மேனாள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் வாழ்த்துச் செய்தி!

டிசம்பர் 01-15

தொண்டறப் பணி தொடர வாழ்த்துகள்!

உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி
எஸ்.மோகன்

இந்நாட்டின் பெண்களை கால்நடை-களைப் போலவும், இன்பக் கருவிகளாகவும் கருதி நடத்தப்பட்ட நிலையில், ஈடுஇணையற்ற மிகப்பெரும் தலைவர் பெரியார், தனது புரட்சிச் சிந்தனைகளால், பிரச்சாரங்களால், செயல்-பாட்டால் அந்நிலையை மாற்றினார். ஆணுக்கு நிகரானவர்கள் பெண்கள் என்ற எண்ணத்தை தன் வாழ்நாள் முழுக்க உழைத்து, போராடி உருவாக்கினார். அவரது போராட்டங்களுக்கும், பிரச்சாரங்களுக்கும் பெரும் பயன் கிடைத்தது.

பெண்கள் அடுப்படியை விட்டு அகன்று, ஆணுக்கு நிகராகப் பணியாற்றி பொருளீட்ட வேண்டும். பெண்கள் வருவாய் ஈட்டும்போது, தன்னம்பிக்கையைப் பெறுவர். இதுவே இன்றைய அவசர அவசியத் தேவை. இந்த விழிப்பு கிராமப் புறங்களிலும் உருவாக வேண்டும்.

பெரியார் கொண்டிருந்த அதே உணர்ச்சியோடும், எழுச்சியோடும் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள், அவர் விட்டுச் சென்ற பணிகளை ஆர்வத்தோடும், அக்கறையோடும், முனைப்போடும் செய்து வருகிறார். இதனால் உலகெங்கும் உள்ள மக்களின் பெரும் பாராட்டுக்கும் போற்றுதலுக்கும் உரியவராய் விளங்குகிறார். அவரின் 84ஆம் பிறந்த நாளில், அனைத்துத் தமிழர்களின் வாழ்த்துக்களோடு இயக்கம் சார்ந்த தம் பணியை அவர் தொடர்ந்து செய்ய, தமிழினத்தின் போராளியும், பாது-காவலருமான அவரை உளமாற வாழ்த்துகிறேன்.

 

 உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி
ஏ.ஆர்.லட்சுமணன்

 

திராவிடர் கழகத் தலைவர் டாக்டர் கி.வீரமணி அவர்களின் 84ஆவது வயதில் 02.12.2016 அன்று அடியெடுத்து வைப்பது அறிந்து மகிழ்ந்தேன். பெரியாரின் புரட்சிகர-மான சமுதாய இயக்கத்தின் கட்டுப்பாடுமிக்க தொண்டரான இவர், பெரியாரால் தொடங்கி நடத்தப்பட்டு, அடுத்து மணியம்மையாரால் தலைமை-யேற்று நடத்தப்பட்ட இயக்கத்தினை அவருக்குப் பின், பெரியார் சிந்தனை ஏணியில், அவரின் அடிச்சுவட்டில் தலைமையேற்று நடத்திவருகிறார்.

வரலாற்றுரீதியாக ஒடுக்கப்பட்டு, உரிமை இழந்த மக்களின் உயர்வுக்கும், உரிமைக்கும் மானமீட்புக்கும் நாடு தழுவிய அளவில் முற்போக்குச் சக்திகளை ஒருங்கிணைத்து, வளர்த்து, வழிநடத்தி வருகிறார். எனவே, அவரது பிறந்த நாள் “சுயமரியாதை நாள்’’ ஆகக் கொண்டாடப்-படுவது பொருத்தமுடையது.

டாக்டர் கி.வீரமணி அவர்கள் நல் உடல்நலத்துடன் பெரியாரின் கொள்கை வழித் தொண்டறப் பணியை இன்னும் பல்லாண்டு இயக்கத்தை வழிநடத்துவதன் மூலம் செய்ய அவரின் 84ஆவது பிறந்த நாளில் உளமாற வாழ்த்துகிறேன்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *