ஆர்.எஸ்.எஸ்.அடியூன்றலாமா? ஆபத்து அணிவகுக்கலாமா?

பிப்ரவர் 16-28

ஹெட்கெவார் 

எச்சரிக்கை! எச்சரிக்கை!       

 மஞ்சை வசந்தன்

தொண்டஆர்.எஸ்.எஸ். என்னும் அபாயம் அடியெடுத்து வைக்கிறது! எச்சரிக்கை! குறிப்பாக இளைஞர்களே எச்சரிக்கை!

ர்களாகக் காட்டிக்கொள்ளும் குண்டர்களை உருவாக்கும் அமைப்பு ஆர்.எஸ்.எஸ். மதவாத பாசிசச் சித்தாந்தத்தைக் கொண்ட ஒரு மதவெறி அமைப்பு அது. ஆரிய ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்ட ஆரியர்களால் அது உருவாக்கப்பட்டது.

இந்துக்கள் என்ற போர்வையில் இந்துக்களைப் பயன்படுத்தி இந்துக்களாய் உள்ள பார்ப்பனர் அல்லாத மக்களை ஆரியப் பார்ப்பனர்களுக்கு அடிமையாக்கும் சூழ்ச்சிக் கூடாரம்தான் ஆர்.எஸ்.எஸ்.

ஆரிய பார்ப்பன மதவெறிக் கூட்டம், இளைஞர்களைக் கவர, ஆர்.எஸ்.எஸ். என்பது “ஒரு சேவை அமைப்பு; ஒழுக்கம், சேவை, நாட்டுப்பற்று போன்ற நல்ல பண்புகளை உருவாக்குவதே ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நோக்கு’’ என்று பொய்யான கவர்ச்சியான செய்தியைச் சொல்லி, இளைஞர்களை ஈர்த்து, இழுத்து, பயிற்சி என்ற பெயரில், அவர்களை இந்துமத வெறியர்களாக, இஸ்லாம், கிறித்துவ மத வெறுப்பாளர்களாக மாற்றி

u31.jpg - 173.24 KB                                                                     கோல்வால்கர்   

ஆரிய கலாச்சாரத்தை ஏற்கும்படிச் செய்வதே அதன் பணி!

தமிழகம் தந்தை பெரியார் மனிதநேய அடிப்படையில் பதப்படுத்திய மண் என்பதால், 90 ஆண்டுகாலமாக இங்கு காலடி வைக்க முடியாது தவித்த ஆர்.எஸ்.எஸ். மதவெறிக் கூட்டம், தற்போது மத்தியிலுள்ள பி.ஜே.பி. ஆட்சியின் துணையுடன் தமிழகத்தில் காலூன்ற முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

எனவே, அந்த முயற்சியை முளையிலேயே வேர்ப்பறித்து, எறிய வேண்டியது மனிதநேயம், மத இணக்கம், சமத்துவம் விரும்பும் அனைவரின் கடமையாகும்!

இப்படிக் கூறும்போது, எந்த வகையில் ஆர்.எஸ்.எஸ். தடுக்கப்பட வேண்டிய அமைப்பு? அதன் ஆபத்துக்கள் என்ன? அதன் சூழ்ச்சித் திட்டங்கள் எவை? என்பன போன்ற கேள்விகள் இளைஞர்கள் மத்தியில் எழும். எனவே, அவற்றைச் சுருக்கமாக நீங்கள் அறியும்படிச் செய்ய வேண்டியது இன்றைய கட்டாயக் கடமையாகும்?

ராஷ்ட்ரீய ஸ்வயம் ஸேவக் ஸங் (Rastria Swayam Savak Sang) என்பதன் சுருக்கமே ஆர்.எஸ்.எஸ். என்பது.

1925ஆம் ஆண்டு விஜயதசமி நாளில் அய்ந்து பார்ப்பனர்கள் சேர்ந்து அமைத்ததே இந்த அமைப்பு.

u43.jpg - 44.56 KB                                                                  வி.சண்முகநாதன்

1927ஆம் ஆண்டு இராம நவமியன்று இந்த அமைப்பிற்கு ராஷ்ட்ரீய ஸ்வயம் ஸேவக் ஸங் (ஆர்.எஸ்.எஸ்.) என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த அமைப்பின் கொடியான காவிக் கொடியும் அன்றுதான் முடிவு செய்யப்பட்டது.

இந்து என்ற போர்வையில், கோர்வையில் இந்துக்களை ஒன்று திரட்டவும், முஸ்லீம் எதிர்ப்பை, மோதலை அவ்வப்போது செய்து, சூடேற்றி, வெறியேற்றி விரைவில் ஆரிய ஆதிக்கத்தை மீண்டும் கொண்டுவருவதே இந்த அமைப்பின் உண்மையான இலக்கு.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தோற்றம் பற்றி அதன் அதிகாரப்பூர்வ வெளியீடு கூறுவதைக் கீழே படியுங்கள்.
இந்துக்கள் மட்டுமே இந்துஸ்தானை விடுவிப்பர். அவர்கள் மட்டுமே இந்துக் கலாச்சாரத்தைப் பாதுகாப்பர். இந்து சக்தியே நாட்டைப் பாதுகாக்கும். இந்து இளைஞர்களை நற்பண்போடும், தாய்நாட்டுப் பற்றோடும் அமைப்பு முறையில் திரட்ட வேண்டும். வேறு வழியில்லை. இந்த மாபெரும் ஆன்ம வேதனையே ராஷ்டிரிய சுயம் சேவக் சங் அமைப்பதில் வெளிப்பட்டது. ஹெட்கெவார் தனது நண்பர்கள் நால்வருடன் சேர்ந்து (இவரையும் சேர்த்து அய்ந்து பேர்) ஆர்.எஸ்.எஸ்.ன் அன்றாடச் செயல்திட்டத்தைத் தொடங்கினார். அந்தப் பொன்னாள் 1925ஆம் ஆண்டு விசயதசமி நன்னாள்.
(சி.பி. பிஷிகார் எழுதிய சேகஷங் சங் நிர்மாதா – 1979, பக்கம் 251).

இது, ஆர்.எஸ்.எஸ்-ன் அடிப்படை நோக்கம் என்ன என்பதை பற்றி அவர்களே அறிவித்தது.

மேற்கண்ட அறிவிப்பில், ஆர்.எஸ்.எஸ்.அய் அமைத்த நோக்கில் ஓர் ஆதிக்க வெறி தெறிக்கிறதே அல்லாமல் அதில் அறிவுப்பூர்வமான ஆதங்கம், அக்கறை ஏதாவது உள்ளதா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இந்த நாட்டை இந்துக்கள் மட்டுமே விடுவிப்பர் என்கின்றனர். இந்த நாட்டை இவர்கள் யாரிட-மிருந்து விடுவிக்கப் போகிறார்கள்?

இந்த முழக்கம் முழங்கப்பட்ட ஆண்டு 1925. அப்போது இந்தியாவை ஆண்டது பிரிட்டிஷ்காரர்கள். அவர்களிடமிருந்து நாட்டை மீட்கவேண்டும் என்றால் இந்தியர்களே ஒன்று சேருங்கள் என்றல்லவா அழைக்க வேண்டும்? அதை விடுத்து இந்துக்களே ஒன்று சேருங்கள் என்றா அழைக்க முடியும்? இந்த நாட்டில் இந்துக்கள் மட்டுமா வாழ்கிறார்கள்?

பிரிட்டிஷாரிடமிருந்து நமக்கு விடுதலைப் பெற்றுத் தந்த காந்தியும், நேருவும், வ.உ.சி.யும் மற்றவர்களும் இந்துக்களே ஒன்று சேருங்கள் என்று அழைத்தா விடுதலைப் பெற்றார்கள்?

உண்மைகள் இப்படியிருக்க, இந்தியாவை இந்துக்களால்தான் விடுவிக்க முடியும் என்று 1925இல் ஆரிய பார்ப்பனர்கள் ஆர்ப்பரித்தது அசல் மோசடி அல்லவா? அதற்குத்தான் ஆர்.எஸ்.எஸ். உருவாக்கப்பட்டது என்பது அயோக்கியத்தனம் அல்லவா?

இந்தியாவை விடுவிக்கப் போகிறேன் என்ற ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனக் கூட்டம் இந்திய விடுதலைக்காக ஏதாவது செய்ததுண்டா? (இதைத் தனியொரு அத்தியாயத்தில் விளக்கி இருக்கிறேன்.)

பின் ஏன் ஆரிய பார்ப்பனர்கள் மதத்தை ஒரு முக்கிய கருவியாக கையில் எடுக்கிறார்கள்? அங்கு தான் அவர்களின் சூழ்ச்சியே அடங்கியுள்ளது.

ஆரியர்கள் இந்திய நாட்டிற்கு உரிமையானவர்கள் அல்லர். அவர்கள் அயல் நாட்டிலிருந்து ஆடுமாடு ஓட்டிக் கொண்டு இந்தியாவிற்குள் பிழைக்க வந்தவர்கள். அதிலும் சிறுபான்மையினர்.

