Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

கலங்கரை வாழ்த்து – கவிஞர் அறிவுமதி

துறைமுகத்துக்
கலங்
கரையே!

தூய
தந்தை
பெரியாரின்
தொடர்
உழைப்பாய்…
இழை
யளவும்
இயங்
குறியே!

பிஞ்சு வயது
முதல்
பெரியாரைப்
பின்
பற்றி
அஞ்சுவது அறியாமல்

அறியாமை
தமை
ஒழிக்க
அயராது
உழைப்பவரே!

புராணத்தை
முன்னிறுத்திப்
பொய்
சொல்ல
வருபவரை
வரலாற்றை
முன்னிறுத்தி
வாதாட
அழைப்பவரே!

வீழ்த்த
வரும்
பெரும்
பகையை
விழிப்போடு
தடுப்பவரே!

சீண்ட வரும்
சிறுமையரை
சிரித்த
படி
விரட்டுதற்குக்
களத்
தலைவர்
பெரியாரின்
கைத்
தடியை
எடுப்பவரே!

அறிவாசான்
அசல்
பதிப்பே!
ஆராரோ
நாளுனக்கு!
பெரியாரின்
தமிழ்ப்
பிள்ளைத்
தூவுகிறேன்
வாழ்த்துனக்கு!