‘அவுக வீட்ல எப்பவும் கருப்பட்டிக் காபிதான். சீனி எல்லாம் கிடையாது’ என ஏழ்மையைக் குறிப்பிட்ட காலம் உண்டு. இப்போது நிலைமை தலைகீழ்.
நாட்டு வெல்லத்தைக் காட்டிலும், சீனியைக் காட்டிலும் பனங்கருப்பட்டிதான் மிக உசத்தியானது. பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்பு, துத்தநாகம் (ஞீவீஸீநீ) எனும் கனிமங்களையும் சேர்த்துத் தருவதால், உடலை உறுதிசெய்வதில் முக்கியப் பங்காற்றுகிறது பனங்கருப்பட்டி. குறிப்பாக,Natural Killer Cells பணி மற்றும் மிலி-2 உருவாக்கம் இரண்டுமே புற்றைத் தடுக்க மிக முக்கியமானவை. வெள்ளை இனிப்பு, இந்தப் பணிகளுக்கு எதிராக இருக்க, கறுப்பு இனிப்பான பனை இதற்குப் பயன் அளிக்கும்.
கூடவே லோ கிளைசிமிக் தன்மை உடையதால், ஒரு குடும்பத்தில் புற்றுநோய் பாரம்பர்யம் இருப்பதாகத் தெரியவரும் பட்சத்தில், வீட்டில் உள்ள மற்ற அனைவருக்கும் குழந்தை முதலே இனிப்பு தேவைப்படும் இடத்தில் எல்லாம் பனங்கருப்பட்டியைப் பயன்படுத்தலாம். ‘லோ கிளைசிமிக் உணவுகள், கருப்பை மற்றும் மார்பகப் புற்றின் வருகையைக் குறைக்கும்’ என்கிறார்கள் நவீன உணவியலாளர்கள்.
இன்னொரு முக்கிய விஷயம், கருப்பட்டியின் பயனும் வணிகமும் கூடியதில் சீனியை வாங்கி பனைச்சாற்றில் விட்டு சேர்த்துக் காய்ச்சி, போலி கருப்பட்டி தயாரிக்கும் கொள்ளைக் கும்பல் தமிழ்நாட்டில் ஆங்காங்கே அதிகரித்து வருவதாகவும் சொல்லப்-படுகிறது. நல்ல பனைவெல்லத்தைத் தேடி வாங்குவதும் ரொம்ப முக்கியம்.