Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

ஜாதகம் பார்க்காமல் திருமணம் செய்வதே சிறந்தது!

 

 

 

“கல்யாண மாலை” மோகன் பேட்டி

“கல்யாண மாலை’’ மோகன் அவர்கள். கடந்த 16 ஆண்டுகளாக திருமண ஏற்பாட்டாளராக ஆயிரக்கணக்கான மணமக்களை அறிமுகம் செய்து திருமணங்கள் நடக்கத் துணை நிற்பவர்.  

அவர் தங்கள் குடும்பத்தின் சொந்த அனுபவங் களைக் காட்டி கீழ்க்கண்ட கருத்துக்களைத் தெரிவித்தார்.

“திருமணத்தின்போது ஜாதகம் பார்க்காமல் செய்வதே சிறந்தது. பார்க்கும்போது வீணான அச்சங்கள், குழப்பங்கள் ஏற்படுகின்றன. சில நேரங்களில் நல்ல இணையர்கள் சேரமுடியாமல்  ஜாதகம் தடையாகிவிடுகிறது. எனது பெற்றோருக்கு 90 வயதுக்கு மேல் ஆகிறது. அவர்கள் திருமணம் செய்யும்போது ஜாதகம் பார்க்கவில்லை. நான் திருமணம் செய்யும் போதும் ஜாதகம் பார்க்க வில்லை என் உடன்பிறந்தோருக்கும் ஜாதகம் பார்க்கவில்லை.

என் பெற்றோரும் நாங்களும் சிறப்பாக வாழ்கிறோம். எங்கள் அனுபவத்திலேதான் இந்த அறிவுரையைச் சொல்கிறேன்’’, என்று ‘நியூஸ் 7’ தொலைக்காட்சி பேட்டியில் தெளிவாகச் சொன்னார்.