சுயமரியாதை திருமணத்தால் வீட்டுக்கு மட்டுமல்ல! நாட்டுக்கும் ஏற்பட்ட பலன்!

நவம்பர் 16-30

சுயமரியாதைத் திருமண முறையினால், திருமணம் செய்துகொள்ளும் வாழ்க்கைத் துணைவர்களான அவ்விருவர் மட்டும் பயன் அடையவில்லை. அதற்கு மேலாக சமுதாயம், நாடு மிகப் பெரிய பயனை அடைந்துள்ளது!
எடுத்துக்காட்டாக,

1. மற்ற பெரும்பாலான திருமணங்கள் மத முறைகளைச் சார்ந்தவைகளாக உள்ள நிலையில் சுயமரியாதைத் திருமண முறை -_ மதச்சார்பற்ற தன்மையை (Secularising the Marriage System) புகுத்தியதாக அமைந்துள்ளது முலம் எல்லோருக்கும் பொதுவாக உள்ளது.

2. மக்கள் தொகைக் கட்டுப்பாடு _ குடும்பக் கட்டுப்பாடு பிரச்சாரம்.

3. வரதட்சணை என்னும் கொடுமை ஒழிந்த நிலை.

4. பெண்ணடிமை நீங்கியதால், துணிச்சலுடன் செயல்பட்டு, மானிடத்தின் வலுவற்ற பகுதி மகளிர் குலம் என்பது மாற்றப்பட்டது.

5. சிக்கனம் _ மேடைகளில்கூட திருமணம், ஆடம்பரம் தவிர்ப்பு, பகட்டு இல்லை.

6. ஜாதியின் அடித்தளம் அதிரும் நிலை!

7. மற்ற மதச் சடங்குகளை அந்தந்த மதவாதிகள்தான் நடத்திட முடியும்; சுயமரியாதைத் திருமணத்திற்கு எம்மதத்தவர், எம்மதமும் சாராதவர் _ எவராயினும் தலைமை ஏற்கலாம் _ இப்படிப் பலப்பல.
(சுயமரியாதை திருமண மசோதா நிறைவேற்றப்பட்ட நாள் 28.11.1967)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *