பீகாரை பின்பற்றி பி.ஜே.பி [ஆர்.எஸ்.எஸ்] எதிரணி நாடெங்கும்வரும்!
கே : இன்றையச் சூழலுக்குப் பொருத்தமாக “வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு’’ என்ற தலைப்பிலான பிரச்சார இயக்கத்தை மீண்டும் கழகம் கையிலெடுக்குமா?
– ஈ.வெ.ரா.தமிழன், சீர்காழி
ப : இன்றையச் சூழலுக்கு ஏற்ப செய்ய வேண்டுமென்றால், ‘வஞ்சிக்கப்படும் இந்தியா’’ என்றே பிரச்சார இயக்கம் தேவை. அது முதலில் தமிழ்நாட்டி-லிருந்தே துவங்கும் என்பது உறுதி.
கே : காவி உடுத்தி, பூணூல் போட்டு, குங்குமம் அணிந்தால் மட்டும்தான் விவசாயிகள், மீனவர்கள் பிரச்சினை தீருமா? மோடி அரசு, எதனை எதிர்பார்க்கிறது?
– நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்
ப : இவை எல்லாம் விவசாயத்திற்கு அப்பாற்பட்டவை (பூனூல், காவி, குங்குமம்) என்கிறது மனுதர்மம். மனுதர்மப்படி நடக்கும் அரசு எப்படி விவசாயத்திற்கு முக்கிய முதலிட முன்னுரிமைத் தரும்? எதிர்பார்க்கக் கூடாதே!
கே : —–வீதியில் இறங்கி விவசாயிகள் போராடியும் மத்திய அரசு மவுனம் காப்பது மாற்றாந்தாய் மனப்பான்மையல்லவா?
– சீ.இலட்சுமிபதி, தாம்பரம்
ப : தமிழ்நாட்டு விவசாயிகள் என்றால் ஏதோ நாதியற்றவர்கள் என்ற அகம்பாவம் மத்திய ஆட்சியாளர்களுக்கு உள்ளதே!
கே : இஸ்லாமில் சுபி (ஷிuயீவீ) பிரிவினைச் சேர்ந்த மதத் தலைவர்கள் கூட்டாக மாட்டுக்கறிக்கு முழுமையான தடை விதித்தால் இந்து முஸ்லீம் பகை நீங்கிவிடும் என்று கூறியுள்ளது பற்றி தங்கள் கருத்து?
– கெ.நா.சாமி, சென்னை
ப : இதற்கு ஏதோ ஆழமான பின்னணி இருக்க வேண்டும்; அதைக் கண்டு-பிடிப்பது அவசியம்!
கே : பி.ஜே.பி(ஆர்.எஸ்.எஸ்.)க்கு சாதகமாக செய்திகளை ஊதிப் பெருக்கி, பொய்யுரை பரப்பும் கார்பரேட் ஊடகங்களை தோலுரிக்க வழி என்ன?
– இல.சங்கத்தமிழன், செங்கை
ப : அவைகளைப் பார்க்காமல் மூடிவைத்து ‘ஸிமீணீபீவீஸீரீ றிஷீஷீக்ஷீ’ என்று காட்டுவதே _ அதாவது புறக்கணிப்பதே சரியான முறை. தொலைக்காட்சிகள் பார்க்காமல் இருந்தால் பலருக்கு உடல்நலக் குறைவு வராது. உடல்நலம் பாதுகாக்கப்படும்.
கே : தமிழ்நாட்டின் பன்னீர்செல்வத்துக்கு அளிக்கப்பட்டுள்ள மத்திய அரசின் ‘சீ’ பிரிவு பாதுகாப்பு ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்பது போலத்தானே?
– அ.பாரிவள்ளல், திருச்சி
ப : எதிரிகளே இல்லாத மவுன சாமியார் போன்ற அவருக்காக ‘சீ’ பிரிவு பாதுகாப்பு? ஒய் –Why? – புரியாத புதிராக இருக்கிறது. மத்திய மோடி அரசின் செல்லப்பிள்ளை போலும் அவர்!
கே : மக்கள் நேசிக்கும் மாபெரும் தலைவர்களையெல்லாம் ஆர்.எஸ்.எஸ்_ம், பி.ஜே.பி.யும் ஆட்கொள்ளப் பார்க்கிறார்களே! திமிங்கில வேட்டையை தி.க. தீவிரப்படுத்துமா?
– செங்கதிர், மதுரை-1
ப : ஆம். அதுதான் RSS-ன் கைவந்த கலை. எதிர்த்து அழிக்க முடியாததை ஆரியம் அனைத்தே அழித்துவிடும். ஆரிய அணுகுமுறைத் தந்திரம் புத்தர் முதல் காந்தி, வள்ளுவர், இராஜேந்திர சோழன், அம்பேத்கர், அண்ணா, காமராசர் எல்லாம் வரிசைப்படுத்தப்பட்டு ஏமாளி-களாக தமிழர்களை ஆக்கவே இந்த வியூகம்!
கே : ஆர்.எஸ்.எஸ். ஊர்வலங்கள் நாடு முழுக்க அதிகரிக்கையில், அதற்கான பீகார் எதிர்வினையும் நாடு முழுக்க செயல்பட திட்டம் வகுப்பீர்களா?
– ஆர்.மணி, சென்னை-18
ப : நாம் செய்வதற்கு முன்பே பீகாரில் கால்கோள் விழா போடப்பட்டு விட்டதே! ஞிஷிஷி படை _ நித்திஷ்குமார் முயற்சி எல்லாம் அரும்பியுள்ளதே!
கே : தமிழர்களின் உணர்வுகளை அலட்சியப்படுத்தும் மோடி அரசிற்கு மூடு விழா ஒன்றே தீர்வாக இருக்குமென்பதால், தாங்கள் நாடு தழுவிய எதிரணியைக் கட்டியமைக்க வேண்டும் என்ற எங்கள் வேட்கையை விரைவில் தீர்ப்பீர்களா?
– வெற்றிமணி, கோவை-1
ப : மேலே உள்ள பதிலே இதற்கும் பொருந்தும்.