ஆண்டி மெஹெர்க் (Andy Meharg) என்ற பெல்பாஸ்ட் குயின்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானி 3 முறைகளில் அரிசி சமைத்து பரிசோதனைகள் செய்து நஞ்சு அகற்றும் வழியைக் கண்டறிந்து கூறியுள்ளார்.
முதல் முறையில் ஒரு பங்கு அரிசிக்கு இரண்டு பங்கு தண்ணீர் சேர்த்து தண்ணீர் முழுவதும் ஆவியாகும் வரை சமைத்ததில் அந்த உணவில் நச்சுத்தன்மை நீங்காமல் அப்படியே இருந்ததைக் கண்டார்.
இரண்டாவது முறையில் ஒரு பங்கு அரிசிக்கு 5 பங்கு தண்ணீர் சேர்த்து சமைத்து மீதி நீரை வெளியேற்றியபோது அந்தச் சோற்றில் 50% நச்சுப் பொருள் தங்கியிருந்ததைக் கண்டார்.
மூன்றாவது முறையில் அரிசியை ஓர் இரவு முழுவதும் நீரில் ஊரவைத்து நன்கு கழுவியபின் சமைத்ததில் 80% நச்சுப் பொருள் நீங்கியிருந்ததைக் கண்டார்.
எனவே, அரிசியை 12 மணி நேரத்திற்குக் குறையாமல் ஊரவிட்டுக் கழுவி சமைப்பதே இராசன நஞ்சிலிருந்து நம்மைக் காக்கும். இந்த நஞ்சுகள் நீக்கப்படாமல் சோறு சாப்பிட்டால் இதய நோய், நீரிழிவு, புற்றுநோய் போன்ற நோய்கள் தாக்கும் அபாயம் உண்டு என்று எச்சரிக்கிறார்.
_ ஆதாரம்: ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ 9.2.2017
தகவல்: கெ.நா.சாமி