Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

உண்மையான பெரும் புதையல்

பிரேசில் நாட்டில் பிறந்த பவுலோகொய்லோ  (Poulocoelho) எனும் ஒரு கவிஞர் எழுதிய அல்கெமிஸ்ட் (ரசவாதி) என்ற அரிய புத்தகம்தான் 20 கோடிப்பிரதிகள் விற்றுச் சாதனை படைத்தது. அதில் அப்படி என்ன சொல்லப்பட்டிருக்கிறது?

ரசவாதி என்ற நாவலின் நாயகனாகிய சான்டியாகோ எனும் ஆடு மேய்க்கின்ற சிறுவன் ஒருவன் பெரும் புதையலைத் தேடிப் புறப்பட்டுச் செல்கிறான். செல்லும் வழியெங்கும் அவனுக்கு ஏற்பட்ட நம்ப முடியாத அனுபவங்களும் தாங்க முடியாத துயரங்களுமாக அவனது பதினெட்டாண்டு காலப் பயணத்தை விவரித்துக் கதை நகர்கிறது. முடிவில் அப்பெரும்புதையல் அவன் வாழ்ந்த இடத்திற்கு அருகில்தான் இருக்கிறது எனக் கதை முடியும்போது நமக்குத் திகைப்பு ஏற்படுகிறது.  இத்தனை ஆண்டுகாலப் பயணமும், தேடுதலும், பட்டபாடும் பயனற்றதோ என வருந்தும் போது, அந்தப் பயணமும் அதில் கிடைத்த அனுபவமும்தான் உண்மையான பெரும் புதையல் என நினைத்துப் பார்க்கையில் இக்கதையின் உட்கருத்து புரிகிறது.’’