தமிழ்ப் புத்தாண்டு

ஜனவரி 16-31


.தைப்பொங்கல் திருநாள் தமிழர்களாகிய நமக்குப் புத்தாண்டுத் தொடக்க நாளாகும். வடநாட்டாருக்குத் தீபாவளி வருடப்பிறப்புப் போல, தமிழ் நாட்டாருக்குப் பொங்கல், புத்தாண்டுப் பிறப்பாகும். இடைக்காலத்தில் ஆரியர் தொடர்பால், தை மாதத்திற்குப் பதிலாக, சித்திரை மாதம் புது வருட மாதமாகிவிட்டது.

சூரியன் தட்சிணாயனத்திலிருந்து அதாவது தென் திசையிலிருந்து உத்தராயனத்துக்கு அதாவது வடதிசைக்கு வரும் பருவ மாறுதலை வைத்தே ஆண்டுத் தொடக்கத்தை வரையறுத்தார்கள். இயற்கை வழி வாழ்க்கை நடத்திய நம் மூதாதையர்.

இவற்றையெல்லாம் பார்க்கும்போது தைப் பொங்கல் விழா தமிழர் மட்டுமல்லர். தென்னாட்டில் வாழும் பல இனத்தினரும் மட்டுமல்லர்; இந்தியா முழுவதிலுமுள்ள எண்ணற்ற இனத்தினர் மட்டுமல்லர், உலக மக்கள் அனைவருமே கொண்டாடக்கூடிய ஒப்பற்ற தேசியத் திருவிழாவாகும். சர்வதேசங்களிலுள்ள சகல இனத்தினரும் மொழியினரும் உவந்து கொண்டாட வேண்டிய ஈடுஇணையற்ற திருநாளாகும்.

பசியும், பிணியும் நீங்கி, நல்வாழ்வு வாழ சூரியன் திசை மாறுவதுபோல, நம் வாழ்க்கையைப் பீடித்துள்ள வறுமையும் மிடிமையும் (சோம்பலையும்) மற்றும் துன்பங்களையும் மாற்றி வாழ்வில் செழுமை உண்டாக்கும் பொங்கல் திருநாளைப் பூரிப்புடன் நாம் அனைவரும் கொண்டாடுவோமாக!

– நாரண. துரைக்கண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *