இந்தியா – வங்காள தேச கிரிக்கெட் விளையாட்டில் இந்தியா வெற்றி. நமது பாரதப் பிரதமர் மோடி வங்காள தேசம் பயணம் என்று நாம் பத்திரிகைகளில் தொலைக்காட்சிகளில் பார்க்கிறோம். அந்த வங்காள தேசத்தின் சுதந்திரப் போராட்டத்தில் இந்தியாவின் பங்கு மகத்தானது.
வங்காளதேசம் பாகிஸ்தானில் ஒரு அங்கமான கிழக்கு பாகிஸ்தான் என்று இருந்தது. அங்கு சுதந்திரத்திற்காக போராட்டம் நடந்தது. அதில் சுமார் 50 லட்சம் மக்கள் ஆம்! நண்பர்களே 50 லட்சம் மக்கள் கற்பழிக்கப்பட்டும், துன்புறுத்தப்பட்டும் துடிதுடிக்க கொல்லப்பட்டார்கள். இதுபற்றிய ஒரு கட்டுரை மே 13 1971ஆம் ஆண்டில் ஓர் இங்கிலாந்து பத்திரிக்கையில் கட்டுரையாக வந்தது. அப்பொழுதுதான் உலகமே அதிர்ச்சியில் உறைந்தது. பாகிஸ்தான் தன் சொந்த கிழக்குப் பாகிஸ்தான் மக்களைக் கொன்று குவித்து வந்தது எல்லோருக்கும் தெரியவந்தது.
இந்தியா மிகவும் சாமர்த்தியமாக, துணிச்சலாகப் போரிட்டு கிழக்குப் பாகிஸ்தானை வங்காள தேசமாக மலரச் செய்த செயல் காலத்தால் அழிக்க முடியாத ஒரு வீர வரலாறு.
அந்த சுதந்திரப் போராட்டத்தில் பாகிஸ்தான் இராணுவத்துடன் சேர்ந்து சில வங்காள தேச மனித மிருகங்கள் மக்களைக் கொன்று குவித்தனர். அதில் ஒரு மிருகம்தான் க்யாசம் அலி(Quasem Ali). . அவனுக்கு மரண தண்டனை விதித்து டிரிபுயூனல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த மனித மிருகம் வங்காள தேசம் அமர்வு உச்ச நீதிமன்றத்தில் (5 நீதியரசர்கள் கொண்ட குழு) தலைமை நீதியரசர் சுரேந்திர குமார் சின்கா (Surendra Kumar Sinha) மறு ஆய்வு மனு தாக்கல் செய்தான்.
உச்சநீதிமன்றம் அவன் செய்த மனிதாபிமானமற்ற கொலைகளைப் பற்றிய விவரங்களைக் கூறி கடுமையான கண்டனம் தெரிவித்தது. அதுவும் 25.3.1971 அன்று அப்பாவி மக்களை / ஆசிரியைகள், மாணவர்கள், விஞ்ஞானிகள் என்று அனைவரையும் கொடூரமாகத் தாக்கி கொலை செய்ததை ஆதாரத்துடன் எடுத்துக்காட்டி மரண தண்டனையை உறுதி செய்தது.