மனித நீதிக்கு எதிரான மனுநீதியைக் கொளுத்தி மாணவர்களுக்கு எழுச்சியூட்டும் டில்லி பல்கலை மாணவர்கள்!

மார்ச் 16-31

டில்லி பல்கலைக் கழக மாணவர்கள் கொளுத்திய (8.3.2016) மனுதர்ம வாசகங்களைக் காணீர்!!
டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் தீவைத்துக் கொளுத்திய மனுதர்ம நூலின் 40 விதிகள்:

1.  ‘‘எந்தப் பருவத்தினளாயினும், தனது இல்லத் திலே கூட எந்தப் பெண்ணும் தன்னிச்சைப்படி எச்செயலும் இயற்றலாகாது’’ (10 : 147)

2. ‘‘இளமையில் தகப்பன், பருவத்தில் கணவன், விதவையான பின் மக்கள் இவர்கள் காவலிலன்றிப் பெண்கள் தன்னிச்சையாக இயங்கலாகாது’’ (10 : 148).

3. ‘‘இழி நடத்தை, பரத்தையர் நட்பு, நற்குண மின்மை இவற்றையுடையவனாயினும், கற்பினளான பெண் தன் கணவனைத் தெய்வமாகப் பேணுக’’ (10 : 154).

4. ‘‘அன்றாட வேள்விகள் அய்ந்தும், உண்ணாமை, நோன்பு முதலியனவும் மாதர்க்குத் தனிப்பட யாதுமிலது. கணவனைப் பேணுதலே அவர்க்கு மறுமையின்பிற்குரிய நல்லாறு’’ (9 : 14).

5. ‘‘நிறை பிறழ்தலும், நிலையில் மனமும், நண் பின்மையும், மாதர் தம் இயல்பாவதால், கணவனால் நன்கு போற்றிப் புரக்கப்படும் போதும், அவர்கள் கணவரின் காவலை விரும்புவதில்லை’’ (9 : 15).

6. ‘‘இவ்வித இயல்புகள் மாதர்க்குப் பிறப்புடன் வருவதாகையால் மாதர் ஒழுக்கம் கேடுறாமற் பேணும் முயற்சியில் ஆடவர் கவனமாக இருக்க வேண்டியது’’ (9 : 17).

7. ‘‘படுக்கை, ஆசனம், அழகு செய்தல், காமம், சினம், பொய், துரோக எண்ணம் இவற்றை மாதரின் பொருட்டே மனு படைத்தார்’’ (9 : 17).

8. ‘‘மாதர்க்குப் பிறவியைத் தூய்மை யாக்கும் சமஸ்காரங்கள் மந்திரபூர்வமாகச் செய்வித்தல் யாதுமின்று. இவர்களுக்கு வெள்ளையுள்ளமும் இல்லை. பாவம் நீக்கும் மந்திர உபதேசமும் கிடையாது. எனவே பொய்யைப்போல் மாசு வடிவினராக மாதர் இயன்றிருக்கின்றனர்’’ (9: 18).

9.  ‘‘பிள்ளை இல்லாமல் அந்தக் குலம் நசிக்கிறதாக இருந்தால் அப்பேது ஸ்திரீ தன் கணவன், மாமனார் முதலானவர்களின் உத்திரவு பெற்றுக்கொண்டு தன் மைத்துனன் அல்லது தன் கணவனுக்கு ஏழு தலைமுறைக்குட்பட்ட பங்காளி இவர்களோடு மேற்சொல்லுகிறபடி புணர்ந்து குலத்திற்குத் தக்கதான ஒரு பிள்ளையைப் பெற்றுக் கொள்ளலாம்.’’ (அத்.9.சு.59)

10.  ‘‘கணவன் துராசாரமுள்ளவனாக இருந்தாலும் அந்நிய ஸ்திரீலோலனா யிருந்தாலும், நற்குணம் இல்லாதவனாக இருந்தாலும் பதிவிரதையான ஸ்திரீயானவள் அவனைத் தெய்வத்தைப்போல பூசிக்க வேண்டியது.’’ ( அத் 5. சு.154)

11. ‘‘பால்யத்தில் தகப்பன் ஆக்ஞையிலும், யௌவனத்தில் கணவன் ஆக்ஞையிலும், கணவன் இறந்த பின்பு பிள்ளைகள் ஆக்ஞையிலும் இருக்க வேண்டியதல்லாமல் ஸ்திரீகள் தன் சுவாதீனமாக ஒருபோதும் இருக்கக் கூடாது.’’ (அத் 5. சு.148)

12. ‘‘பெண்களையும், பிராமணரல்லாதாரையும் கொல்லுதல் பாதகமாகாது.’’ (அத். 11 சு.65)

13. ‘‘தனக்கு பொக்கிஷநாசம் முதலிய மேலான ஆபத்து வந்தாலும் அரசன் அதிகத் தீர்வையை ஏற்படுத்தி பிராமணர்களுக்குக் கோபம் வரச் செய்யக் கூடாது. அவர்கள் கோபித்தால் இவன் சேனையோடும். வாகனத்தோடும் அழிந்து போகும்படி சபிப்பார்கள்.’’ (அத் 9. சு.343)

14. ‘‘வைதீகமாக இருந்தாலும், லவுகீகமாக இருந்தாலும் மூடனாயிருந்தாலும் பிராமணனே மேலான தெய்வம்.’’ (அத். 9. சு.317)

15. ‘‘ஒளியுள்ள அக்கினியானது மயானத்தில் பிணத்தைத் தகித்தாலும் நிந்தனை இல்லாமல் எப்படி ஹோமத்தினால் விர்த்தி செய்யப்படு கின்றதோ அப்படியே பிராமணன் கெட்ட காரியத்தில் ஈடுபட்டிருந்தாலும் பூஜிக்கத்தக்கவன்; மேலானவன்.

அரசன் பூமியிலிருந்து புதையல் கண்டெடுத்தால் அதில் பாதியை பிராமணர்-களுக்கு தானஞ்செய்து மற்றதை தன் பொக்கிஷத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டியது.’’ (அத். 8. சு.38)

16. ‘‘பிராமணனுக்குத் தலையை முண்டிதஞ் செய்வது (மொட்டை அடிப்பது) கொலைத் தண்டனையாகும். மற்ற வருணத்தாருக்கு கொலைத் தண்டனையுண்டு.’’ (அத். 8. சு.379)

17. ‘‘சர்ப்பம், பிராமணன் இளைத்திருந்தாலும் அவனை அவமானம் செய்யக்கூடாது.’’ (அத். 4. சு.135-6)

18. ‘‘பிராமணன் கொடிய குற்றம் செய்தவன் ஆயினும் அவனைக் கொலை செய்யாமலும் துன்பப்படுத்தாமலும் அவன் பொருளைக் கொடுத்து அயலூருக்கு அனுப்பவேண்டும்.’’ (அத் 8. சு.380)

19. ‘‘பிராமணனுக்கு மங்களத்தையும், சத்திரியனுக்குப் பலத்தையும், வைசியனுக்குப் பொருளையும், சூத்திரனுக்குத் தாழ்வையும் காட்டுகிறதான பெயரை இடவேண்டியது. சூத்திரனுக்குத் தாஸன் என்ற தொடர் பெயராக இடவேண்டியது.’’ (அத் 2. சு.31-32)

20. ‘‘பிராமணனுக்கு பஞ்சு நூலாலூம், சத்ரியனுக்கு சணப்ப நூலாலும் வைசியனுக்கு வெள்ளாட்டின் மயிராலும் மூன்று வடமாகத் தோளில் பூணூல் தரிக்க வேண்டியது.’’ (அத்2. சு.44)
21. ‘‘பன்றியின் மோத்தலினாலும், கோழிச் சிறகின் காற்றினாலும், நாயின் பார்வையினாலும், சூத்திரன் தொடுதலாலும் பதார்த்தம் அசுத்தமாகின்றது. சிரார்த்த உணவு சூத்திரனுக்குக் கூடாது.’’ (அத்3.சு,241)

22. ‘‘எவன் சிரார்த்தஞ்செய்து அன்னம் முதலியவற்றை சூத்திரனுக்குப் போடுகிறானே அந்த மூடன் கால சூத்திரமென்னும் நரகத்தில் தலைகீழாக விழுகிறான்.’’ (அத். 3. சு. 249)

23. ‘‘இவர்களுக்கு நேரே உணவு பரிமாறாமல், ஏவலாளரைக் கொண்டு, உடைந்த சட்டியில், அன்னமிட்டு வைக்கவேண்டும். இவர்கள் ஊரிலும், நகரிலும் இரவில் திரியக்கூடாது’’ (10 : 54).

24. ‘‘அந்த சிரார்த்தத்தில் (சூத்திரனுக்கு தானஞ்செய்யப்பட்ட சிரார்த்தத்தில்) புசித்த பிராமணன், தன் மனைவி புணர்ச்சி யினாசையால் வந்தபோதிலும், அவளுடன் அன்று சம்போகஞ் செய்தால் அவளுடைய மலத்தில் அந்த மாதம் முழுவதும் அவனுடைய பிதுர்க்கள் மூழ்குகிறார்கள்.’’ (அத்.3. சு.250)

25. ‘‘சூத்திரன் என்பவன் ஏழு வகைப்படும்:

1.யுத்தத்தில் புறங்காட்டி ஓடுபவன். 2. யுத்தத்தில் கைதியாகப் பிடிக்கப்பட்டவன். 3.பிராமண னிடத்தில் பக்தியினால் ஊழியஞ் செய்கிறவன். 4. விபச்சாரி மகன். 5. விலைக்கு வாங்கப்பட்டவன். 6. ஒருவனால் கொடுக்கப்பட்டவன். 7. தலைமுறை தலைமுறையாக ஊழியம் செய்கிறவன்.’’ (அத் 8. சு. 415)

26. ‘‘சூத்திரன் சுவர்க்கத்திற்காவது, ஜீவனத்திற்காவது அல்லது இரண்டிற்குமாவது, பிராமணனையே தொழவேண்டும். இவன் பிராமணனை அண்டிய சூத்திரன் என்று ஒருவனுக்குப் பெயர் வந்தால் அதே அவனுக்குப் பாக்கியம்.’’ (அத். 10. சு .122)

27.‘‘பிராமணர்களை வழிபடாததனாலும் உபநயனம் முதலிய சடங்குகள் செய்து கொள்ளாததனாலும் சத்திரியர் வரவர சூத்திரத் தன்மை அடைந்தார்கள்.’’ (அத்10. சு.43)

28. பிராமணன் உண்டு மிகுந்த உணவு(எச்சில்) உடுத்திக் கிழிந்த ஆடை, சாரமற்ற தானியம்(பதர்) இவைகளைப் பிராமணன், சூத்திரன் ஜீவனத்திற்குக் கொடுக்க வேண்டும். (அத்.10.சு.,125)

29. ‘‘சூத்திரனைக் கூலி கொடுத்தோ, கொடாமலோ பிராமணர் வேலை வாங்கலாம், பிராமணனுக்குத் தொண்டு செய்யவே சூத்திரனைப் பிரம்மா படைத்திருக்கிறார்.’’ (அத்.8. சு 413)

31. ‘‘சூத்திரன், பிராமணனுக்குப் பணிவிடை செய்யும்படி அரசன் செல்ல வேண்டியது, அப்படிச் செய்யாவிட்டால் அரசர்கள் தண்டித்து அங்ஙனம் செய்யச் சொல்ல வேண்டியது.’’ (அத். 8. சு. 235)

32. ‘‘சூத்திரன் மற்ற மூன்று வருணத்தாருக்கும் பொறாமையின்றி பணி செய்வதை முக்கியமான தர்மமாக ஏற்படுத்தினார் ; இதனால் அவனுக்குத் தானம் முதலியவையும் உண்டென்று தோன்றுகிறது’.’ (அத் 1. சு.91)

33. ‘‘யாகம் செய்யாதவனுடைய (சூத்திரன்) பொருள் அசுரர் பொருளாகும். ஆகையால் அதைக் கொள்ளையிடுவது தர்மமாகும்.’’ (அத். 7. சு.24)

34. ‘‘செல்வம் உள்ள சூத்திரன் வீட்டில் சிறிதும் தயங்காமலும், கேளாமலும் பலாத்காரத்தினாலும் கொள்ளையிடலாம்.’’ (அத்.11. சு.13)

35.‘‘சூத்திரன் பொருள் சம்பாதிக்கத்தக்க வனாயிருந்தாலும், குடும்பத்திற்கு உபயோகமானதைவிட அதிகப் பொருளை சம்பாதிக்கக் கூடாது. அப்படிச் சம்பாதித்தால் தன்னால் உபசரிக்கத்தக்க பிராமணனையே இம்சை செய்யவேண்டி வரும்.’’ (அத்.10.சு.129)

36. ‘‘சூத்திரன், பிராமணர்களைத் திட்டினால் அவன் நாக்கை அறுக்க வேண்டும்.’’ (அத்.8.சு.270)

37. ‘‘சூத்திரன் பிராமணன் பெயர், சாதி இவைகளைச் சொல்லித் திட்டினால் அவன் வாயில் பத்து அங்குல நீளமுள்ள இரும்புக் கம்பியைக் காய்ச்சி எரிய எரிய வைக்கவேண்டும்.’’ (அத்.8.சு.271)

38. ‘‘சூத்திரன் பிராமணனைப் பார்த்து, நீர் இதைச் செய்ய வேண்டும் என்று உபதேசம் செய்தால் அவன் வாயிலும், காதிலும் எண்ணெய்யைக் காய்ச்சி ஊற்ற வேண்டும்.’’ (அத்.8. சு.272)

39. ‘‘சூத்திரன் பிராமணனுடன் ஒரு ஆசனத்தில் உட்கார்ந்தால், இடுப்பில் சூடுபோட வேண்டும்; அல்லது ஊரைவிட்டுத் துரத்த வேண்டும்.’’ (அத்.8.சு.281)

40. ‘‘சூத்திரன் பிராமணனின் எந்தெந்த உறுப்புகளை கையினாலும் தடியினாலும் தாக்குகிறானோ, அந்தந்த உறுப்புகளை நறுக்க வேண்டும். அடித்தால் கையையும், உதைத்தால் காலையும் வெட்டிவிட வேண்டும்.’’ (மனு. அத் 9. சு.280) 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *