இப்படியும் ஒரு காதல்! பிரஞ்ச் நாட்டு புதிய அதிபர் காதல் உலகம் காணா விசித்திரம்!

மே 16-31

 

பிரஞ்ச் நாட்டின் புதிய அதிபராய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்மானுவல் மெக்ரான் வயது 39. இவர் 64 வயதான பெண்ணைத் திருமணம் செய்ய இருக்கிறார்! அதிர்ச்சியாய் இருக்கிறதா?

அந்தப் பெண் 24 ஆண்டுகளுக்கு முன் இவரின் ஆசிரியராக இருந்தவர்.

இவர் 15 வயதில் அப்பெண்ணின் மாணவராய்ப் படித்தபோது, 40 வயதான அவரைக் காதலித்திருக்கிறார்! அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாய் இருக்கிறதா?

தற்போது 64 வயதாகும் அப்பெண்ணுக்கு (அக்கிழவிக்கு) 3 பிள்ளைகள் உள்ளனர்! 7 பேரப் பிள்ளைகள் உள்ளனர்!
தலைசுற்றுதா? இருங்க, இன்னொரு செய்தி இவர் திருமணம் செய்யப்போகும் அப்பெண்ணின் மூத்த மகன் இவரைவிட இரண்டு வயது மூத்தவர்.

15 வயதில் 40 வயது ஆசிரியரைக் காதலித்த இவர், அடுத்தவர் மனைவியானாலும், 64 வயதானாலும், 7 பேரப்பிள்ளைகள் இருந்தாலும் விடாது காதலித்து அவரையே திருமணம் செய்கிறார்! என்னே காதல் பாருங்கள்!
பிரஞ்ச் நாட்டின் எதிர்காலம் எப்படி…?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *