Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

பெரியார் பார்வையில் வீரமணி

 

 

 

திரு. கி.வீரமணி வெறும் ஆள் அல்ல. நம் தலைவர்போல, குருசாமியைப் போல அவர் பேசவில்லை. சற்றுத் துணிவாய்ப் பேசிவிட்டார். திரு. வீரமணி நம்மைப் போன்றவர் அல்ல – அவர் ஒரு வக்கீல். எவ்வளவோ நல்ல வாய்ப்பு அவரை அணுகக் காத்திருக்கிறது. அவற்றுக்குத் தடை ஏற்படலாம். என்னைப் பொறுத்தவரை அவருக்கு அப்படி ஏற்பட்டால் நமக்கு நல்லதாகிவிட்டது என்றுதான் கருதுவேன். ஏன்? நம் இயக்கத்திற்கு ஒரு முழுநேரத் தொண்டன் நமக்குக் கிடைத்தாலும் கிடைக்கலாம் என்கிற ஆசை. இப்போது அவர் தொண்டு அரை நேரம்; இனி அது முழு நேரமாகி விடலாம்.

– 30.10.1960இல் சென்னை – திருவல்லிக்கேணி கடற்கரை சொற்பொழிவில் தந்தை பெரியார்.