இன அடிப்படையில் பார்த்தால் அவர்கள் 3 சதவிதம் கூட தேறமாட்டார்கள். எனவே, இன அடிப்படையில் நோக்கினால் அவர்கள் சிறுபான்மையினர் ஆகிவிடுவர். அவர்களுக்கு பாதுகாப்பு இருக்காது. அவர்களால் ஆதிக்கம் செலுத்த இயலாது.

எனவே, இந்நிலையை மாற்றி, தங்களுக்குப் பாதுகாப்புத் தேடிக் கொள்ளவும், தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ளவும் அவர்-களுக்குச் சரியான ஆயுதமாகப் பயன்படுவது மதம்.

மதம் என்ற போர்வையில் – கோர்வையில் நுழைந்து கொண்டால் அவர்கள் பெரும்-பான்மை என்ற தகுதியைப் பெற்றுவிடலாம் என்பதாலேயே அவர்கள் மதத்தைக் கையில் எடுக்கின்றனர்.

இந்த இன அடிப்படையில் மோதல் வந்தால் ஆரிய பார்ப்பனர்களால் தாக்குப் பிடிக்க முடியாது. அவர்களுக்கு என்றென்றும் ஆபத்து; நித்த நித்தம் செத்துப் பிழைக்க வேண்டும். இந்நிலையிலிருந்து தங்களுக்குப் பாதுகாப்புத் தேடவே மதத்தைக் கையில் எடுக்கின்றனர்.

மதம் என்ற அடிப்படையில் பார்க்கும்போது, இந்து என்ற கோர்வையில் சிறுபான்மையான பார்ப்பனர்கள் பெரும்பான்மையினராகக் காட்டிக்கொண்டு விடுகிறார்கள்.

உண்மையிலேயே பெரும்பான்மை இனமான தமிழர்களில் சிலர் இஸ்லாம் மதத்தையும், கிறித்தவ மதத்தையும் ஏற்றுக் கொண்டதற்காக அவர்கள் சிறுபான்மையினராக ஆக்கப்படு-கிறார்கள்.

உண்மையில் நம் இன எதிரிகளை நம்மோடு சேர்த்து, நாமே அவர்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கவும், உண்மையில் இரத்தத்தின் இரத்தமான உடன் பிறப்புகள் வேறு மதக் கடவுளை ஏற்றுக்கொண்ட ஒரே காரணத்திற்-காக அவர்களை எதிரிகளாக நினைத்து மோதவும்கூடிய ஓர் அவல நிலையை மதம் ஏற்படுத்துவதால், அது ஆரியர்களுக்குப் பாதுகாப்பும் உயர்வும் அளிப்பதால்; அவர்கள் ஆதிக்கம் செய்ய வாய்ப்பு தருவதால் ஆரியர்கள் மதத்தை உயிராக மதிக்கின்றனர்.

எனவேதான், எந்தப் பிரச்சினையிலும் மதம் என்ற அடிப்படையிலேயே அவர்கள் நோக்குகின்றனர். மதம் என்று ஒன்று இல்லையென்றால், அவர்களுக்குப் பாதுகாப்பும் இல்லை, உயர்வும் இல்லை; ஆதிக்கம் செலுத்த வாய்ப்பும் இல்லை.

ஆர்.எஸ்.எஸ்.-_ன் உண்மையான நோக்கு இந்து நாட்டை உருவாக்கி இந்துச் சட்டங்களை அமல்படுத்தி, ஆரிய பார்ப்பன ஆதிக்கத்தை நிலை நாட்டுவதுதான்.

அவர்களின் உண்மையான இலக்கு, இந்திய நாட்டு விடுதலையும், நற்குணமுமுள்ள இளைஞர்களை உருவாக்குவதும்தான் என்றால் தங்கள் முழு ஆற்றலையும் அவர்கள் விடுதலைப் போராட்டத்தில் செலுத்தியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் தங்கள் கவனம் முழுவதையும் முஸ்லீம்களோடு மோதுவதிலே தான் செலவிட்டனர்.

இந்து மதத்தைக் காக்கவேண்டும் என்பவர்கள், முஸ்லீம்களோடு ஏன் மோத வேண்டும்? இங்குதான் அவர்களின் சூழ்ச்சியே அடங்கியுள்ளது.

மராட்டிய மாநிலம் மாவல்குன்று பகுதியைத் தங்கள் இருப்பிடமாகக் கொண்ட இந்த ஆரிய சித்பவான் பார்ப்-பனர்கள்தான் இந்த நாட்டில் மத விஷத்தைப் பரப்பி மதவெறியைத் தூண்டியவர்கள். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு-களின் முதுகெலும்பும், மூளையும் இவர்களே!

