக்காள் லீலாவுக்கும் ஜெயேந்திரருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வந்தது.

லீலாவும் ஜெயேந்திரரும் மணிக்கணக்கில் டெலிபோனில் அரட்டை அடிப்பது வழக்கம். அவர் மூலமாக ஜெயேந்திரரின் அறிமுகம் கிடைத்தது.

சரஸ்வதியிடம் தகாத செயல்:

1995ஆம் ஆண்டில் நான், விஸ்வநாதன், அவரது மனைவி சரஸ்வதி மூன்று பேரும் தாம்பரத்தில் ஜெயேந்திரர் தங்கியிருந்த கல்யாண மண்டபத்தில் அவரை சந்திக்கப் போனோம். இரவு நேரத்தில் ஜெயேந்திரரை நாங்கள் தனித்தனியாக சந்திக்க வைக்கப்-பட்டோம்.

பின்னர் மூவரும் வீட்டுக்குத் திரும்பியபோது, தன்னிடம் ஜெயேந்திரர் தகாத முறையில் நடக்க முயன்றதாக சரஸ்வதி எங்களிடம்கூறினார்.

இதையடுத்து ஜெயேந்திரரை கண்டிக்குமாறு லீலாவிடம் சொன்னோம். அவரும் ஜெயேந்திரருடன் பேசினார். இதைத் தொடர்ந்து சரஸ்வதியிடம் டெலிபோனிலேயே ஜெயேந்திரர் மன்னிப்பு கேட்டார்.

அதே சமயம் நானும் லீலாவும் தொடர்ந்து, அடிக்கடி காஞ்சி மடத்துக்குச் சென்று வந்தோம். லீலாவுடன் மணிக்கணக்கில் ஜெயேந்திரர் தனியே பூட்டிய அறையில் இருப்பார். இந்த விஷயங்கள் எல்லாம் எனக்குத் தெரிந்து போனதால், என்னை சங்கரா கல்லூரிக் குழுவின் உறுப்பினராக ஜெயேந்திரர் நியமித்தார்.

அந்தக் கல்லூரிக்காக கட்டடம் கட்ட ரூ.1.6 கோடி செலவிடத் திட்டமிட்டார். அந்தப் பணியை என்னிடம் தந்தார். நான் கட்டித் தந்தேன். இதையடுத்து காஞ்சி மடத்தின் பல கட்டட வேலைகளை எனக்குத் தந்தார் ஜெயேந்திரர்.

மதிய நேரத்தில் பெண்களுடன்:

ஜெயேந்திரருக்கு பெண்கள் விஷயத்தில் நிறைய தொடர்புகள் இருந்தன. மதிய நேரத்திலேயே தனது அறைக்குள் பல பெண்களுடன் அவர் இருப்பதைப் பார்த்திருக்கிறேன்.

பிரேமா:

மடத்தின் சைல்ட் டிரஸ்ட் மருத்துவமனையின் இயக்குனர் நடராஜனின் மனைவி பிரேமா, ஹைதராபாத்தில் ஆல் இந்தியா ரேடியோவில் வேலை பார்க்கும் பெண் ஆகியோரை ஜெயேந்திரருடன் தவறான நிலையில் நான் பார்த்திருக்கிறேன்.

பத்மா-ரேவதி:

மருத்துவமனையில் கேண்டீன் வைத்திருக்கும் பத்மாவையும் மதிய நேரத்தில் ஜெயேந்திரருடன் பார்த்திருக்கிறேன்.

மடத்துக்குச் சொந்தமான நசரத்பேட்டை பள்ளியின் முதல்வர் ரேவதியையும் ஜெயேந்திரருடன் பார்த்திருக்கிறேன்.

மதிய ஓய்வு நேரத்தில், பக்தர்களை சந்திக்காதபோது இவர்களுடன் இருந்துள்ளார் ஜெயேந்திரர்.

புளு பிலிம்:

இதைத் தவிர நிறைய புளு பிலிம் படங்களையும் ஜெயேந்திரர் பார்ப்பார். மதியம் 1.30 மணி முதல் மாலை 3 மணி வரை இதெல்லாம் நடக்கும்.

