மது விலக்கு கொண்டு வந்த ஏப்ரல் 1 முதல் நவம்பர் 30 வரையிலான கடந்த 7 மாதங்களில் மாநிலத்தில் சாலை விபத்து 19 சதவீதம் குறைந்துள்ளது. விபத்துக்களில் பலி எண்ணிக்கை 31 சதவீதம் சரிந்துள்ளது. நெடுஞ்சாலைகளில் 500 மீட்டர் தூரம் வரை மதுவிற்பனைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த தீர்ப்பு, எனது அரசு மதுவிலக்கு கொண்டு வந்ததை நகையாடிய சிலருக்கு சரியான பதிலடியாக அமைந்துள்ளது. மதுவிலக்கு குறித்த விமர்சனங்களை இந்த தீர்ப்பு இல்லாமல் செய்து விட்டது.
மதுவிலக்கு தடையால் அதற்கு செலவிடும் தொகையை பால், இனிப்புகள், உடைகள் மற்றும் பர்னிச்சர்களில் செலவிடுகின்றனர். இதனை உறுதி செய்யும் வகையில் அவற்றின் விற்பனை அதிகரித்துள்ளது.