500 ஆண்டுகளுக்கு மேல் இந்தியாவை ஆண்ட முஸ்லீம் மன்னர்கள் -வற்புறுத்தி, அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்துக்களை முஸ்லீம்களாக மாற்ற முயன்றிருந்தால் இந்த நாடே முஸ்லீம் நாடாக மாறியிருக்கும் என்பதை மனசாட்சியோடு சிந்திக்க வேண்டும். தமிழ்நாட்டில் மீனாட்சிபுரத்தில் நடந்த மதமாற்றம் எந்த முஸ்லிம் மன்னனின் வற்புறுத்தலால் நடந்தது.

இந்தியாவில் முஸ்லீம்களாக மாறியவர்கள் கூட, அரேபிய வணிகர்களின் தொடர்பால் மாறியவர்கள்தான் என்பது வரலாற்று உண்மை.

அப்படி மதம் மாறியவர்களும் உயர்ஜாதி-யினரோ அல்லது பிராமணர்களோ அல்லர். ஆரிய பார்ப்பனர்களால் பல நூறு ஆண்டு-களாய் நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களே, இந்து மதத்தை வெறுத்து, இந்து மதத்தில் உள்ள இழிவை எதிர்த்து மதம் மாறினர். இந்து மதத்தில் உள்ள ஜாதிக் கொடுமைகளும், இழிவும், ஆதிக்கப் போக்குகளுமே அவர்களை வேறு மதத்திற்கு மாறத் தூண்டின.
ஆர்.எஸ்.எஸ். ஓர் ஆரிய அமைப்பு

1. அமைப்பு மற்றும் பதவியின் பெயர்கள்

ஆர்.எஸ்.எஸ். என்பதன் விரிவாக்கம் ராஷ்ட்ரீய ஸ்வயம் ஸேவக் ஸங்; இது சமஸ்கிருதம். அமைப்பின் பெயரே சமஸ்கிருதத்தில் இருப்பதே இது ஓர் ஆரிய அமைப்பு என்பதைச் சுட்டிக் காட்டுகிறது.

சமஸ்கிருதம் ஆரியர்களின் மொழி.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பதவிப் பெயர்களை ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளும் செயல் திட்டங்களும் என்ற கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன். அவற்றை நன்றாக கவனியுங்கள். அவையனைத்தும் சமஸ்கிருத வார்த்தைகளே ஆகும்.

2. ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள்

தோற்றுவித்த அய்ந்து பேரும் ஆரியப் பார்ப்பனர்களேயாவர். அதில் முக்கிய பொறுப்பில் அக்காலந்தொட்டு இக்காலம் வரையுள்ளவர்கள் அனைவரும் ஆரியப் பார்ப்பனர்களே! அதுவும் சித்பவான் பார்ப்பனர்கள்.

3. ஆர்.எஸ்.எஸ்- வழிபாட்டுப் பாடல்:
Salutations to you, O, Mother land
Where I am born;
Salutations to you O, Land of Aryas,
Where I have grown;
Salutation to you, O, Sacred land
Where I have worked.

இப்பாடலின் பொருள்:

நான் பிறந்த தாய் நாடே உன்னை வணங்குகின்றேன்.
என்னை வளர்த்த ஆரிய நாடே, உன்னை வணங்குகின்றேன்.
நான் உழைக்கும் புனித நாடே, உன்னை வணங்குகின்றேன்.

ஆர்.எஸ்.எஸ்.ஸின் தலைமைப் பொறுப்பிற்கு நியமிக்கப்படுகின்றவர்கள் ஆரிய பார்ப்பனர்கள் மட்டுமே. அதிலும் மராட்டியத்தைச் சேர்ந்த அதிதீவிர மத வெறி பார்ப்பனர்களே!

இந்துக்களும் முஸ்லீம்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று காந்தியார் சொன்னதற்காகவும், இதனால் இந்து ராஷ்ட்டிர கனவு தகர்க்கப்படுகிறது என்பதற்காக மட்டும் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்கள் காந்தியைக் கொல்லவில்லை. காந்தியாரை அவர்கள் கொன்றதற்கு அதனினும் முதன்மையான காரணம் ஒன்று உண்டு.

இந்தியா முழுமைக்கும், மக்கள் ஒரு மனதாக ஏற்கக்கூடிய தலைவராக ஒரு பார்ப்பனர் அல்லாத ஒருவர் வருவதை பார்ப்பனர்கள் விரும்பவில்லை. ஆனால் காந்தி அவர்கள் விருப்பத்திற்கு மாறாக உருவாகி, உயர்ந்து வந்தார். பார்ப்பனர் அல்லாத, அதுவும் மராட்டிய பார்ப்பனர் அல்லாத ஒருவர் அரசியலில் உயர்நிலைச் செல்வாக்கில் இருப்பதை சகிக்க முடியாமலே காந்தியை மராட்டிய பார்ப்பனக் கூட்டம் கொன்றது.

இந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பார்ப்பனர்களைத் தவிர மற்றவர்கள் விலங்குகளைப் போன்றவர்கள், இழிவானவர்கள் என்கின்றது. இதை ஆர்.எஸ்.எஸ். சித்தாந்த கர்த்தா கோல்வால்கரே கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.

“We (aryans) are the good, the enlightened people. We were the people who know about the laws of nature the law of the sprit. We had brought into actual life almost every thing that was beneficial to mankind. Then the rest of humanity was just bipeds and so no distinective same was given to us. Sometimes in trying to distinguish our people from others, we were called the enlightened – the Aryas – and the rest the melachas.”

– (ஆதாரம்:  Bunch of Thoughts)

அதாவது, நாம் (ஆரியர்கள்) நல்லவர்கள், அறிவுத்திறன் கொண்டவர்கள். இயற்கை-யின் விதிகளையும், ஆன்ம விதிகளையும் அறிந்தவர்கள் நாம்தான். மனிதனுக்கு நன்மை பயக்கக் கூடியவற்றை யெல்லாம் கொண்டு வந்தவர்களும் நாம்தான். அப்போது நம்மைத் தவிர மற்றவர்-களெல்லாம் இரண்டு கால் பிராணிகளைப் போல் அறிவற்றவர் களாகவே இருந்தனர். எனவே, நமக்கென்று குறிப்பிட்ட பெயர் எதுவும் சூட்டப்பட வில்லை. சில நேரங்களில் நம்மை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்ட நாம் அறிவுத்-திறனுடைய ஆரியர்கள் என்று அழைக்கப்-பட்டோம். நம்மைத் தவிர மற்றவர்-களெல்லாம் மிலேச்சர்கள் (இழிமக்கள்) என்பதே கோல்வால்கர் கூறியது.

ஆரியப் பார்ப்பனர்களைத் தவிர மற்றவர்களை-யெல்லாம் ஆடு மாடுகளாக, அதனினும் கீழாகக் கருதக் கூடியவர்கள் இந்த ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. கூட்டத்தினர் என்பதும் இவை ஆரிய அமைப்பே என்பதும், விளங்கவில்லையா?

ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தவர்களுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள் அர்த்த சாஸ்திரத்திலிருந்தும், மனு தர்மத்திலிருந்துமே பெறப்பட்டுள்ளன.

அரசாட்சியில் வேவு பார்த்தல், அரசு மற்றும் அதிகார வர்க்கத்தின் முழுக்கட்டுப்பாடு, ஆதிக்கம் ஆகியவற்றிற்கு அர்த்தசாஸ்திரமும், கீழ்ச் சாதியினரை எப்படி வைக்க வேண்டும் என்பதற்கு, பெண்களை எப்படி அடிமை கொள்ள வேண்டும் என்பதற்கு அவர்களுக்கு மனுதர்மமும் நெறி நூல்களாகும்.
சமஸ்கிருதத் திணிப்பே அவர்களின் இலக்கு.

மொழிப் பிரச்சினையில் ஆர்.எஸ்.எஸ். கொள்கை அச்சாணி என்று கருதப்படும் கோல்வால்கர் என்ன கூறுகிறார் தெரியுமா?

“As a solution to the problem of ‘lingua fanca’ till the time Sanskrit takes that place, we shall have to give priority of Hindi on the score of convenience.”

– (Bunch of Thoughts 8 ஆவது அத்தியாயம் -_ பக்கம் 113)

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கு சித்தாந்தங்-களை வகுத்துக் கொடுத்த கோல்வால்கர், இளைஞர்களைச் சூழ்ச்சியாகக் கவர வேண்டும் என்கிறார்.

ஒரு பணக்காரர் ஒருநாள் மாலை, தோட்டத்தில் ஓர் அழகான மயில் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தார். அவர் உணவில் கஞ்சாவைக் கலந்து அந்த மயிலுக்குக் கொடுத்தார். மயில் நாள்தோறும் அங்கு வர ஆரம்பித்தது. முடிவில் பழக்கத்துக்கு அடிமையாகிவிட்ட மயில் கஞ்சா இல்லாம-லேயே நாள்தோறும் அந்த நேரத்துக்கு அங்கே வந்தது என்பதே கோல்வால்கர் கூறும் கதை.

ஆக, இளைஞர்களை மதமயக்கத்தில் வீழ்த்தி, தங்கள் கட்டளைக்கு அவர்களை அடிமையாக்கி-விட வேண்டும் என்பதை அப்பட்டமாக போதிக்கும் இவர்களின் கலாச்சாரம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ்.-ன் அடியுரம் கலவரம்

நாட்டில் நடைபெறுகின்ற பல கலவரங்-களுக்கு, முஸ்லீம் – இந்து மோதல்களுக்கு ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் கிளப்பிவிட்ட வதந்திகளே பெரும்பாலும் காரணம்.

இன்று நேற்றல்ல. ஆர்.எஸ்.எஸ். ஏற்படுத்தப்-பட்ட காலத்திலிருந்தே வதந்திகளைப் பரப்புவதும், வன்முறைக் கலவரங்களைத் தூண்டுவதுமே அவர்களுக்கு அடிப்படைப் பணிகளாகும்.

1. இந்துக் கோயில்களுக்கு அருகில் சர்ச் ஒலிபெருக்கி முழங்குகிறார்கள்; பள்ளி வாசல் ஒலிபெருக்கி முழங்குகிறார்கள் என்று கலவரத்தைத் தூண்டுவார்கள்.

2. இந்துக்கள் கோயிலில் இருக்கும் இடத்தில் உருவ வழிபாட்டைக் கண்டிக்கும் பள்ளி வாசல் முழக்கங்கள்; ஓதுதல் கூடாது என்று பிரச்சினையை எழுப்புவார்கள்.

3. இந்துக் கோயில்கள் இருக்கும் இடத்தில் முஸ்லீம்கள் ஊர்வலம் நடத்தக் கூடாது என்பர். அல்லது முஸ்லீம்கள் அதிகம் இருக்கும் இடத்தின் வழியேதான் பிள்ளையார் ஊர்வலம் நடத்திக் கலவரம் உண்டாக்குவர்.

4. பள்ளி வாசலும் மசூதியும் இருக்கும் இடத்தில் தான் ஏற்கெனவே இந்துக் கோயில் இருந்தது. எனவே, பள்ளி வாசலையும், மசூதியையும் இடித்துவிட்டு இந்துக் கோயிலை மீண்டும் கட்டவேண்டும் என்று இரத்தக் களறியை ஏற்படுத்துவர்.

5. சாதாரணமாக ஏற்படக்கூடிய வரப்புத் தகராறு, இடத் தகராறு இவற்றைக் கூட இந்து முஸ்லீம், இந்து கிறித்தவ பிரச்சினையாக திசை திருப்பி மோதவிட்டு கலவரத்தை பிற இடங்களுக்கும் வளர்ப்பர்.

6. இந்துக்களிலே பல்வேறு ஜாதிகளுக்கு இடையே கலவரத்தைத் தூண்டிவிட்டு, அவர்களுக்கு இடையே எப்போதும் ஜாதி வெறி அல்லது ஜாதிப் பற்றுதல் தணிந்து மறைந்து போகாமல் பார்த்துக் கொள்வர்.

இப்படிப்பட்ட கலவரங்களின் மூலமே ஆர்.எஸ்.எஸ்.சும் அதன் குடும்ப அமைப்புகளும் வளர்க்கப்படுகின்றன.

ஆர்.எஸ்.எஸ். தொடங்கப்பட்டவுடன் 1927ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நாக்பூரில் ஏற்பட்ட வகுப்புக் கலவரம்தான் நாக்பூரைச் சுற்றிலும் ஆர்.எஸ்.எஸ். விரைவாக வளரக் காரணமாக அமைந்தது. அப்போது அவர்கள் கண்ட ருசி, கலவரத்தை வைத்தே இந்து வெறியை ஊட்ட அவர்களைத் தூண்டியது.

அன்றிலிருந்து அவர்கள் கலவரங்களைத் தூண்டியே இயக்கத்தை வளர்க்கின்றனர்.

இந்தியா விடுதலை பெற்ற இரண்டு மாதங்களிலே ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் 700க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்டிருப்பதாக பம்பாய் புலனாய்வுத் துறை மூத்த அதிகாரி, கபூர் கமிஷன் முன் சாட்சி அளித்துள்ளார். 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி கல்கத்தா நகரில் பயங்கரக் கலவரம் காரணம்.

அதேபோல, 1970ஆம் ஆண்டு நாடாளு-மன்றத்திலே பெரும் புயலைக் கிளப்பியதும் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை உண்டு பண்ணியதுமான பிவாண்டி மற்றும் அய்ஸ்கோவான் கலவரங்கள் நடந்ததற்கும் ஆர்.எஸ்.எஸ்.காரர்களே காரணம். ராஞ்சியில் நடந்த வகுப்புக் கலவரத்திற்கு இதே ஆர்.எஸ்.எஸ்.தான் காரணம்.

1971இல் கேரளாவில் தெள்ளச்சேரியில் நடந்த வகுப்புக் கலவரத்திற்கும், அமேரலி, பனாஸகாந்த், மேஷனா, பரோடா போன்ற இடங்களில் நடந்த கலவரங்களுக்கும், 1978ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உ.பி. மாநிலம் அலிகாரில் மிகப் பெரிய இந்து – முஸ்லீம் கலவரம் உருவாக, 25 பேர் உயிரிழக்கக் காரணமாக அமைந்தவர்கள் ஆர்.எஸ்.எஸ். காரர்கள்தான்.

13.8.1980 அன்று உ.பி. மாநிலம் மொரதாபாத்தில் உள்ள மசூதியில் தொழுகை நடந்தபோது ஒரு பன்றியை நுழைய விட்டு கலவரத்தைத் தூண்டினர் ஆர்.எஸ்.எஸ்.-காரர்கள்.

30.4.1981ஆம் ஆண்டு பீகார் மாநிலத்தில் பீகார் ஷெரீப் என்ற இடத்தில் முஸ்லீம் கலவரத்தை ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் உருவாக்கினர். 52 பேர் இக்கலவரத்தில் உயிரிழந்தனர்.

இக்கலவரத்தில் முஸ்லீம்கள் மீது வெடி குண்டுகள் வீசப்பட்டன. பதினேழு வயது முஸ்லீம் இளம்பெண்ணின் கண்ணெதிரிலேயே அவளது கணவன் கண்டத் துண்டமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டான்.

எனவே, கலவரம் என்ற உரம் போட்ட ஆர்.எஸ்.எஸ்.ஸை நாடு முழுக்க, வளர்க்க, பரப்ப அவர்கள் முயன்று வருகின்றனர்.

தமிழகத்தில், பெரியார் மண்ணில், ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் அடிவைக்க முடியாமல் முறியடிக்கப்பட்டாலும், இங்கும் அவர்கள் அடிவைத்தது கலவரங்களைத் தூண்டித்தான்.

1982இல் மண்டைக்காடு கலவரத்தைத் தூண்டி, பின்னணியில் நின்று கலவரத்தை பெரும் அளவில் நடத்தி, குமரி மாவட்டத்தில் காலூன்றினர். 1.3.1982 மற்றும் 15.3.1983 ஆகிய நாட்களில் அங்கு துப்பாக்கிச் சூடு நடக்கும் அளவிற்குச் செய்தனர்.

காலூன்ற இடங்கிடைத்தால் போதாதா? அதைப் பயன்படுத்தி, இரு சமூகங்களுக்கிடையே பகைமையை வளர்த்து, அதனைக் கொண்டு தங்கள் அமைப்புகளை விரிவடையச் செய்தனர்.

குமரி மாவட்ட மக்கள் சகோதர உணர்வோடு நெடுங்காலமாய் வாழ்ந்தவர்கள் அங்கு மதக் கலவரத்தைத் தூண்டி இந்துக்கள் வாக்குகளை ஒட்டுமொத்தமாகப் பெற, ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் மணலிக்குழிவிளை, வழுதலப்பள்ளம் என்ற இடங்களிலும் கலவரத்தைத் தூண்டினர். 12.9.1993இல் அதிதூதர் கிறித்துவ ஆலயம் ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து முன்னணி அமைப்பினரால் இடித்துத் தரைமட்டம் ஆக்கப்பட்டது.

வலுதலப்பள்ளம் இந்துக்கள் குறைவாக வாழும் ஊர். வழுதலப்பள்ளம் இந்துக்களைக் காப்போம் என்ற முழக்கத்தோடு குமரி மாவட்ட இந்துக்களை உணர்வேற்றி ஓரணியில் திரட்ட கலவரங்களை உருவாக்கினர். இம்முயற்சியில் அவர்கள் வெற்றியும் பெற்றனர்.

இந்து ராஷ்டிரம் அமைப்பதே இவர்களின் இலக்கு!

இன்றைக்கு மதச்சார்பற்ற ஆட்சியில் மக்கள் தங்கள் கடவுளை குலவழியாக, தங்களுக்குள்ள கடவுளை வணங்குகிறார்கள்.

ஆனால், இந்துராஷ்ட்டிரத்தில் ஒரே கடவுளையே வணங்க வேண்டும். ஆம். சிவனை வணங்குகின்றவராயினும், விஷ்ணுவை வணங்குகின்றவராயினும், முருகனை, விநாயகரை, காளியை, வீரனை என்று பல கடவுளை வணங்குகின்றவர்களாயினும், ஏசுவை வணங்குகின்றவர்களாயினும், அல்லாவைத் தொழுகின்றவர்கள் ஆயினும், யாராயினும், அவர்கள் இந்தியாவின் எல்லைக்குள் இருப்பின், அவர்கள் தங்கள் கடவுளை விட்டுவிட்டு, ராமனை மட்டுமே கடவுளாக ஏற்க வேண்டும், வணங்க வேண்டும். அதாவது ஒரே தேசம், ஒரே கடவுள். மீறி தன் கடவுளைத் தான் வணங்க வேண்டும் என்று யாராவது பிடிவாதம் பிடித்தால் அவர்கள் இந்தியாவை விட்டுச் சென்றுவிட வேண்டும்.

“இந்துக்கள் அல்லாத மற்ற மதத்தார் தங்கள் கடவுள் தங்கள் கலாச்சாரம் இவற்றை விட்டுவிட வேண்டும். இந்து கலாச்சாரத்தையும், சமஸ்கிருதத்தையும் தங்கள் கலாச்சாரமாகவும், தங்கள் மொழியாகவும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்துமதத்தை மதித்து பயபக்தியுடன் போற்றித் துதிக்க வேண்டும். தங்களுடைய தனிப்பட்ட அடையாளங்களையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, இந்து இனத்துடன் கலந்து, தாங்களும் இந்துக்களோடு கலந்துவிட வேண்டும். எந்த உரிமையும் கோராமல், எவ்விதமான சிறப்புச் சலுகையும் கேட்காமல், நாட்டின் குடிமகனுக்குள்ள உரிமைகளைக் கூடக் கேட்காமல், இந்து தேசத்திற்கு முழுமையாகக் கீழ்ப்படிந்து நடந்து, இந்த நாட்டில் தங்கிக் கொள்ளலாம்.’’ என்று அவர்களே வெளிப்படையாகக் கூறியுள்ளனர்.

ஆதாரம் : நாம் அல்லது வரையறுக்கப்பட்ட இந்து தேசம்
(We or our Nationhood defined 1939)

ஒழுக்கக் கேடர்கள்:

ஒழுக்கம் கட்டுப்பாடு வளர்க்கிறோம் என்று கூறிக்கொள்ளும் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் எவ்வளவு ஒழுக்கக் கேடர்கள் என்பதற்கு ஆர்.எஸ்.எஸ்_ன் தீவிரத் தொண்டரான, மேகலாயா ஆளுநராய் இருந்த சண்முகநாதனே சரியான சான்று. முதியவரான நிலையிலே அவர் ஆளுநர் மாளிகையில் நடத்திய, “கிருஷ்ண லீலைகள்’’ எவ்வளவு கீழ்த்தரமானவை என்பதை உலகே அறிந்து காறித் துப்பியது.

அரியலூர் அருகில் நந்தினி என்ற பெண்ணுக்கு கொடுமை செய்தவன் இந்த மதவெறிக் கூட்டத்தைச் சேர்ந்தவன். ஆக, இவர்கள் கூறும் ஒழுக்கமும் கட்டுப்பாடும் ஊரை ஏமாற்றவே!

தமிழக அரசு துணைபோகிறதா?

ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தில் பள்ளி மாணவர்களையே பயிற்சி கொடுத்து பங்கு கொள்ளச் செய்துள்ளனர் என்பது வன்மையான கண்டனத்திற்குரியது. தமிழக திராவிட அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் விளைவுகள் மிக மோசமாக இருக்கும்.

தந்தை பெரியாரின் மண்ணில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பிற்கு இதுவரை அனுமதியளிக்காத நிலையில் தற்போதைய ஓ.பன்னீர் செல்வம் அரசு அமைதி அளித்தது ஏன்? பி.ஜே.பியின் பின்னணியில் இந்த அரசு இயங்குகிறது என்பதை உறுதிப்படுத்துகிறார்களா? என்ற கேள்வி எழுகிறது.

இளைஞர்களே எச்சரிக்கை!

எனவே, ஆர்.எஸ்.எஸ்.ன் கொடிய நோக்கம் புரியாமல், அதை ஓர் தொண்டு அமைப்பாக இந்துக்களின் காவலனாகக் கொண்டு ஏமாந்து பலியாகாமல் எச்சரிக்கையாய் இருந்து மத நல்லிணக்கமும், மனிதநேயமும் காக்க வேண்டியது முக்கியக் கடமையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *