உலகிலேயே மிக உயரமான கல் ஸ்தூபி அமெரிக்காவின் முதல் ஜனாதிபதியான ஜார்ஜ் வாஷிங்டனுக்கு எழுப்பப்பட்ட நினைவுச் சின்ன ஸ்தூபியாகும். வாஷிங்டன் நகரிலுள்ள இந்த ஸ்தூபியின் உயரம் 166.6 மீட்டர். ஸ்தூபியின் உள்ளே 151.5 மீட்டர் உயரத்தில் ஒரு ‘பார்வை அறை’ உள்ளது. இங்கிருந்து வாஷிங்டன் நகரம் முழுவதையும் பார்வையிட முடியும். அந்த அறைக்குச் செல்ல உள்பக்கமாக 898 படிகள் கொண்ட ஒரு பாதை கட்டப்பட்டிருக்கிறது. அதற்கு லிப்ட் வசதியும் இருக்கிறது. இந்த நினைவுச் சின்னம் 1848இல் கட்ட ஆரம்பித்து 36 ஆண்டுகளுக்குப் பிறகு முடிக்கப்பட்டது. இந்த நினைவுச் சின்னம் எழுப்புவதற்காக அஸ்திவாரம் அமைந்தபோது ஒரு பேச்சாளர் இப்படி சொன்னார்:
“இந்த நினைவுச் சின்னத்தை ஆகாயத்தைத் தழுவும்படியாகக் கட்டுங்கள். ஆனால் நீங்கள் ஜார்ஜ் வாஷிங்டனுடைய சுபாவத்தின் மேன்மை அளவுக்கு, அவ்வளவு உயரமாகக் கட்டமுடியாது.’’
உண்மைதானே!