கருப்புப் பணத்தை ஒழிக்கப் போவதாகக் கூறிக்கொண்டு, பா.ஜ.க. மோடி அரசு நவம்பர் 8ஆம் தேதி 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று திடீர் அறிவிப்பு செய்த பின் நாட்டு மக்கள் அடைந்த துன்பம், இழப்பு, பாதிப்பு கொஞ்சநஞ்சமல்ல.
உண்மையில் 94% கருப்புப் பணம் கார்ப்பரேட் கம்பெனிகள், ரியல் எஸ்டேட், தொழிற்சாலைகள், கல்வி நிலையங்கள் என்று பல வடிவில் உள்ள நிலையில், அதில் கை வைக்காமல், கருப்புப் பணத்தை ஒழிக்க 130 கோடி மக்களை மோடி அரசு படுத்தும் பாடு சொல்லில் அடங்காது! சிறு வணிகர், ஏழை விவசாயி, அடித்தட்டு மக்கள் என்று பலரும் வாழ்வாதாரம் இழந்து நிற்கின்றனர். ஆனால், இவற்றை மறைக்க மோடி அரசு நாள்தோறும் மோசடி அறிவிப்புகளைச் செய்து வருகிறது.
நவ 8: 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது.
நவ 9: வங்கி சேவைகளும், ஏ.டி.எம். சேவைகளும் நிறுத்தப்பட்டன.
2.5 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தால் விளக்கம் கேட்கப்படும்.
நவ 10: ரூ.4,000 வரை செல்லாத 500, 1,000 ரூபாய் நோட்டுகள் மாற்றலாம். கணக்கு உள்ள வங்கியில் இருந்து தினம் 10,000, வாரம் 20,000 வரை பணம் எடுக்கலாம்.
புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம்.
நவ 11: ஏ.டி.எம்.கள் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தன. தினம் 2,000 ரூபாய் வரை மட்டுமே எடுக்க முடியும்.
நவ 12_13: சனி மற்றும் ஞாயிறு அன்று வங்கிகள் இயங்கின.
நவ 13: செல்லாத 500, 1,000 நோட்டுகள் மாற்றும் அளவு 4,500 ரூபாய் வரை அதிகரிப்பு.
வங்கிகள் மூலமாகப் பணம் எடுக்கும் மொத்த அளவு வாரம் 24,000 ஆக அதிகரிப்பு.
ஏ.டி.எம்.களில் 2,500 ரூபாயாக அதிகரிப்பு.
நவ 14: நடப்புக் கணக்கில் இருந்து வாரம் 50,000 ரூபாய் வரை பணம் எடுக்க அனுமதி.
மத்தியக் கூட்டுறவு வங்கிகள் செல்லாத நோட்டுகளை மாற்றவோ, டெபாசிட்களுக்காக ஏற்கவோ கூடாது என உத்தரவு.
நவ 15: 4,500 ரூபாய் வரை செல்லாத நோட்டுகளை மாற்ற வருபவர்களின் விரலில் ஒருமுறை மட்டுமே மாற்ற முடியும் என்பதற்காக அடையாள மை வைக்கப்படும்.
நவ 17: செல்லாத 500, 1,000 நோட்டுகளை மாற்றுவதற்கான அளவு 2,000 ரூபாயாக குறைக்கப்பட்டது.
நவ 18: பெட்ரோல் பங்குகள், பீக்பஜார் போன்ற இடங்களில் டெபிட் கார்டுகள் மூலம் 2,000 ரூபாய் வரை பணமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
நவ 19: வங்கிகளில் முதியவர்களுக்கு மட்டும் புதிய நோட்டுகள் மாற்றித் தரப்பட்டன.
நவ 21: திருமண நிகழ்வு வைத்திருப்-பவர்கள் 2,50,000 ரூபாய் வரை பணம் எடுக்க அனுமதி.
நவ 22: விதிமுறையை மீறி பணத்தை மாற்ற வங்கி அதிகாரிகள் துணை போவதற்கு எச்சரிக்கை.
விவசாயக் கடன் வழங்க ஊரக வங்கிகளில் பண இருப்பு வைக்க அறிவுறுத்தல்.
நவ 23: சிறுசேமிப்புத் திட்டங்களில் பழைய நோட்டுகளை டெபாசிட் செய்ய முடியாது.
நவ 24: நள்ளிரவு முதல் வங்கி கவுன்ட்டர்-களில் செல்லாத நோட்டுகளை மாற்ற முடியாது.
நவ 25: வெளிநாட்டினர் மட்டும் 5,000 ரூபாய் வரை பணத்தை மாற்றிக் கொள்ளலாம்.
நவ 29: டெபாசிட்களை ஊக்கப்படுத்த 50, 100 மற்றும் புதிய 500, 2,000 ரூபாய் நோட்டுகள் மூலம் செய்யப்படும் டெபாசிட்களில் இருந்து, பணம் எடுக்க அளவு வரைமுறை இல்லை என அறிவிப்பு.
நவ 30: ஜன்தன் யோஜ்னா வங்கிக் கணக்கில் இருந்து மாதம் ரூபாய் 10,000 மட்டுமே எடுக்க முடியும்.
டிச 3: 24 நாட்களுக்குப் பிறகு சுங்கச் சாவடி கட்டண வசூல் மீண்டும் தொடங்கியது.
டிச 10: ரயில், பேருந்து கட்டணங்களுக்கு செல்லாத நோட்டுகளை பயன்படுத்த முடியாது.
டிச 13: வங்கிகளில் இருக்கும் சி.சி.டி.வி கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை சேமித்துவைக்க உத்தரவு.
டிச 15: நள்ளிரவு முதல் மருத்துவமனைகளில் செல்லாத 500, 1,000 நோட்டுகளைப் பயன்படுத்த முடியாது.
டிச 16: ஜனவரி 1ஆம் தேதி முதல் மார்ச் 31 வரை மிவிறிஷி, ஹிறிமி மூலம் 1,000 ரூபாய் வரை பணம் செலுத்த, கட்டணம் கிடையாது.
ஜனவரி 1 முதல் மார்ச் 31 வரை, டெபிட் பரிவர்த்தனைகளுக்கு 1,000 ரூபாய் வரை 0.25%, 2,000 ரூபாய் வரை 0.5% சர்வீஸ் கட்டணம் குறைப்பு.
டிச 17: கறுப்புப் பணத்தை தாங்களாகவே அறிவித்து, கரீப் கல்யாண் திட்டம் மூலம் வங்கிகளில் வரி, அபராதத்தை மார்ச் 31 வரை செலுத்தலாம். டிச 30 வரை செல்லாத 500, 1,000 நோட்டுகளைக் கொண்டு செலுத்தலாம்.
டிச 19: வங்கிகளில் 5,000 ரூபாய்க்கு மேல் செல்லாத 500, 1,000 ரூபாய் நோட்டுகளை ஒருமுறை மட்டுமே டெபாசிட் செய்ய முடியும். பணம் வந்தததற்கான ஆவணத்தையும் அதற்கான தாமதத்தையும் சொல்ல வேண்டும்.
டிச 21: ரிசீசி தகவல்கள் கொண்ட அக்கவுன்ட்டுகளுக்கு மட்டும் 5,000 ரூபாய் கட்டுப்பாடு தளர்வு.
டிச 26: வட்டி தள்ளுபடி பெறும் வகையில் விவசாயக் கடனை திருப்பி செலுத்தும் ஓராண்டு காலக் கெடு நவ.1 முதல் டிச.31க்குள் இருந்தால், 60 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்கப்படும்.
டிச 28: 2017 மார்ச் 31ஆம் தேதிக்கு மேல் செல்லாத ரூபாய் நோட்டுகள் வைத்திருந்தால் அபராதம். 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை.
டிச 29: 2017 மார்ச் 31க்கு மேல் செல்லாத 500, 1,000 நோட்டுகள் வைத்திருந்தால் ரூ.10,000 அபராதம். சிறைத் தண்டனை இல்லை.
டிச 30: வங்கிகளில் செல்லாத 500, 1,000 நோட்டுகளை டெபாசிட் செய்ய கடைசி நாள்.
இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அறிவிப்புக் கொடுத்து நாட்டு மக்களை, வங்கிகளை பாடாய்ப் படுத்தி வருகின்றனர். இதனால் ஏழைகள் அடித்தட்டு மக்கள், சிறு வணிகர்கள் மீளமுடியாது வீழ்த்தப்-பட்டுள்ளனர்.
ஆனால், 94% கருப்புப் பணம் வைத்திருக்கும் கருப்புப் பண முதலைகள் எந்த பாதிப்பும் இன்றி வளமாக வாழ்ந்து வருகின்றனர்.
இப்படி மக்களைப் பாடாய்ப் படுத்தி கருப்புப் பணம் பிடிக்கப்பட்டது எவ்வளவு? ஒன்றுமில்லை!
கடந்த மூன்று ஆண்டுகளாக எந்த வளர்ச்சியையும் நாட்டுக்குத் தரமுடியாத பி.ஜே.பி. மோடி அரசு அதை மூடிமறைக்க, இந்த கபட நாடகம் ஆடுகிறது. ஆனால், மோடி அரசின் வேடம் கலைய, மக்கள் வெறுப்பை உமிழ்கின்றனர்! எதிர்வரும் தேர்தலில் மக்கள் நல்ல பாடம் கற்பிப்பர் என்பது உறுதி!