சேலம் அம்மாப்பேட்டை பெயரைக் கேட்டால் தமிழகத்தின் மற்ற பகுதியினரும் பயப்படுவார்கள். அந்தளவு கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகம் நடைபெற்ற இடம் அம்மாபேட்டை. ஆனால், இப்போது எவ்வித பயமுமின்றி மக்கள் அமைதியாக வாழும் பகுதியாக மாறியிருக்கிறது. காரணம், இன்ஸ்பெக்டர் நாகராஜ்தான். அம்மாபேட்டை போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக நாகராஜ் வந்ததும் கொலை, கொள்ளை, வழிப்பறி, கட்டப் பஞ்சாயத்து ரவுடிகள் 79 பேரை குண்டர் சட்டத்துல கைது செய்து சிறையில் அடைத்தார். அதனால், இப்போது இந்தப் பகுதியில் இருக்கிற ரவுடிகள் குற்றச்செயலில் ஈடுபட பயப்படுகிறார்கள். அடுத்தபடியாக போலீஸுக்கும் பொதுமக்களுக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்தும்விதமாக அவ்வப்போது கூட்டம் நடத்துகிறார். அந்த கூட்டத்தில் பொதுமக்கள் கூறும் ஆலோசனைகளையும் கோரிக்கைகளையும் ஏற்றுக்கொண்டு அந்தக் குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பார்’’ என்கின்றனர் அப்பகுதி மக்கள்.