இது ஆண்களுக்கு மட்டும் உரியதல்ல பெண்களுக்கும் உரியது. தமிழரின் தலைசிறந்த கலை.
“வேலுநாச்சியார் காலத்துலேருந்தே பெண்கள் சிலம்பம் கத்துக்கிட்டிருக்காங்க. ஆணோ, பெண்ணோ… எல்லாருக்கும் சுயமதிப்பும் தன்னம்பிக்கையும் அவசியம். சிலம்பம் கத்துக்கிறது மூலமா சுயமதிப்பும் தன்னம்பிக்கையும் அதிகரிக்குது. பெண்கள் சிலம்பம் கத்துக்கிறதுல நிறைய நல்ல விஷயங்கள் இருக்கு. மத்த விளையாட்டுகள் அல்லது உடற்பயிற்சிகளோடு ஒப்பிடும்போது, சிலம்பம் என்பது ஒட்டுமொத்த உடலுக்கும் வேலை கொடுக்கிற ஒரு பயிற்சி. அது மட்டுமில்ல… சிலம்பம் பண்றவங்களுக்கு அசாத்தியமான கவனத்திறன் அவசியம். மனசை ஒருமுகப்படுத்தி, அமைதியாக்குகிற வேலையையும் சிலம்பம் செய்யுது. சிலம்பம் கத்துக்க வயது வரம்பு கிடையாது. ஐந்து வயசுக் குழந்தைகூட கத்துக்கலாம். சிலம்பம் கத்துக்கிறதால் குழந்தைகளோட நினைவாற்றல் மேம்படும். உடலளவுலயும் மனசளவுலயும் பலசாலிகளாகிறாங்க தன்னம்பிக்கையும் அதிகரிக்குது.
சிலம்பம்னாலே கம்பு சுத்தறதுதான்னு நினைச்சிட்டிருக்காங்க. கம்பு தவிர, அதுல மான்கொம்பு, சுருள்வாள், வாள்வீச்சு, வேல்கம்பு, செடிக்குச்சி மாதிரி நிறைய கருவிகள் இருக்கு. ஒவ்வொண்ணுக்கும் தனித்தனி டெக்னிக்கும், உபயோகிக்கிற முறைகளும் இருக்கு. கம்பு வச்சு சுத்தும்போது, கைகளில் உள்ள அழுத்தப் புள்ளிகள் தூண்டப்படும்….’’ என்று சிலம்பத்தின் சிறப்புகளை கூறும் ஐஸ்வர்யா,
“சிலம்பம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாடி தென்னிந்தியாவுலதான் ஆரம்பிக்கப்பட்டிருக்கு. அகத்திய முனிவர், ஓலைச்சுவடிகளில் கம்பு சூத்திரம் பற்றி எழுதின குறிப்புகள் இருக்கு. சேர, சோழ, பாண்டியர் காலத்துலயும் சிலம்பம் இருந்திருக்கு. பிரிட்டிஷ் காலத்துல சிலம்பத்துக்குத் தடை விதிக்கப்பட்டதா வரலாறு சொல்லுது. அதனால இடையில சில காலத்துக்கு அந்தக் கலை காணாம போயிடுச்சு. அதுக்கப்புறம் கோயில் திருவிழாக்கள்ல ஆடப்படற கலையா இருந்தது. ஆனா, இந்தத் தலைமுறையில நிறைய பேருக்கு சிலம்பக் கலை பத்தின விழிப்பு உணர்வு இல்லை.
இப்போதைக்குத் தமிழ்நாட்டுல பள்ளிக்கூட விளையாட்டுகள்ல சிலம்பமும் சேர்க்கப்பட்டிருக்கு. அது மட்டுமே போதாது. இதை ஒரு வி¬ளாயட்டாகவும், கலையாகவும் உலகளவுல பிரபலப்படுத்தணும். சிலம்பத்தை மூன்று வகைகளில் கத்துக்கலாம். முதலாவதாக தற்காப்புக் கலையாகவும், இரண்டாவதாக விளையாட்டாகவும் கத்துக்கலாம். அதாவது பள்ளிகளில் இது விளையாட்டாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறதால மாவட்ட, மாநில அளவுகள்ல டோர்னமென்ட் நடத்தப்படுது. அந்த வகையில் ஒரு விளையாட்டாகவும் இதைக் கத்துக்கலாம். மூணாவதா, இதை ஒரு கலாச்சார நிகழ்ச்சியாகவும் ஆக்க வேண்டும்.
ஆண்களின் கலையாக மட்டுமே அறியப்பட்டு வந்த சிலம்பாட்டத்தைத் தனது முழுநேரக் கலையாக மாற்றிக்கொண்ட இவர், உலக அளவில் நடந்த சிலம்பப் போட்டிகளில் தவறாமல் தங்கம் முதல் வெண்கலம் வரை பதக்கங்களை வென்று வருபவர்!
“சென்னையில பாரம்பர்ய தற்காப்புக் கலைகள் என்னவெல்லாம் இருக்குனு தேட ஆரம்பிச்சேன். அப்படித்தான் பவர் பாண்டியன் ஆசானோட சிலம்பப் பயிற்சி பத்தியும் தெரியவந்தது. பவர் பாண்டியன் ஆசான், 30 வருஷங்களுக்கும் மேலாக சிலம்பப் பயிற்சி வகுப்புகள் எடுத்துக்கிட்டிருக்கார். வேர்ல்ட் சிலம்பம் ஃபெடரேஷனோட மூத்தத் தலைவர். ‘கபாலி’ படத்தில் நடிச்ச தன்ஷிகா, சமுத்திரக்கனி, சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு உள்பட பலருக்கும் சிலம்பம் கத்துக்கொடுத்தவர். அவர்கிட்ட கிலம்பம் கத்துக்கிட்டதை என் வாழ்க்கையின் மிகப் பெரிய வாய்ப்பா நினைக்கிறேன்…’’ என்கிறார்.
“சிலம்பம் கத்துக்க ஆரம்பிச்ச பிறகு, சிலம்பத்துக்கும் பரநாட்டியத்துக்கும் நிறைய ஒற்றுமைகளும், தொடர்பும் இருக்கிறது தெரிஞ்சது. பரநாட்டியத்துல உள்ள அசைவுகள், பாடி லேங்வேஜ், எக்ஸ்பிரஷன், ரிதம்… இதெல்லாம் சிலம்பக் கலையிலயும் இருக்கு. அதனாலயே சிலம்பத்தின் மேல எனக்கு சீக்கிரமே ஈர்ப்பு வந்திருச்சு…’’
“சாதாரணமா சிலம்பம் பயிற்சி பண்ணும்போது சேலை கட்டிக்கிறதில்லை. ஆனா, எந்த வேலையையும் சேலை கட்டிக்கிட்டுச் செய்ய முடியும்னு நிரூபிக்க நினைச்சேன். அதனால, கைத்தறிச் சேலை கட்டிக்கிட்டுப் பண்ணினேன். ஒரு சேலையை நெய்யறதுல நெசவாளரோட உழைப்பு எவ்வளவு முக்கியம்னு உணர்த்தவும்தான் சேலை உடுத்தி சிலம்ப நிகழ்ச்சி பண்ணினேன்’’ என்கிறார் இச்சிலம்ப அரசி!