சாப்பிட்ட பிறகு இவற்றைச் செய்யாதீர்கள்!

மே 01-15

வயிறு நிறைய உணவு உட்கொண்ட பின்னர் நல்ல தூக்கம் வரும். இன்னும் சிலர் உணவு உட்கொண்ட பின்னர், அந்த உணவு செரிப்பதற்கு ஒருசில செயல்களில் ஈடுபடு-வார்கள். ஆனால், எப்போதுமே வயிறு நிறைய உணவை உட்கொண்ட பின்னர் ஒருசில செயல்களைச் செய்யக்கூடாது. அப்படிச் செய்தால், அது உடல்நலத்திற்குக் கேடு விளைவிக்கும்.

சரி, அது என்ன செயல்கள் என்று நீங்கள் கேட்பது எங்களுக்குப் புரிகிறது. இங்கு வயிறு நிறைய ஒருவர் உணவை உட்கொண்ட பின்னர் கட்டாயம் செய்யக்கூடாத 5 செயல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து இனிமேல் அந்த செயல்களைச் செய்யாதீர்கள்.

தூங்குவது

வயிறு நிறைய உணவு உட்கொண்ட பின் தூங்குவது என்பது கேடு விளைவிக்கும். எப்படியெனில், உணவை உட்கொண்ட உடனேயே தூங்கி எழுவதனால், உண்ட உணவு செரிக்காமல் அப்படியே வயிற்றில் இருக்கும். இப்படி உணவு செரிக்காமல் அப்படியே இருந்தால், அதனால் வயிறு உப்புசத்தை உணரக்கூடும்.

புகைபிடிப்பது

சில ஆண்கள் உணவை உட்கொண்ட உடனேயே சிகரெட் பிடிப்பார்கள். ஆனால் இப்படி உணவு உட்கொண்ட பின் 1 சிகரெட் பிடிப்பது என்பது 10 சிகரெட் பிடித்தற்குச் சமம். எனவே இப்பழக்கத்தைக் கைவிட வேண்டும்.

குளிப்பது

 

நீங்கள் குளிக்க நினைத்தால், உணவு உண்பதற்கு முன்பே குளித்து விடுங்கள். உணவை உண்ட பின் குறிப்பதால், செரிமான செயல்பாடு தாமதப்படும். மேலும் வயிற்றைச் சுற்றிக் கொண்டிருக்கும் இரத்தம் செரிமானத்திற்கு உதவாமல், உடலின் இதர பகுதிகளுக்குப் பாய ஆரம்பிக்கும்.

பழங்கள் சாப்பிடுவது

எப்போதும் உணவு உண்பதற்கு முன்தான் பழங்களைச் சாப்பிட வேண்டும். அதுவும் 1 மணிநேரத்திற்கு முன் சாப்பிட வேண்டும். இப்படி செய்தால்தான் பழங்கள் எளிதில் செரிமானமாகும். அதைவிட்டு உணவு உட்கொண்ட உடனேயே பழங்களை உட்கொண்டால், பழங்கள் எளிதில் செரிமானமாகாமல் அப்படியே தங்கிவிடும். எனவே உணவு உண்ட பின் பழங்களை உட்கொள்ள நினைத்தால், உணவு உண்டு 2 மணிநேரம் கழித்துச் சாப்பிடுங்கள்.

டீ குடிப்பது

 

சிலர் வயிறு நிறைய உணவு உட்கொண்ட பின், உண்ட உணவு சீக்கிரம் செரிமானமா-வதற்கு டீ குடிப்பார்கள். ஆனால் அப்படி டீ குடித்தால், டீயானது அமில நிலையை வெளியிட்டு, செரிமானத்திற்கு இடையூறை ஏற்படுத்தும். மேலும் உணவு உட்கொண்ட பின் டீ குடிப்பதனால், உடல் இரும்புச்சத்தை உறிஞ்சுவதில் இடையூறு ஏற்படும். எனவே இப்பழக்கத்தையும் கைவிடுங்கள்.

இறுக்கமான ஆடைகள் அணிவது

சிலர் உணவு உட்கொண்ட உடனே, ஆடை அலங்காரம் செய்து கொண்டு வெளியே புறப்பட்டுப் போவார்கள். அது தவறில்லை. ஆனால், இறுக்கமான பேன்ட் அல்லது இறுக்கமான பாவாடை, சுடிதார் அணிந்து-கொள்ளக் கூடாது. இதனால், வயிறு செரிமானமாக தாமதமாகி மிகவும் சிரமத்திற்குள்ளாகும்.

உறவு மேற்கொள்ளல்

எல்லாற்றையும்விட இதுதான் முக்கிய-மானது. இரவு உணவை வெகு முன்னதாகவே நாம் முடித்துக் கொள்ள வேண்டும். அதாவது, உணவு உண்டபின் சில நிமிடங்களில் படுக்கையில் உறவு கொள்ளக்கூடாது. ஏனெனில், நாம் சாப்பிட்ட உணவு ஜீரணமாக, இரைப்பை செயல்பட நிறைய ரத்தம் தேவைப்படுகிறது. நமது மூளை நிறைய ரத்தத்தினை இரைப் பைக்கு அனுப்பி, விரைவாக ஜீரணம் செய்விக்கும். அந்தச் சமயத்தில் நாம் உறவு கொள்ளும்போது, மூளை உறவு கொள்வதற்கு தேவையான ரத்தத்தினை அனுப்புவதற்கு முன்னுரிமை கொடுக்கும். இதனால் செரிமானம் தடைப்படும்.

எனவேதான், உண்பதற்கும் உறவு கொள்வதற்கும் இரண்டு மணிநேர இடைவெளி இருக்க வேண்டும். இதற்கு மட்டுமல்ல, அதிக கலோரி தேவைப்படும் எந்த வேலையையும் (ஓடுவது, உடற்பயிற்சி செய்வது) உணவு உண்ட உடனே செய்தல் கூடாது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *