Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

ஊக்கமளிக்கும் உண்மை இதழ்!

உடலும் உள்ளமும் மிகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உற்றாரும் பெற்றோரும் உறுதுணை புரியார். இந்த நிலையில் வாழவேண்டுமா? என்னும் எண்ணமும் அவர்தம் வாழ்க்கைப் பாதையில் அடக்கம். அப்படியொரு எண்ணத்தில் அடங்கிக் கிடவாமல், நிமிர்ந்து நடந்து இலக்கினை எட்டிப் பிடிப்பது இமாலயச் சாதனை ஆகும்!

பெங்களூரைச் சேர்ந்த ஷாலினி சரசுவதி என்பவர் வயிற்றில் சுமந்துகொண்டிருந்த குழந்தையையும் இரு கால்களையும் இழந்து, பெங்களூர் மாரத்தான் ஓடும் பெண்களில் மிகமிக முக்கியமானவராகத் திகழ்வது மிகப் பெரிய சாதனையாகும்! எப்போதும் சிரித்துக்கொண்டே இருப்பது அவரது உடன்பிறப்பு. அவரது படத்தையும், வாழ்கை வரலாற்றையும் ‘உண்மை’ இதழ் படம் பிடித்துக் காட்டி இருப்பது மனச் சோர்வாளர்களுக்கு ஓர் ஊக்க மருந்து. அவர்களைத் தட்டி எழுப்பி விடும் உண்மைக்கு உண்மையாகவே நன்றி!

உண்மையுள்ள,

கவிஞர் கோ.கலைவேந்தன், குத்தாலம்