மூன்று நட்சத்திர, அய்ந்து நட்சத்திர ஓட்டல்களுக்குச் சென்றாலும் சரி, அல்லது பெரிய சூப்பர் மார்க்கெட் அல்லது Mall-மால் என்று அழைக்கப்படும் பேரங்காடிகளிலும் உணவுப் பொருள்கள் பகுதியில் பாட்டில்களில் வினிகர் (Vinegar) என்று புளிச்ச (காடி) திரவம் போன்ற நீரைப் போட்டு அதில் வெள்ளரிப் பிஞ்சு முதல் மாங்காய் மற்றும் காய்கறிகள் உட்பட பலவற்றைப் போட்டு உணவுடன் உண்ணுவதற்கு வைப்பர்.
சில நாட்களுக்கு முன் வந்த இந்தோ ஏஷியன் நியூஸ் சர்வீஸ் சார்பில் செய்தி ஒன்று ஜெர்னல் ஆஃப் அக்ரிகல்ச்சர் அண்ட் ஃபுட் கெமிஸ்டிரி (Journal of Agricualtural and Food Chemistry) என்ற ஒரு வேளாண்மைத் துறை ஏட்டிலிருந்து ஒரு செய்தி வெளிவந்துள்ளது! கீழே அதைத் தருகிறேன்.
காய்கறி, கீரைகள் மீது தூவப்படும் வினிகர் என்ற புளிப்புச் சாறு ஊறுகாய்களிலும் மற்ற உணவு வகைகளிலும் மேல் தூவல் செய்யப்படுகிறது. இதைச் சாப்பிடும்போது நானேகூட பல நேரங்களில் இது உடல் நலத்திற்கு மிகவும் கேடு செய்யுமோ என்று அஞ்சி, உண்ணுவதற்கு ஆசையும் ஆவலும் அதிகம் இருந்தாலும் கூடத் தயங்கிச் சாப்பிடாமல் நிறுத்தி விடுவது உண்டு.
புளிப்புச் சாறு கலந்து உணவைச் சாப்பிடுவது உடலில் உள்ள கொழுப்பு கரைய உதவுகிறது. பலவகையான நோய்களுக்கு இதனை அருமருந்தாகக் கையாண்டு நோய்களைக் குணப்படுத்தியுள்ளனர் என்ற செய்தியும் திரட்டப்பட்டுள்ளது.
தற்போதைய நவீன ஆராய்ச்சி (Acetic Acid) அசிட்டிக் ஆசிட்(Blood Pressure) என்னும் புளிப்புச் சாறு உருவாதற்குப் பயன்படு திரவம் என்பது இரத்த அழுத்தத்தைக்(Blood Pressure) கட்டுப் படுத்தவும், இரத்தத்தில் உள்ள சர்க்கரை (Blood Sugar) அளவினைக் குறைக்கவும், கொழுப்பு கூடுதலாக ஆகாமல் தடுக்கவும் பெரிதும் பயன்படுகிறது என்று கண்டறியப் பட்டுள்ளது.
அவர்கள் இந்தப் புதிய ஆராய்ச்சியைப் பரிசோதனைக் கூடத்தில் அதனை எலிக்குக் கொடுத்தே (வழமை போல்) ஆய்வு செய்து கண்டறிந்துள்ளனர். ஓர் எலிக்கு இதனைக் கொடுத்தும் மற்றொன்றுக்கு இதனைக் கொடுக்காமலும் சோதனை செய்து பார்த்தபோது இந்த அசிட்டிக் அமிலம் கலந்த வினிகர் கொடுக்கப்ட்ட எலிக்கு 10 சதவிகித உடல் கொழுப்புக் குறைவாக இருக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளதாக அமெரிக்க கெமிக்கல் சொசைட்டி (American Chemical Society) விடுத்த செய்தி அறிக்கை கூறுகிறது.
அதைவிட முக்கியமாக இந்தப் புதிய ஆராய்ச்சியின் மூலம் அசிட்டிக் அமிலம் கொழுப்புச் சத்தை எதிர்த்துப் போர் புரிந்து அதன் விளைவாக கொழுப்பு சத்து மிகுந்த (Oxidation Enzymes) என்ற என்சைம்கள் நம் உடலில் பெருகவும் உதவிடுகிறது என்றும் அறிவிக்கின்றது!
இந்த மரபு அணுக்கள் (Genes) கொழுப்புச் சத்துக்களை அழிக்கும் புரதச் சத்தான புரோட்டீன்களைக் கடைந்தெடுத்து விட்டு உடம்பில் கொழுப்பு சேர்ந்துவிடாமல் தடுப்புச் சக்தியாக காவலர்போல் நிற்க உதவுகின்றனர்! அ