அப்போதைய தினபூமி, ஜூனியர் விகடன், நக்கீரன், குமுதம் ரிப்போர்ட்டர் இதழ்களை புரட்டினால் இவர் புரண்டதெல்லாம் புற்றீசலாய் புறப்படும்.

ஷிவ்முராத் திவிவேதி (பார்ப்பன சாமியார்)

1988இல் உத்திரப்பிரதேசத்தில் சித்திரகூட் என்ற இடத்திலிருந்து டில்லிக்குப் பிழைப்பு தேடி வந்து உணவு விடுதியில் எடுபிடியாக, இரவுக் காவலாளியாக இருந்தவன். இரண்டு முறை திருட்டு வழக்கிலும், விபச்சார வழக்கிலும் சிக்கிச் சிறை சென்றவன்.

சாய்பாபாவின் சீடன் என்று சொல்லிக் கொண்டு, பக்திப் போர்வையில், “பலான’’ வேலைகளைப் பார்த்த பலே கில்லாடி! பெரிய பெரிய மனிதர்களுடன் தோள்மேல் கைபோட்டுப் பழகிய பகட்டுப் பேர்வழி. 2000 கோடி ரூபாய்க்கு மேல் கொள்ளைடித்த மோசடிப் பேர்வழி.

டெல்லி: சத்ய சாய்பாபாவின் சீடர் என்று தன்னை பிரபலப்படுத்திக் கொண்டு கான்பூர் பகுதியில் வசித்து வருபவர் சிவ்முரத் திவேதி (39). இவர் கான்பூரில் சாய்பாபா பெயரில் பெரிய கோவில் கட்டி உள்ளார். அக்கோவிலில் தினமும் பஜனைப் பாடல்களைப் பாடுவதும் சொற்பொழிவுகளை நிகழ்த்துவதும் வழக்கம். டெல்லியில் இவருக்கு ஏராளமான பக்தர்கள் உள்ளனர். மேலும் இவருக்கு டெல்லியில் உள்ள அரசியல்வாதிகளிடமும் பழக்கம் ஏற்பட்டதால் அவர் டெல்லியில் புகழ் மிக்கச் சாமியாராக வலம் வந்தார்.

இந்நிலையில் சாமியார் சிவ்முரத் திவேதி இந்து மதத்தைக் கேடயமாக வைத்துக் கொண்டு விபசாரம் செய்து வருவதாகப் புகார்கள் வந்தன.

இதனால் சந்தேகம் அடைந்த டெல்லி போலீசார் சிவ்முரத் திவிவேதியையும் அவரது கோவில், வீடுகளையும் கண்காணித்தனர். போலீஸ் விசாரணையில் கான்பூர் சாய்பாபா கோவிலில் சுரங்க அறைகள் இருப்பதும் அங்கு விபசாரம் நடப்பதும் உறுதியாகத் தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் சிவ்முரத் திவிவேதி-யின் கோவிலில் அதிரடிச் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு விபசாரம் நடந்து கொண்டிருப்பது தெரிந்தது.

இதனைத் தொடர்ந்து உடனடியாகப் போலி சாமியார் சிவ்முரத் திவிவேதி கைது செய்யப்பட்டார். அவருடன் விபசாரத்தில் ஈடுபட்டிருந்த 2 விமானப்பணிப் பெண்கள், கல்லூரி மாணவிகள் 2 பேர் பிடிபட்டனர்.  இந்தி படங்களில் நடித்து வரும் துணை நடிகை ஒருவரும் இந்த வேட்டையில் சிக்கினார்.

மேலும் டெல்லியில் உள்ள பணக்காரர்களின் வீடுகளுக்குச் செல்லத் தயாராக இருந்த இளம் பெண்களும் போலீசாரிடம் பிடிபட்டனர்.

போலிச் சாமியாரின் பாபா கோவில் முழுக்க போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது 5 டைரிகள் கிடைத்தன. அந்த டைரிகளில் இந்தியா முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான பெண்களின் முகவரிகள், போன் நம்பர்கள் இருந்தன. அவர்கள் அனைவரையும் போலிச் சாமியார் சிவ்முரத் திவிவேதி விபசாரத்தில் ஈடுபடுத்தி இருப்பது தெரிய வந்தது. மேலும் போலிச் சாமியாரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது.

இவன் டில்லியில் 200 பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தியவன். அப்படிச் சம்பாதித்ததே அந்த 2000 கோடி ரூபாய் இவனைக் கண்டித்து திராவிடர் கழகம் சென்னை மேமோரியல் ஹால் முன் 2010இல் (11.03.2010) ஆர்ப்பாட்டம் நடத்தியது. அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கலந்துகொண்டு சாமியார்களின் மோசடியை, முகமூடியைக் கிழித்தார்.

ஆசாராம் பாபு

குஜராத்தின் ஆமதாபாத் அருகே, ஆசிரமம் நடத்தி போலீசாரிடம் மாட்டிக்கொண்ட ஆசாராம் பாபு, லட்சக்கணக்கில் சீடர்கள் கொண்டவர். ஆசாராம் பாபு வடஇந்தியாவில் இருக்கும் பல மதகுருக்களில் ஒருவர்.

1. நில அபகரிப்பு
2. கொலை
3. பாலியல் பலாத்காரம்
போன்ற குற்ற நடவடிக்கைகளுக்காக இவர் மீது வழக்குகள்.

மத்திய டில்லியில் உள்ள, கமலா மார்க்கெட் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்ற, பெயர் குறிப்பிடப்படாத இளம்பெண் ஒருவர், 72 வயதான ஆசாராம் பாபு தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக, புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில், பலாத்கார சம்பவம், ராஜஸ்தானின் ஜோத்பூர் நகரில் உள்ள, ஆசாராம் ஆசிரமத்தில் நடந்ததாக அப்பெண் கூறியதால், வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரிக்குமாறு, ராஜஸ்தான் போலீசாரைக் கேட்டுக் கொண்டனர். புகாரையும் அங்கு அனுப்பினர்.

உத்தரப்பிரதேசம் ஷாஜகான்பூரைச் சேர்ந்த அவர், சாமியார் ஆசாராம் பாபுவிடம் ஆசி பெறுவதற்காக, தனது 15 வயது மகளுடன் 13.08.2013 அன்று ஜோத்பூர் சென்றுள்ளார். தனது மகளுக்கு பேய் பிடித்திருப்பதாகச் சொல்லி அவரிடம் சென்று முறையிட்டுள்ளார்.

15.08.2013 அன்று அதற்கான சடங்குகளைச் செய்கிறேன் என்று ஆசாராம் பாபு சொல்லியிருந்தார். கிரியைகள் செய்யும்போது, நீங்கள் இருக்கவேண்டிய அவசியம் இல்லை என்று சொன்னாலும், அந்தப் பெண்ணின் குடும்பம் அங்கேயே தங்கி இருந்தது.

அப்போது ஆசாரம் பாபு தன்னை மானபங்கம் செய்ததாக மைனர் பெண், தனது தந்தையிடம் கூறினார். இதுகுறித்து மைனர் பெண் 22-.08.2013 மாலை புகார்அளித்தார். இவன் பல மைனர் பெண்களை வன்புணர்வு செய்து கொன்றான். அவனுடைய குற்றச் செயல்களுக்காகச் சிறையில் அடைக்கப்பட்டான்.

பிரம்மரிஷி சுபாஷ் பத்திரி:

தன்னிடம் வரும் பெண்களை இறுக்கி அனைத்தும், பாலுறவுத் தொல்லைகள் கொடுத்தும் புகாருக்கு உள்ளாகி விசாரிக்கப்பட்டவன். ஆந்திராவில் மெகபூப் நகர் மாவட்டம் படுதால் கிராமத்தில் மகேஸ்வரா மகாபிரமிடு என்ற பெயரில் தியான மண்டபம் அமைத்து 136 ஏக்கரில் ஆசிரமமே நடத்தியவன். தினம் ஒரு லட்சம் பேர் தியானத்தில் கலந்து கொள்ள, அங்குவந்த பெண்களிடம் தவறாக நடக்க, அப்படங்கள் ஊடகங்களில் வெளிவந்து சந்தி சிரிக்க, போலீஸ் வழக்குப் பதிந்து விசாரிக்க, பிரச்சனை பெரிதாக ஆசிரமத்தை விட்டே ஓடிவிட்டான்.

ரஜினீஷ் குரோவா

இவன் பிரசாதம் என்ற பெயரில் மயக்க பிஸ்கட்டுகளைக் கொடுத்து, பெண்களை வன்புணர்ச்சி செய்தவன்.

ஜெய்பூரில் இரு பெண்களை இவ்வாறு வன்புணர்ச்சி செய்தான். இதுசார்ந்த படங்கள் ஊடகங்களில் வெளிவந்து பரபரப்பாகியது.

22 வயதுடைய பெண் ஜெய்பூர் காவல் நிலையத்தில் இச்சாமியாருக்கு எதிராய்ப் புகார் அளித்தார்.

சந்தோஷ் மாதவன் (சாமி அமிர்த் சைத்தன்யா)

கேரளாவில் இவன் நடத்திய காமலீலைகள் நீதிமன்றம்வரை சென்று, கேரள நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டான். நான்கு மைனர் பெண்களை கற்பழித்த கொடூரனான இவன், பக்தர்களிடம் பணமும் ஏராளமாய்ப் பறித்துள்ளான்.

ஜக்கி வாசுதேவ்

சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் கோவையில் உள்ள “ப்ரூபாண்ட் ரோடு’’ மேம்பாலத்தின் கீழ்ப்புரம் குதிரை வண்டிகள் நிறுத்தும் இடத்தில் சமூக விரோதிகளுக்கு கள்ளத்தனமாகக் கஞ்சா விற்பனை செய்த ஒரு கயவாளி-தான் இந்த ஜக்கி வாசுதேவ். இந்த ஆளுக்கு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு உண்டு.

இந்தக் கேடிக்கு ரிச்சர்டு என்ற ரவுடி நெருங்கிய நண்பன். அவன் எல்லா வகையிலும் இந்த ஆளுக்கு உதவியாய் இருந்தான். இந்த நிலையில் ரிச்சர்டுக்கும் ஜக்கிக்கும் நடந்த வியாபார மோதலில் அந்தப் பெண் மாயமாக, ரிச்சர்டு கொலை செய்யப்பட்டான்.

அது மட்டுமல்லாது ஜக்கி தனது மனைவியையும் கொலை செய்ததால். அது சார்ந்த வழக்கு நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. மத்தியப் புலனாய்வுத் துறையால் தேடப்படும் குற்றவாளியாகவும் இந்த ஜக்கி அறிவிக்கப்பட்டதாகத் தகவல் உள்ளது.

ஆணுறுப்பு அறுபட்ட ஸ்ரீஹரி கணேஸானந்தா தீர்த்தபதா சாமியார்!

அண்மையில் உலகெங்கும் பரபரப்பாகப் பேசப்படும் செய்தியின் நாயகன். கேரள மாநிலம் கோலாஞ்சேரியைச் சேர்ந்த ஸ்ரீஹரி என்பவன், அந்த ஊரில் டீக்கடை நடத்தி வந்தான்.

இவன் கொல்லம் நகருக்கு நாள்தோறும் சென்று  அங்குள்ள ஒரு சாமியாரின் சமாதியை வழிபட ஆரம்பித்தான். அடுத்தடுத்து தாடி, மீசை, காவி உடை என்று தன்னை மாற்றிக்கொண்டு சாமியார் வேடம் கொண்டான்.

காவியைக் கண்டால் கவிழும் மக்கள் அல்லவா, அவனிடம் கவிழ்ந்தார்கள். பிறகு கொல்லம் பன்மனை ஆசிரமத்தின் கிளையில் தங்கினான். தன் பெயரை கங்கேஷ் ஆனந்த தீர்த்தபாத சாமி என்று மாற்றிக்கொண்டான். அருகிலுள்ள வீடுகளுக்குச் சென்று பூஜைகள் செய்து அவர்களின் குறை தீர்ப்பதாய் நடித்தான். அப்படிச் சென்ற வீடுகளில் ஒன்று சட்டக்கல்லூரி மாணவியின் வீடு.

அந்த மாணவியின் தந்தை பக்கவாதத்தால் படுக்கையில் கிடக்க, அவரது மனைவியை தன்வயப்படுத்தினான். செயலற்ற கணவன் என்பதால் அப்பெண் இச்சாமியாரிடம் எளிதில் இணங்கினாள். சாமியாரிடம் நெருக்கம் அதிகமானதால், அப்போது 16 வயதுடையவளாய் இருந்த அச்சட்டக் கல்லூரி மாணவியையும் அனுபவிக்க எண்ணி, அவளின் தாயின் துணையுடன் அதை நிறைவேற்றினான்.

இந்த இளம் பெண்ணை 16 வயது முதல் வன்புணர்வு செய்து 7 ஆண்டுகள் கொடுமைப்படுத்தினான்.

அச்சாமியாரின் கொடுமை தாங்க முடியாத அப்பெண் அவனது ஆணுறுப்பையே அறுத்து எறிந்துவிட்டாள்.

அப்பெண்ணின் துணிவை கேரள முதல்வரே பாராட்டினார். உலகமே ஒட்டுமொத்தமாய் பாராட்டியுள்ளது.

சிவனின் வாரிசு:

ஆணுறுப்பு அறுப்பட்ட இச்சாமியார் சாட்சாத் சிவபெருமானின் நேரடி வாரிசு என்பதை இன்றைய தலைமுறை புரிந்துகொள்ள வேண்டும்.

சிவனுக்குச் சாமியார் வாரிசா?

ஆம்!

சிவபெருமான் காமலோலன் என்பது உலகம் அறிந்தது. ஒரு நாள் காமப் பெருக்கெடுத்து, தாருகாவனம் சென்றான். அங்குள்ள வீடுகளில் ரிஷிகள் வெளியில் செல்ல ரிஷிபத்தினிகள் மட்டும் வீட்டில் இருந்தனர்.

சிவன் ஒவ்வொரு வீடாய்ச் சென்று ரிஷி பத்தினிகளை வன்புணர்ச்சி செய்தான். அடுத்தடுத்த பெண்ணை புணரப்புணர ஆசை அடங்குவதற்குப் பதில் ஆக்சிலரேட் ஆகி, தீவிரமடைந்து தொடர்ந்து பெண்களைப் புணர்ந்து இறுதியில் ஒருத்தியைப் புணர, ரிஷிகள் வந்துவிட்டனர்.
சிவனின் இந்தப் படுபாதகச் செயலைக் கண்டு கொதித்து,

“எம் பெண்களைப் புணர்ந்த உன் ஆணுறுப்பு அறுந்து விழக்கடவது!’’ என்று சாபம் விட, சிவனின் ஆணுறுப்பு அறுந்து விழுந்தது.

ஆக, கேரள சாமியாருக்கு முன் ஆணுறுப்பு அறுபட்டவன் சிவன். அவனது அடுத்த வாரிசு இக்கேரளச் சாமியார்!

ஆணுறுப்பை அறுத்த அந்தப் பெண்ணைப் போல மக்கள் வெகுண்டெழுந்து வீழ்த்தினால் மட்டுமே இக்காவிக் கூட்டம் வீழும்!

கேரளப் பெண் வழிகாட்டியுள்ளார்! அறுக்கப்படுவது ஆணுறுப்பு மட்டுமல்ல, அத்து மீறும் ஆணின் அடாவடித்தனமும் ஆகும்!

 -மஞ்சை வசந்தன்

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *