Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

MBA படிப்பில் சேர… MAT தேர்வு

 

நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த 300-க்கும் மேற்பட்ட மேனேஜ்மெண்ட் கல்வி நிறுவனங்களில் எம்.பி.ஏ., படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் MAT என்ற பொது நுழைவுத் தேர்வை எழுத வேண்டும்.

இத்தேர்வை எழுத விரும்புபவர்கள் ஏதேனும் பட்டப்படிப்பைப் படித்திருக்க வேண்டும். இளநிலைப் பட்டப்படிப்பில் இறுதியாண்டு படித்துவரும் மாணவர்களும் இந்த நுழைவுத் தேர்வை எழுதலாம்.

காகிதத்தில் விடை எழுதக்கூடிய எழுத்துத் தேர்வு வரும் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறுகிறது. கம்ப்யூட்டர் மூலம் நடத்தப்படும் தேர்வு வரும் பிப்ரவரி 11ஆம் தேதி நடைபெறுகிறது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட நாட்டின் முக்கிய நகரங்களில் தேர்வை எழுதலாம்.

இத்தேர்வை எழுத விரும்புபவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ.1200.

விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 27.1.2017

விவரங்களுக்கு:  https://www.aima.in