இந்த உணவுகளை மீண்டும் சூடேற்றி சாப்பிடலாமா?

மே 01-15

 சிக்கனில் புரோட்டீன் அதிகம் உள்ளது. அத்தகைய சிக்கனை 2_3 முறைக்கு மேல் சூடேற்றி உட்கொண்டால், அதன் காரணமாக பல்வேறு செரிமான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். எனவே சிக்கனை வாங்கிச் சமைத்தால், தேவையான அளவு மட்டும் உபயோகித்துவிட்டு, மீதமுள்ளதை ப்ரீசரில் வைத்துவிடுங்கள். தேவைப்படும்போது சமைத்துச் சாப்பிடுங்கள்.

பசலைக்கீரையில் இரும்புச்சத்தும், நைட்ரேட்டுகளும் வளமாக உள்ளன. இதனைப் பலமுறை சூடேற்றினால், அதில் உள்ள நைட்ரேட்டுகள், நைட்ரைட்டுகளாக மாற்றப்படுவதோடு, புற்றுநோயை உண்டாக்கும் கார்சினோஜென்களாகவும் மாறும். எனவே, இந்தக் கீரையைக் கொண்டு சமைத்த உணவுகளை பலமுறை சூடேற்றாதீர்கள்.

முட்டைகளில் புரோட்டீன் அதிகம் உள்ளது. மேலும் இதனை அளவுக்கு அதிகமாக வேகவைத்தும் சாப்பிடக்கூடாது. ஆய்வு ஒன்றில் முட்டையை பலமுறை சூடேற்றி உட்கொண்டால், அது செரிமான மண்டலத்தை கடுமையாக பாதிப்பதாக தெரிய வந்துள்ளது. எனவே, கவனமாக இருங்கள்.

காளான்களில் காம்ப்ளக்ஸ் புரோட்டீன்கள் உள்ளதால், இதனை வாங்கி ஒருமுறை சமைத்த பின் மீண்டும் சூடேற்றாதீர்கள். இதனால் தீவிரமான பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

உருளைக்கிழங்கை ஒருமுறை சமைத்த பின்னர், மீண்டும் சூடேற்றி உட்கொள்ளக்கூடாது. ஏனெனில் இதில் உள்ள ஒருசில சத்துக்களானது பலதுறை சூடேற்றும்போது நச்சு மிக்கவையாக மாறிவிடும். மேலும் உருளைக்கிழங்கைப் பொரித்துச் சாப்பிடுவதை தவிர்த்து, வேகவைத்து சாப்பிடுங்கள். இதனால் அதிலிருக்கும் முழு சத்தையும் பெற முடியும்.

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *