– மஞ்சை வசந்தன்
கேடியாகத் தன் வாழ்வைத் தொடங்கி, இன்று கோடிகளில் புரளும் ஜக்கி வாசுதேவ் என்ற சுரண்டல் சாமியார் சட்டத்துக்கு எதிராய் அமைத்துள்ள சிவன் சிலை(தலை)யைத் திறக்க இந்தியப் பிரதமர் மோடி வரலாமா? என்று போராட்டக்காரர்கள் கேட்டால், அதைத் திசை திருப்பும் வகையில், இந்து மத விழாவிற்கு மோடி வருவதில் என்ன தவறு என்று திரிபுவாதம் செய்கிறது பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். மதவெறிக் கூட்டம்!
பிரதமர் வரக்கூடாது என்பதேன்?
சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் கோவையில் உள்ள “ப்ரூபாண்ட் ரோடு’’ மேம்பாலத்தின் கீழ்ப்புரம் குதிரை வண்டிகள் நிறுத்தும் இடத்தில் சமூக விரோதிகளுக்கு கள்ளத்தனமாகக் கஞ்சா விற்பனை செய்த ஒரு கயவாளிதான் இந்த ஜக்கி வாசுதேவ். இந்த ஆளுக்கு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு உண்டு.
இந்தக் கேடிக்கு ரிச்சர்டு என்ற ரவுடி நெருங்கிய நண்பன். அவன் எல்லா வகையிலும் இந்த ஆளுக்கு உதவியாய் இருந்தான். இந்த நிலையில் ரிச்சர்டுக்கும் ஜக்கிக்கும் நடந்த வியாபார மோதலில் அந்தப் பெண் மாயமாக, ரிச்சர்டு கொலை செய்யப்பட்டான்.
அது மட்டுமல்லாது ஜக்கி தனது மனைவியையும் கொலை செய்ததால். அது சார்ந்த வழக்கு நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. மத்தியப் புலனாய்வுத் துறையால் தேடப்படும் குற்றவாளியாகவும் இந்த ஜக்கி அறிவிக்கப்பட்டதாகத் தகவல் உள்ளது.
சட்டவிரோதமான ஈஷா மய்யம்
இப்படிப்பட்ட கிரிமினல் பேர்வழியான ஜக்கி வாசுதேவால், கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இக்கரை பொல்லுவபட்டி என்னும் ஊராட்சிக்கு உட்பட்ட வனப்பகுதியைச் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து உருவாக்கப் பட்டதுதான் ஈஷா மய்யம்!.
1994இல் 2913.34 சதுர அடி கட்டடங்களை மட்டுமே கட்டியிருந்த நிலையில், தற்போது 4 இலட்சத்து 27 ஆயிரத்து 700 சதுர அடிக்குக் கட்டடங்களும், பூங்காக்களும், விளையாட்டுத் திடல்களும், யோக மண்டபங்களும், வாகனங்கள் நிறுத்தும் இடங்களும் இந்த நபரால் அமைக்கப்பட்டுள்ளன.
வனப்பகுதியில் கட்டடங்களைக் கட்டுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. மலைத்தளப் பாதுகாப்புக் குழு (பிவீறீறீ கிக்ஷீமீணீ சிஷீஸீsமீக்ஷீஸ்ணீtவீஷீஸீ கிutலீஷீக்ஷீவீtஹ்) என்ற அமைப்பின் ஒப்புதலைப் பெறவேண்டும். குழுவில் வனத்துறை அதிகாரிகள், ஊராட்சி அலுவலர்கள், மாவட்ட ஆட்சியாளர் மற்றும் பல்துறை அலுவலர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
இக்குழுவின் ஒப்புதல் பெற்று பின்னர் வனத்துறையின் ஒப்புதல்பெற்றே கட்டடங்கள் கட்டவேண்டும். ஆனால், உள்ளூர் ஊராட்சி மன்ற ஒப்புதலை மட்டும் பெற்று, மேற்கூறிய அமைப்புகளின் ஒப்புதல்களைப் பெறாமலே கட்டடங்கள் போன்றவற்றை அமைத்துள்ளது இந்த மோசடிக் கூட்டம்.
இந்த கட்டடங்களாலும் ஆக்கிமிரப்பாலும் யானைகளின் வழித்தடங்கள் தடுக்கப் பட்டுள்ளன. இதனால், யானைகள் தடம் மாறி, மக்கள் வாழும் இடங்களில் புகுந்து மக்களுக்கு அளவற்ற இன்னல்களைத் தருகின்றன. யானைகளால் தாக்கப்பட்டு மனிதர்கள் இறப்பது இந்த ஈஷா மய்யம் வந்த பின்னர்தான் அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து, உச்சநீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டு (டி.என்.கோதாவர்மன் திருமுல்பார்க் எதிர் இந்திய அரசு 20123ஷி.சிசி.277) உச்சநீதிமன்றம் ஈஷா மய்யத்திற்குக் கடுங் கண்டனம் தெரிவித்தது.
ஆட்சியாளர்களின் ஆதரவால் அநியாயங்கள் அதிகரிப்பு
2012ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் தேதி, வனத்துறை ஆளுநர், ஈஷா மய்யத்தின் ஆக்கிரமிப்பால், யானைகளின் வழித்தடங்கள் பாதிப்பிற்குள்ளாவதைச் சுட்டி, கண்டித்த நிலையில், அதே ஆண்டில் மாவட்ட வனத்துறை அதிகாரி திருநாவுக்கரசு ஈஷா மய்ய கட்டடங்களுக்கு அனுமதி கூடாது என்று அதிகாரப்பூர்வமாய் தெரிவித்தும் ஆட்சி யாளர்கள் ஆதரவால் அவை பயனற்றுப் போய், ஜக்கியின் சமூக விரோதச் செயல்கள் பெருகின.
2012இல் தமிழ்நாட்டில் 14 மணிநேர மின்வெட்டு அமலில் இருந்தபோது, ஈஷா மய்யத்திற்கு மட்டும் 24 மணிநேரமும் தடையில்லா மின்சாரம் தமிழக அரசால் வழங்கப்பட்டது. சமூக ஆர்வலர்கள் இதை எதிர்த்துப் போராட்டம் நடத்தினர்.
இங்கு யோகா நடத்துவதோடு நில்லாமல் வணிக ரீதியில் பள்ளிகளும் நடத்தப்படுகின்றன. இங்கு சேர்க்கப்படும் குழந்தைகளுக்கு 5 லட்சம், 7 லட்சம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மகேந்திரன் என்பவர் தன் ஒரு மகனுக்கு ரூ.5 லட்சமும், இன்னொரு மகனுக்கு 7 லட்சம் ரூபாயும் கட்டணமாகச் செலுத்தியுள்ளார். இவ்வளவு செலவிட்டும், அங்கு பிள்ளைகளுக்கு எதிராகச் செய்யப்படும் அடக்குமுறை, ஒடுக்குமுறை, கடும் தண்டனைகளால் பிள்ளைகள் மன நோயாளிகளாக மாறியுள்ளனர். தன் பிள்ளைகளைப் போல பலரும் கொடுமைக்குள்ளாகியுள்ளதாக அவர் குழந்தைகளை மீட்க, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்குத் தொடர்ந்தார்.
கோவை வடவள்ளிப் பகுதியைச் சேர்ந்த காமராஜ் என்பவர், ஜக்கி, தன் இரு மகள்களைக் கட்டாயப்படுத்தி, சாமியார்களாக்கி விட்டதாகவும், அவர்களை மீட்டுத்தர வேண்டும் என்றும் கோவை மாவட்ட காவல்துறைக்குப் புகார் செய்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். பின்னணி: இந்து மதத்தையும், சமஸ்கிருதத்தையும் பரப்புவதற்காக, இந்த ஜக்கி என்ற கிரிமினல் குற்றவாளியுடன் ஆர்.எஸ்.எஸ்.ம், இந்து மதவெறி அமைப்புகளும் கைகோர்த்து செயல்படுகின்றன. அதனால்தான் இவ்வளவு பெரிய கிரிமினல் வேலைகளை இந்த ஜக்கி செய்தும் அந்த ஆள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த ஆள் மீது பல பொதுநல வழக்குகள், கொலை, மோசடி வழக்குகள் இருந்தும், எந்த நடிவடிக்கையும் இல்லாததற்கு ஆர்.எஸ்.எஸ்.ம், பி.ஜே.பி. மத்திய அரசுமே காரணம்.
தன் மகளுக்கு மட்டும் திருமணம்!
ஊருக்கெல்லாம் சன்னியாசத்தை உபதேசித்து, இளம் பெண்களையும், ஆண்களையும் சாமியாராக்கும் இந்தக் கேடிச் சாமியார் தன் மகளை மட்டும் சாமியாராக ஆக்காமல், அவருக்குத் திருமணம் செய்து வைத்துள்ளது பெரும் மோசடி! (தன் மகளைக் கன்னிகாதானம் செய்யும் காட்சியை படத்தில் காண்க)
தொடரும் மோசடிகள்:
ஒரு பக்கம் வனப்பகுதியை வளைத்துப் போட்டுக்கொண்டே, மற்றொரு பக்கம் மக்களின் நிலங்களையும் பினாமிகள் மூலம் வளைத்துக் கொண்டுள்ளது இந்த மய்யம். தற்போது ஈஷா மய்யத்தின் பெயரில் 200 ஏக்கர் நிலமும், பினாமிகளின் பெயரில் 270 ஏக்கர் நிலமும் உள்ளன. ஈஷா மய்யம் உள்ள பகுதியில் இந்த ஆளுக்குத் தெரியாமல் யாரும் நிலத்தை விற்கவோ வாங்கவோ முடியாது.
ஈஷா மய்யத்தின் பெயரில் பதிவு செய்யப்படும் நிலங்கள் அனைத்தும் தொண்டாமுத்தூர் இராசேந்திரன் என்பவர் சாட்சிக் கையெழுத்து போட்டிருப்பார். இவர்தான் பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்படும் நிலங்களின் விவரத்தை ஈஷா மய்யத்திற்குத் தெரிவித்து, அந்த விற்பனையைத் தடுத்து, அந்த நிலத்தை ஈஷா மய்யத்தின் பெயரில் வாங்கிவிடுவார்.
சென்ற ஆண்டு மட்டும் ஈஷா மய்யத்தின் மொத்த வருமானம் 243 கோடிகள்.
ஊடகங்களின் ஒத்துழைப்பு:
இன்று காட்சி ஊடகங்களாயினும், அச்சு ஊடகங்களாயினும் எல்லாம் மோசடி கார்ப்பரேட் முதலாளிகளின் கையில் இருப்பதால், அவர்கள் இந்த மோசடி கார்ப்பரேட் சாமியாரை வளர்த்து விடுவதிலும், விளம்பரப்படுத்து வதிலும், காப்பாற்றுவதிலும் அக்கறை காட்டி வருகின்றன. மோசடியும் மோசடியும் கை கோர்க்க மோ(ச)டியும் அதற்கு ஆதரவு.
மாபெரும் சிவன் சிலை மோசடி
இப்படிப்பட்ட உலகமகா மோசடிப் பேர்வழி தனது ஈஷா மய்யத்தை மிகப் பெரும் கார்ப்பரேட் நிறுவனமாக மாற்ற மக்களை, அரசியல்வாதிகளை ஈர்க்க தற்போது ஒரு மாபெரும் சதித் திட்டத்தை நிறைவேற்றி அதை இந்தியாவின் பிரதமர் மோடியை வைத்தே செயல்படுத்தியுள்ளதுதான் மிகப்பெரிய தந்திரம்!
மகாசிவராத்திரியில் மோடியால் திறக்கப்பட்ட இந்தச் சிவன் முகச் சிலை 112 அடி உயரம். இதைத் திறக்க மோடி வருகிறார் என்ற பிரச்சாரத்தின் மூலம் கணக்கற்ற கட்டணக் கொள்ளை.
இந்தச் சிவராத்திரி விழாவில் கலந்துகொள்ள மூன்று பிரிவாகக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதல் பிரிவு டிக்கட் ஒன்று 1ரு லட்ச ரூபாய், இரண்டாம் பிரிவு 1 லட்சம் ரூபாய், மூன்றாம் பிரிவு 50 ஆயிரம் ரூபாய். மூன்றாம் பிரிவு டிக்கட் முழுவதும் விற்றுத் தீர்ந்துவிட்டனவாம்.
எஞ்சியிருப்பது 1 லட்சம் ரூபாய், 1ரு லட்சம் ரூபாய் டிக்கட்கள் மட்டும்தான் என்று சில நாட்களுக்கு முன் தெரிவிக்கப்பட்டது.
ஆக, மோசடி சிலையையும் மோடியின் வரவையும் வைத்து எப்படிப்பட்ட கொள்ளை பாருங்கள்!
ஈஷா மய்யத்தின் கேடியும்
இந்தியப் பிரதமர் மோடியும்
உலகம் அறிந்த ஒரு கேடி, கிரிமினல், சமூக விரோதி. அந்த ஆளுக்கு பத்ம விபூஷன் விருது அளிக்கிறது பா.ஜ.க. அரசு. அப்படியென்றால் இந்த மத்திய அரசின் யோக்கியதை என்ன?
இயற்கை வேளாண்மையைக் கொண்டு வர தன் வாழ்நாளையே அர்ப்பணித்த நம்மாழ்வாருக்கு பத்ம விருது இல்லை. ஆனால், இயற்கை வளத்தை அழித்துக் கொடுமைபுரியும் குற்றவாளிக்கு பத்மஸ்ரீ விருது. பா.ஜ.க. அரசு எப்படிப்பட்ட மோசடி அரசு என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்?
மோடி – மோசடி மய்யத்திற்கு ஆதரவு?
இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக, நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, எல்லா மதங்களுக்கும் பொதுவாக இருக்க வேண்டிய ஒரு பிரதமர், இந்துக் கடவுள் சிலை திறக்கலாமா?
அதுவும், சட்டத்திற்குப் புறம்பாக வனப்பகுதியை வளைத்து அமைக்கப்பட்ட சட்ட விரோத நிறுவனத்தால் அமைக்கப்-பட்டுள்ள சிலையை, ஒரு கிரிமினல் குற்றவாளி அழைப்பை ஏற்று வரலாமா?
பலவித எதிர்ப்புகளையும் கண்டனங் களையும் மீறி பிரதமர் மோடி ஈஷா மய்யம் வந்ததும், சிலையைத் திறந்ததும், பிரதமரும் இந்த மோசடிக்கு ஆதரவு அளிக்கிறார் என்பதையே காட்டுகிறது.
அப்படிப்பட்ட ஒருவர் பிரதமராய் நீடிக்கலாமா? என்ற மிகப் பெரிய கேள்வி எழுந்துள்ளது? மோசடிக்குத் துணை போகும் மோடியே பதவி விலகு என்ற வலுவான குரல் இனி வான்முட்ட ஒலிக்கும்! ஒலிக்க வேண்டும்!
சிவனைக் கேவலமாகப் பேசிய ஜக்கி, சிவனுக்கு சிலை வைக்க தகுதி ஏது?
சிவனைவிட மோசமாக யாராலும் இருக்க முடியாது! எல்லாவற்றையும் துறந்துவிட்ட மாபெரும் துறவி. சம்சாரியும் கூட. மதுபானம், போதைப் பொருள் உட்கொள்பவரும்கூட. அவர் நர்த்தகர். ஆனால், அசைவின்றி ஒரே இடத்தில் அமர்ந்திருப்பவரும்கூட. தெய்வங்கள், பிசாசுகள் உட்பட பல வகையான உயிரினங்கள் அவரை வழிபடுகின்றன. அவரைப் பற்றி மிக மோசமான விஷயங்களும் சொல்லப் பட்டிருக்கின்றன.
சிவன் தன் மீது மனிதக் கழிவுகளை பூசிக் கொண்டதாகக் கூடச் சொல்லப்படுகிறது. ஒரு மனிதன் எதையெல்லாம் தாண்டி வர முடியுமோ அவை எல்லாவற்றையும் தாண்டி வந்தவர் அவர். நாகரிகக் கலாச்சாரம் என்ற பெயரில், சிவனை ஏற்றுக்கொள்ள தங்களுக்கு இடைஞ்சலான விஷயங்களை அப்புறப்படுத்த முயற்சி நடந்திருக்கிறது. ஆனால், சிவனின் சாரமும், சிறப்பும், இவர்கள் மறைக்க நினைக்கும் அக்குணங்கள் தானே!
(ஆதாரம்: ஆனந்த அலை.காம், 13.02.2015)