Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..
  • மொராக்கோவில் ஜூலை 26 அன்று ராணுவ விமானம் மோசமான வானிலை காரணமாக மலைப்பகுதியில் விழுந்ததில் 78 பேர் உயிரிழந்தனர்.
  • சிக்கிம் மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தினகரன் ஜூலை 29 அன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
  • திருவாரூர் அருகே ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்ற தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஜூலை 30 அன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.
  • பல கோடி ரூபாய் ஊழல் புகாரில் சிக்கிய கருநாடக முதல்அமைச்சர் எடியூரப்பா பா.ஜ.கட்சி மேலிட உத்தரவினை ஏற்று ஜூலை 31 அன்று ராஜினாமா செய்தார்.
  • அமெரிக்காவின் கடன் நெருக்கடித் தீர்வுக்கான மசோதா, பிரதிநிதிகள் சபையில் ஆகஸ்ட் 1 அன்று தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறியுள்ளது.
  • இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளராக இருந்த நிருபமா ராவ் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டதால், புதிய செயலாளராக ரஞ்சன் மத்தாய் ஆகஸ்ட் 1 அன்று பொறுப்பேற்றுள்ளார்.
  • லோக் அயுக்தா அறிக்கையை ரத்து செய்யக்கோரி கருநாடக உயர் நீதிமன்றத்தில் எடியூரப்பா சார்பில் ஆகஸ்ட் 2 அன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
  • பசிபிக் நாடான பப்புவா நியூ கினியாவின் புதிய பிரதமராக பீட்டர் ஓநீல் ஆகஸ்ட் 2 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • கருநாடக மாநிலத்தின் புதிய முதல்வராக பா.ஜ.கட்சியின் சதானந்த கவுடா ஆகஸ்ட் 4 அன்று  பொறுப்பேற்றுள்ளார்.
  • நாடாளுமன்றத்தில் ஆகஸ்ட் 4 அன்று லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
  • எகிப்தின் மேனாள் அதிபர் முபாரக் மற்றும் அவரது இரு மகன்கள் மீதான விசாரணை அந்நாட்டின் தலைநகர் கெய்ரோவில் ஆகஸ்ட் 3 அன்று தொடங்கியது.
  • 60,000 டன் நிலக்கரி ஏற்றிவந்த பனாமா நாட்டு எம்.பி.ராக். எனும் சரக்குக் கப்பல் ஆகஸ்ட் 4 அன்று மும்பை கடலில் மூழ்கியது.
  • சென்னையில் வழக்குரைஞர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைக் கைது செய்யாதது ஏன் என்று நடுவண் அரசை சென்னை உயர் நீதிமன்றம் ஆகஸ்ட் 5 அன்று கேள்வி எழுப்பியுள்ளது.
  • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் ஆகஸ்ட் 5 அன்று வேலை நிறுத்தப் போராட்டம் மேற்கொண்டனர்.
  • தனியார் கல்விக் கட்டண நிர்ணய குழுவின் புதிய தலைவராக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.ஆர். சிங்காரவேலு ஆகஸ்ட் 7 அன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
  • நாடு கடந்த திபெத் அரசின் பிரதமராக லாப்சங் சாங்கே (43) ஆகஸ்ட் 8 அன்று தலாய் லாமா முன்னிலையில் பொறுப்பேற்றுள்ளார்.
  • 2008ஆம் ஆண்டு மாலேகானில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள பெண் சாமியார் ப்ரக்யா சிங் தாகூர் சமர்ப்பித்த ஜாமீன் மனுவை ஆகஸ்டு 9 அன்று மோகா(விசிளிசிகி) நீதிமன்றம் நிராகரித்தது.