தொழிற்சாலைத் தேவைகளுக்காக விலங்கு-களை வளர்ப்பது, அதன் தோலுக்காக வேட்டையாடுவது, பிராணிகளை வைத்து நிகழ்த்தப்படும் பரிசோதனைகள், பிராணிகள் மீது நிகழ்த்தப்படும் சித்ரவதைகள், கோழிச்சண்டை, நாய்ச்சண்டை, எருது விளையாட்டு மற்றும் சர்க்கஸ் போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் என அனைத்துக்கும் எதிராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. காய்கறிகளை ஆடையாக அணிவது, உடலில் ரத்தம் பூசிக்கொண்டு ஆடைகளே இல்லாமல் பொது இடங்களில் படுத்திருப்பது என ‘பீட்டா’வின் பல செயல்கள் மோசமாக இருந்ததால் கடுமையான கண்டனங்கள் எழ, “செக்ஸ்தான் மக்களின் கவனத்தை ஈர்க்கிறது. அதனால்தான் இப்படிச் செய்கிறோம்’’ என இதை நியாயப்-படுத்தினார் இந்த நிறுவனத்தின் தலைவி இங்க்ரிட் நியூகிர்க்.
பீட்டாவின் இந்தியக் கிளை கடந்த 2000ஆவது ஆண்டில்தான் தொடங்கப்பட்டது. மும்பையில் இதன் தலைமையகம் இருக்கிறது. அமெரிக்காவில் பிறந்த இந்தியரான பூர்வா ஜோஷிபுரா என்ற 40 வயதுப் பெண்தான் இதன் தலைமைச் செயல் அதிகாரி.
ஜல்லிக்கட்டு போல, கேரளாவில் திருச்சூர் பூரம் திருவிழாவில் யானைகள் ஊர்வலம் நடப்பதை இந்த அமைப்பு எதிர்க்கிறது. யானைகள் சித்ரவதை செய்யப்படுவதாகக் காரணம் கூறுகிறது.
வடஇந்தியாவில் புகழ்பெற்ற கொண்டாட்ட-மான “நாக பஞ்சமியை எதிர்த்தது பீட்டா. பாம்புகளுக்கு பூஜை செய்து பால் வைக்கும் இந்தச் சடங்குகளின்போது பாம்புகள் சித்ரவதை செய்யப்படுவதாகப் புகார் கிளப்பியது. ஆனால், அந்த எதிர்ப்பு எடுபடவில்லை’’
2014ஆ-ம் ஆண்டில் ‘வெஜிடேரியன் பக்ரீத்’ கொண்டாடச் சொல்லி பிரச்சாரத்தில் இறங்கியது பீட்டா. இதற்காக போபாலில் ஒரு மசூதி அருகே பீட்டா சார்பில் சிலர் பிரச்சாரம் செய்தபோது, அவர்கள் மீது கடும் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. மத துவேஷத்தைத் தூண்டியதாக பீட்டா மீது வழக்கு போட்டார்கள். முட்டையை தடைசெய்ய வேண்டும் என்பதுகூட இவர்களின் கோரிக்கை.
சன்னி லியோன், அலியா பட், சோனாக்ஷி சின்ஹா, தியா மிர்சா, ஷில்பா ஷெட்டி, மலாய்கா அரோரா, எமி ஜாக்சன், த்ரிஷா, தமன்னா, ஜான் ஆபிரகாம், மாதவன், சானியா மிர்சா மற்றும் மோ கோம் என பல பிரபலங்கள் பீட்டா விளம்பரங்களில் நடித்திருக்கிறார்கள்.
ஜல்லிக்கட்டுக்கு எதிராக 2007-இல் பீட்டா களம் இறங்கி உச்சநீதிமன்றம் வரை வழக்கு நடத்தி வருகிறது.
‘நம் நாட்டு மாடு இனங்களை அழித்து, அந்நிய மாடுகளின் இறக்குமதியை நம் நாட்டில் பெருகச் செய்யவும், சர்வதேச பால் நிறுவனங்கள் இங்குக் காலூன்றவுமே ஜல்லிக்கட்டு எதிர்ப்புப் பிரச்சாரம் பயன்படுகிறது என பீட்டா மீது குற்றச்சாட்டு தொடர்ச்சியாக எழுப்பப்படுகிறது. பீட்டாவின் போராட்டங்களுக்கு நிதி கொடுப்பது யார் என்ற கேள்வியும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களால் எழுப்பப்படுகிறது.
கொலை செய்யும் பீட்டா!
கருணைக் கொலை செய்வதை பல நாட்டு நீதிமன்றங்கள்கூட குற்றமாகக் கருதும் நிலையில், விலங்குகள் நலனில் அக்கறை காட்டும் பீட்டா அமைப்பு, பல விலங்குகளைக் கொல்கிறது. அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தில் நார்ஃபோல்க் என்ற இடத்தில் பீட்டா அமைப்பு, செல்லப் பிராணிகளாக வளர்க்கப்-பட்டு, பின் வீதியில் ஆதரவின்றி விடப்படும் விலங்குகளைக் காக்க காப்பகம் அமைத்தது. ஆனால், ‘இங்கு கொண்டுவரும் பெரும்பாலான விலங்குகள் கொல்லப்படுகின்றன’.
கடந்த 2014-ஆம் ஆண்டு இந்தக் காப்பகத்துக்கு 1,595 பூனைகள் கொண்டு வரப்பட்டன. இவற்றில் 1,536 பூனைகள் கருணைக்கொலை செய்யப்பட்டன. இதேபோல இங்கு வந்த 1,020 நாய்களில் 788 நாய்கள் கொல்லப்பட்டன. வெறும் 16 பூனைகளும் 23 நாய்களும் மட்டுமே தத்துக் கொடுக்கப்பட்டன. 43 பூனைகளையும் 209 நாய்களையும் வேறு காப்பகங்களுக்கு அனுப்பிவிட்டார்கள். ஒவ்வோர் ஆண்டும் இப்படித்தான் கொலைகள் நிகழ்கின்றன. தங்களிடம் அடைக்கலமாகத் தரப்படும் விலங்குகளில் 1 சதவிகிதத்தைக்கூட இவர்கள் காப்பாற்றுவதில்லை.
2014-ம் ஆண்டில் நன்கொடைகள் மூலம் பீட்டாவுக்குக் கிடைத்த தொகை, 343 கோடி ரூபாய். ஆனால் எந்த விலங்கையும் காக்க இத்தொகைப் பயன்படுத்தப்படவில்லை என்பதே உண்மை!