நீரிழிவு வயிற்றுப் புண், தோழ்நோய் நீக்கும் கோவைக்காய்

மார்ச் 16-31

காய்கறிக்கடைகளில் விலை மலிவாகக் கிடைப்பது கோவைக்காய். கோவைக்காயில் நிறைய மருத்துவக் குணங்கள் உள்ளன. கொடி வகையைச் சேர்ந்த கோவையின் காய், இலை, தண்டு, கிழங்கு என முழுத் தாவரமும் மருத்துவக் குணம் கொண்டது. கோவைக்காய் நீரிழிவு பிரச்சினையில் இருந்து நிவாரணம் தரக்கூடியது என்பதால், பச்சடியாகவோ கூட்டு, பொரியலாகவோ, சாம்பராகவோ செய்து சாப்பிடலாம். சிறு துண்டுகளாக நறுக்கிய கோவைக்காயுடன் மோர், மிளகுத்தூள், சீரகத்தூள், இஞ்சி, தேவையான அளவு உப்பு சேர்த்து சாப்பிடலாம். வாய்ப்புண், வயிற்றுப்புண் இருப்பவர்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் கோவைக்காய் பச்சடி செய்து சாப்பிடுவதன்மூலம் குணம் பெறலாம். அல்லது, ஒரேயொரு கோவைக்காய் எடுத்து மோருடன் சேர்த்து அரைத்துச் சாப்பிடுவதன்மூலமும் மேலே சொன்ன பலன்களைப் பெறலாம். கோவைக்காய் சாப்பிடுவதால் கரப்பான் புண், ஜலதோஷம் போன்றவற்றில் இருந்து நிவாரணம் பெறலாம். சுவையின்மை தீர கோவைக்காயை நறுக்கிக் காயவைத்து, வற்றலாக்கி வைத்துக்கொண்டு நெய்யில் வறுத்து சாப்பிட வேண்டும் அல்லது, கோவைக்காயை ஊறுகாய் செய்தும் சாப்பிட்டு வரலாம்.

கோவை இலைச்சாறு 20 மில்லி அளவு எடுத்துக் கொண்டு அதே அளவு நல்லெண்ணெய் சேர்த்து ஒரு டம்ளர் நீராகாரத்துடன் கலக்கி காலையில் மட்டும் குடிக்க வேண்டும். இப்படித் தொடர்ந்து ஏழு நாட்கள் சாப்பிட்டு வந்தால், தீராத வெட்டை நோய்கள் குணமாகும். கோவை இலைச்சாற்றை சம அளவு தேங்காய் எண்ணெயுடன் சேர்த்துக் கொதிக்க வைத்து, வடிகட்டி வைத்துக்கொண்டு, மேல் பூச்சாகப் பூச வேண்டும். மேலும் ஒரு பிடி இலையை ஒன்றிரண்டாக நசுக்கி இரண்டு டமளர் நீரில் கலந்து பாதியாகக் காய்ச்சி, வடிகட்டிக் குடிக்க வேண்டும். இப்படி ஏழு நாட்களுக்கு காலை, மாலை வேளைகளில் செய்து வர படை, சொரி, சிரங்கு போன்றவை குணமாகும். கோவை இலைச்சாற்றுடன் வெண்ணெய் சேர்த்து புண், சொரி, சிரங்கு உள்ள இடங்களில் பூசினாலும் குணம் கிடைக்கும். கோவை இலைச்சாற்றை காலை, மாலை 50 மில்லி அளவு நான்கு நாட்கள் குடித்து வந்தால் சீதபேதி குணமாகும்.

கோவைக் கொடியின் வேர்க்கிழக்குச் சாற்றை 10 மில்லி அளவு காலை வேளைகளில் மட்டும் குடித்து வந்தால் ஆஸ்துமா குணமாகும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *