Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

எருது புரட்சி…

ஆகஸ்டு புரட்சி
அக்டோபர் புரட்சியின்
வரிசையில்…
ஜல்லிக்கட்டுப் புரட்சி
சரித்திரம் படைத்தது!

அகிம்சையை
அரண் அமைத்து
ஆர்த் தெழுந்தன
ஆதிக்கம் அழிக்கும்
அக்கினிக் குஞ்சுகள்!

தமிழ் மண்
சுமக்கும்;
தெலுங்கு,
மலையாளம்,
கன்னடம்
கை கோர்த்தன!

மத மாறுபாட்டை
விலக்கி வைத்து
தமிழராய் இணைந்தனர்
தொன்மை
உரிமை மீட்க!

இரு முகம் கொண்ட
தில்லி… ஒரு முகமாய்
திரும்பிப் பார்த்தது…!

ஆணும் பெண்ணும்
அருகே உறங்கினும்
மாண்பு மாறாது
மரபைக் காத்தனர்!

மறந்து போன
மான உணர்ச்சியை
மரபு வழியில்
மீட்டெடுத்த புதுமை
அலைபேசிக்கு
புகழ் வணக்கம்!
பூத்த புரட்சிக்கு
தலை வணக்கம்!
பொங்கு தமிழர்க்கு
தை வணக்கம்!
உலகெலாம் சிதறிய
தமிழை ஒருங்கிணைத்த
தை புரட்சிக்கு
தமிழ் வணக்கம்!

– தி.கவி – பன்னீர்.