இடைநிலை ஆசிரியராகப் பணியாற்ற விரும்புவோர், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் முதல் தாள் தேர்வை எழுத வேண்டும். பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்ற விரும்புவோர். ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் இரண்டாம் தாள் தேர்வை எழுத வேண்டும். இந்த இரண்டு ஆசிரியர் பணிகளிலும் பணியாற்ற விரும்புவோர் இந்த இரண்டு தேர்வுகளையும் எழுத வேண்டும்.
முதல் தாள் தேர்வை எழுத விரும்புவோர் பிளஸ் டூ படித்துவிட்டு (10, +2), ஆசிரியர் கல்வி டிப்ளமோ அல்லது தொடக்கக் கல்வி டிப்ளமோ படித்து முடித்திருக்க வேண்டும். இந்த டிப்ளமோ படிப்புகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் முதல் தாள் தேர்வை எழுத முடியாது.
இரண்டாம் தாளை எழுத விரும்புவோர் பல்கலைக்கழகத்திலிருந்து ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்து முடித்திருக்க வேண்டும். அதாவது, தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல் ஆகிய பாடங்களை எடுத்து பட்டப்படிப்பைப் படித்திருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான பாடங்களை எடுத்துப் படித்திருக்க வேண்டும். அத்துடன் பிஎட் படித்திருக்க வேண்டும். பி.லிட். தமிழ் படித்தவர்கள் பி.எட். அல்லது டி.டி.எட். அல்லது டி.பி.டி. படித்திருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். தற்போது பிஎட் படிப்பில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருப்பவர்களும் இத்தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்.
ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் தாளில் குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும், தமிழ், ஆங்கிலம், கணிதம், சூழ்நிலையியல் மற்றும் அறிவியல் அகிய அய்ந்து பாடப் பிரிவுகளிலிருந்து அப்ஜெக்டிவ் முறையில் தலா 30 கேள்விகள் வீதம் 150 கேள்விகள் கேட்கப்படும். இந்த மூன்று மணி நேரத் தேர்வுக்கு மொத்தம் 150 மதிப்பெண்கள்.
ஆசிரியர் தகுதித் தேர்வின் இரண்டாம் தாளில் குழந்தை மேம்பாடும், கற்பித்தல் முறைகளும், தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடங்கள் அனைத்து ஆசிரியர்களுக்கும் பொதுவானவை. கணிதம் மற்றும் அறிவியல் பாட ஆசிரியர்-களாக விரும்புகிறவர்கள் கணிதம் மற்றும் அறிவியல் பாட வினாக்களைத் தேர்வு செய்ய வேண்டும். சமூக அறிவியல் ஆசிரியராக விரும்புகிறவர்கள் சமூக அறிவியல் கேள்வி-களைத் தேர்வு செய்ய வேண்டும். இரண்டாம் தாளில் கேட்கப்படும் 150 கேள்விகளுக்கு விடையளிக்க மூன்று மணி நேரம் வழங்கப்-படும். மொத்த மதிப்பெண்கள் 150.
ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதுபவர்களுக்கான விண்ணப்பங்கள், மார்ச் 6ஆம் தேதி முதல் மார்ச் 22ஆம் தேதி வரை, விண்ணப்பங்கள் வழங்கப்படும். மாவட்ட கல்வி அலுவலகங்-களிலும், குறிப்பிட்ட சில மேல்நிலைப் பள்ளிகளிலும் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பம் வழங்கப்படும் மய்யங்களின் விவரங்கள், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்-கின்றன. ஒரு விண்ணப்பத்தின் விலை ரூ.50. இரண்டு தேர்வுகளை எழுத விரும்புவோர் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் ரூ.500. தாழ்த்தப்-பட்ட மற்றும் பழங்குடியினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.225. கட்டணத்தை டிமாண்ட் டிராப்ட் மூலம் செலுத்த வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட கல்வி அலுவலகங்களிலும், குறிப்பிட்ட சில பள்ளிகளிலும் நேரடியாக சமர்ப்பிக்கலாம். ஒரு மாவட்டத்தில் விண்ணப்பம் பெற்றிருந்தாலும் மற்றொரு மாவட்டத்தில் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அளிக்கலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க கடைசி தேதி: 23.3.2017
தேர்வுத் தேதிகள்:
முதல் தாள்: 29.4.2017
காலை 10 முதல் பகல் 1 மணி வரை
இரண்டாம் தாள்: 30.4.2017
காலை 10 முதல் பகல் 1 மணி வரை
விவரங்களுக்கு: trb.tn.nic.in