ஆசிரியர் பதில்கள்

மே 01-15

கே :      ஜெயலலிதா இறந்துபோனதால் உடலுக்குத்தான் தண்டனை தரமுடியாது? சொத்தைக் கைப்பற்றவும் கூடாது என்பது அநீதியல்லவா? முறைகேடாய் சொத்து சேர்ப்பதை இது ஊக்குவிக்காதா?

                – அ.மணிமேகலை, வியாசர்பாடி

ப :          இது தவறான தீர்ப்பு. ஜெயலலிதா இறந்துபோனதால் தண்டனை சிறைவாசம்தான் அனுபவிக்க முடியாதே தவிர, அபராதம் வசூலிக்க சட்டப்படி எப்படி இயலாததாகும்?

                கீழே நீதிபதி குன்கா தந்த நீதிமன்றத் தீர்ப்பை உச்சநீதிமன்ற இரண்டு நீதிபதிகள் அப்படியே ஒப்புக்-கொண்டே தீர்ப்பளித்தனர். அத்தீர்ப்பில் அபராதம் 100 கோடி ரூபாயை எப்படி அரசு வசூலிக்க வேண்டும் என்பதை கணக்குப் போட்டு அத்தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது என்-பதை ஏனோ உச்சநீதிமன்றம் மறந்தது?  புரியவில்லை.

கே :      நீட் தேர்வை எதிர்ப்பதில் அ.இ.அ.தி.மு.க. அரசின் பொறுப்பற்ற நிலை தலைமுறைத் துரோகமில்லையா?

                – மு.சிவசாமி, திண்டிவனம்

ப :          நிச்சயமாக. அதற்குரிய ‘விலையை’ அவர்கள் (அ.தி.மு.க. அரசு) கொடுத்தாக வேண்டும்.

கே :      2022இல் விவசாயிகள் வருவாய் இரட்டிப்பாகும் என்று கூறும் மோடி, டில்லியில் போராடும் தமிழக விவசாயிகளைச் சந்திக்காமல் அலட்சியப்-படுத்துவது, அவர் தமிழர் மீது கொண்ட குரோத, விரோதத்தைத் தானே காட்டுகிறது?

                – மா.கோகிலா, காஞ்சி

ப :          தமிழ்நாடும் அலட்சியம்; தமிழ்நாட்டு விவசாயிகளும் அலட்சியம் _ பிரதமர் கண்ணுக்கு. தமிழ்நாட்டு மக்களுக்கு ரோஷம் வரவேண்டாமா?

கே :      தேர்தலைத் தள்ளிவைத்து மீண்டும் நடத்தும்போது பணப் பட்டுவாடா நடக்காதா? இடைப்பட்ட காலத்தில் எளிமையாக பட்டுவாடா செய்ய மாட்டார்களா? இது தீர்வா? சதியா?

                – வே.காளிதாஸ், மதுரை

ப :          இதை அன்றே அறிக்கையில் நாம் தெளிவுபடுத்திவிட்டோம்!

கே :      மத்திய அரசு வழங்கும் உயரிய விருதுகள், பெரும்பாலும் பார்ப்பனர்-களுக்கும், சாமியார்களுக்குமே போய்ச் சேருகின்றனவே ஏன்?

                – நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்

ப :          ஆட்சியே ‘’அவாளுக்குத்தான்’ _ என்னும்போது, விருதுகள் இப்படித்-தானே ‘விருதாக’ப் போகும்!

கே :      மாயாவதியும் முலாயம்சிங்கும் கூட்டணி முயற்சி, நாடு முழுதும் முற்போக்கு சக்திகள் மதச்சார்-பின்மையைக் காக்க _ சமூகநீதியின் அடிப்படையில் மாபெரும் கூட்டணி அமைக்க முடியும் என்பதன் அடையாளமா?

                – இல.சங்கத்தமிழன், செங்கை

ப :          நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் இணைந்து பா.ஜ.க. எதிர்ப்புக் கூட்டணி அல்லது தேர்தல் உடன்-பாடு கண்டுவிட்டால் நிச்சயம், மதவாத பருப்பு வேகாது!

கே :      அ.தி.முக. ஆட்சி கலையும் நிலையில், குடியரசுத் தலைவர் ஆட்சியில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு மாநில அரசின் அனுமதியை கவர்னர் ஆட்சி தரும் அபாயம் உண்டா?

                – ச.மகேஷ், திருச்சி

ப :          நிச்சயமாக! அதிலென்ன சந்தேகம்? பிறகு அதற்குரிய விலையை தேர்தலில் அறுவடையும் செய்வர்_ அது நிச்சயம்!

கே :      தமிழகத்தில் விரைவில் தேர்தல் வர வாய்ப்புள்ள நிலையில், பா.ஜ.க.வை துடைத்தெறிய, தி.மு.க.அணியை வலுவாக்க, ஊடகச் சதியை முறியடித்து, மக்களுக்குத் தெளிவு உண்டாக்க உரிய செயல்-திட்டங்-களை வகுத்து வழிகாட்டு-வீர்களா?

                – கோ.வெற்றிவீரன், நெல்லை.

ப :          விதைக்கப்பட்டுள்ளது செழிப்புடன் கிளம்பி விளைச்சலைத் தருவது உறுதி!

கே :      நீட் தேர்வால் பாதிக்கப்படும் கிராமப்புற மாணவர்களுக்கு மாநில அரசு இடஒதுக்கீடு செய்யலாம் என்ற மத்திய அமைச்சர் கருத்து சரியா?

                – வீ.பவித்திரா, சென்னை

ப :          தனியே கிராமப்புற மாணவர் ஒதுக்கீடு _ முன்பு தி.மு.க. அரசு செய்ததை, உயர்நீதிமன்றத் தீர்ப்புகள் ரத்து செய்துவிட்டனவே! என்பது அந்த அமைச்சருக்கும்கூட தெரியாதே! 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *