Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

புலியைப் புரட்டிய தமிழன் பூனைக்கு நடுங்குவதேன்?

 புலியைப் புரட்டிப் போட்ட தமிழன்
பூனைக் குறுக்கிட குலை நடுங்கினான்!
ஆரியர்க்குத் தமிழன்
அடிமையான சூட்சமம்
மூளையுள் நுழைத்த
மூடநம்பிக்கைகளே!
பேரினத் தமிழரை
சிற்றினப் பார்ப்பான்
ஆதிக்கம் செலுத்தும்
அடிப்படை இதுதான்!
பகுத்தறிவு வந்தால்,
பார்ப்பனச் சூழ்ச்சி
பொடிப்பொடியாகும்!
தன்மானம் வந்தால்
தவிடு பொடியாகும்
ஆரியர் ஆதிக்கம்!

– நேயன்