அரிய வாய்ப்புகள் பற்றி முழு விவரம்
சென்னையில் உள்ள கடல்சார் பல்கலைக்கழகம், மும்பையில் டிரெயினிங் ஷிப் _ சாணக்கியா, லால் பகதூர் சாஸ்திரி காலேஜ் ஆஃப் அட்வான்ஸ்ட் மேரிடைம் ஸ்டடீஸ் அண்ட் ரிசர்ச், மெரைன் என்ஜினீயரிங் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட், கொல்கத்தாவில் மெரைன் என்ஜினீயரிங் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட், இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஃபோர்ட் மேனேஜ்-மெண்ட், விசாகப்பட்டினத்தில் உள்ள ஷிப் டிசைன் அண்ட் ரிச்ர்ச் சென்டர், சென்னையில் உள்ள நேஷனல் மேரிடைம் அகாதெமி போன்றவை இந்திய கடல்சார் பல்கலைக்-கழகத்தில் உள்ளன.
பி.டெக். மெரைன் என்ஜினீயரிங், பி.டெக். (நேவல் ஆர்க்கிடெக்சர் அண்ட் ஒஸன் என்ஜினீயரிங்) ஆகிய நான்கு ஆண்டு படிப்புகள் உள்ளன. பிளஸ் டூ வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்திருக்க வேண்டும். பி.டெக். மெரைன் என்ஜினீயரிங் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்குத் திருமணம் ஆகி இருக்கக் கூடாது. விண்ணப்பிக்கும் மாணவர்கள், முன்னதாகவே பாஸ்போர்ட் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். மேரிடைம் சயின்ஸ், நாட்டிக்கல் சயின்ஸ், ஷிப் பில்டிங் அண்ட் ரிப்பேர் ஆகிய பாடப்பிரிவுகளில் 3 ஆண்டு பிஎஸ்.சி படிப்புகளும் உள்ளன.
இந்தப் படிப்புகளில் சேர விரும்புவோர் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் குறைந்தது 60சதவீத மதிப்பெண்களும் ஆங்கிலத்தில் 50 சதவீத மதிப்பெண்களும் எடுத்திருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு குறைந்தபட்ச மதிப்பெண்களில் 5 சதவீத சலுகை உண்டு.
பிபிஏ (லாஜிஸ்டிக்ஸ், ரிடெய்லிங் அண்ட் இ-_காமர்ஸ்) என்ற மூன்று ஆண்டு படிப்பு சென்னை மற்றும் கொச்சி மையங்களில் இந்த ஆண்டு முதல் தொடங்கப்பட உள்ளது. இதுதவிர டிப்ளமோ இன் நாட்டிக்கல் சயின்ஸ் (இதைப் படித்துவிட்டு பிஎஸ்சி அப்ளைடு நாட்டிக்கல் சயின்ஸ் படிக்கலாம்) படிப்பும் உள்ளது. பிளஸ் டூ வகுப்பில் எந்தப் பாடப்பிரிவை எடுத்துப் படித்தவர்களும் இப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்.
இது தவிர டிப்ளமோ இன் நாட்டிக்கல் சயின்ஸ் (இதைப் படித்துவிட்டு பிஎஸ்சி அப்ளைடு நாட்டிக்கல் சயின்ஸ் படிக்கலாம்) படிப்பும் உள்ளது. இந்த ஓராண்டு படிப்பில் பிளஸ் டூ தேர்வில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்தவர்கள் சேரலாம். இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளில் பிஎஸ்சி படித்தவர்களும் இயற்பியல் பாடத்துடன் பிஎஸ்சி எலெக்ட்ரானிக்-ஸ் பாடப்பிரிவை எடுத்துப் படித்தவர்களும் சேரலாம். இப்படிப்புகளில் சேர குறைந்தது 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிஇ., பிடெக். படிப்புகளில் 50 சதவீத மதிப்பெண் பெற்றவர்களும் இப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்.
இந்த அனைத்துப் படிப்புகளிலும் சேர விரும்பும் தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு குறைந்தபட்ச மதிப்பெண்களில் 5 சதவீத சலுகை உண்டு.
இளநிலைப் பட்டப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் வரும் ஆகஸ்ட் 1_ஆம் தேதி நிலவரப்படி, 17 வயதிலிருந்து 25 வயதுக்குள் இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு வயது வரம்பில் 5 ஆண்டுகள் விலக்கு உண்டு. அத்துடன் உடல் தகுதியும் நல்ல கண் பார்வையும் இருக்க வேண்டியது அவசியம்.
முதுநிலைப் பட்டப்படிப்புகள்: இந்தப் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ (ஃபோர்ட் அண்ட் ஷிப்பிங் மேனேஜ்மெண்ட்), எம்பிஏ (இன்ட்ர்நேஷனல் டிரான்ஸ்போர்ட்டேஷன் அண்ட் லாஜிஸ்டிக் மேனேஜ்மெண்ட்), எம்டெக் (நேவல் ஆர்க்கிடெக்ச்சர் அண்ட் ஓசன் என்ஜினீயரிங்), எம்டெக் (டிரெட்ஜிங் அண்ட் ஹார்பர் என்ஜினீயரிங்) ஆகிய முதுநிலைப் பட்டப் படிப்புகளையும் படிக்கலாம். அத்துடன் மெரைன் என்ஜினீயரிங் பாடப்பிரிவில் முதுநிலை டிப்ளமோ படிப்பும் உள்ளது.
எம்.டெக் (மெரைன் என்ஜினீயரிங் அண்ட் மேனேஜ்மெண்ட்), எம்எஸ்சி (கமர்சியல் ஷிப்பிங் அண்ட் லாஜிஸ்டிக்ஸ்) ஆகிய புதிய பட்டப்படிப்புகள் இந்த ஆண்டு முதல் தொடங்கப்பட உள்ளன. அத்துடன் எம்.எஸ். (பை ரிசர்ச்) படிப்பும் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. முதுநிலைப் பட்டப்படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கான தகுதி விவரங்களை இணைய தளத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
இந்தப் படிப்புகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்காக இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் பொது நுழைவுத் தேர்வுகளை நடத்துகிறது. அனைத்து இளநிலைப் பட்ட வகுப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு ஒரு பொது நுழைவுத் தேர்வும், எம்பிஏ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு ஒரு பொது நுழைவுத் தேர்வும், எம்.டெக். படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு ஒரு பொது நுழைவுத் தேர்வும் வருகிற மே 27_ஆம் தேதி ஆன்லைன் மூலம் நடத்தப்படும். டிப்ளமோ இன் நாட்டிக்கல் சயின்ஸ் படிக்க விரும்பும் மாணவர்களுக்கும் தனி நுழைவுத் தேர்வு உண்டு. சென்னை, கோவை உள்பட நாட்டில் உள்ள 35 முக்கிய நகரங்களில் இத்தேர்வை எழுதலாம்.
இளநிலை பட்டப்படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வில் இயற்பியல், வேதியியல், கணிதம், ஆங்கிலம், பொது அறிவு, திறனறிவு ஆகியவை குறித்து பிளஸ் டூ நிலையில் 200 கேள்விகள் அப்ஜெக்ட்டிவ் முறையில் கேட்கப்படும்.
எம்பிஏ படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வில் குவாண்டிடேட்டிவ் எபிலிட்டி, டேட்டா இன்டர்பிரட்டேஷன், வெர்பல் எபிலிட்டி, லாஜிக்கல் ரீசனிங் ஆகிய பாடப் பிரிவுகளிலிருந்து 120 கேள்விகள் கேட்கப்படும்.
எம்டெக் படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வில் ஆங்கிலம், பொது அறிவு, திறனறிவு, கணிதம், ஜெனரல் என்ஜினீயரிங் ஆகிய துறைகளிலிருந்து அப்ஜெக்டிவ் முறையில் 120 கேள்விகள் கேட்கப்படும்.
டிப்ளமோ இன் நாட்டிக்கல் சயின்ஸ் படிக்க விரும்பும் மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வில் ஆங்கிலம், பொது அறிவு, கம்ப்யூட்டர் சயின்ஸ், இயற்பியல், எலெக்ட்ரிசிட்டி, எலெக்ட்ரானிக்ஸ், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளிலிருந்து 200 கேள்விகள் கேட்கப்படும்.
இந்த நுழைவுத் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பொதுப் பிரிவு மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.1,000. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.700 நுழைவுத் தேர்வு குறித்த விவரங்கள், விண்ணப்பிக்கும் முறை குறித்து இணைய தளத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
இந்தப் பொது நுழைவுத் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி: 8.5.2017.
விவரங்களுக்கு: www.imu.edu.in