அண்மையில் அகமதாபாத்தில் நடை-பெற்ற உலகக் கோப்பை கபடி போட்டியில் பங்கேற்ற ஒரே தமிழர். 38_29 என்ற புள்ளிக் கணக்கில் ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்ற, இந்திய அணியில் அனைவராலும் ‘அண்ணா’ என்று அழைக்கப்-படும் பாசத்திற்குரியவர் சேரலாதன்.
அவர் தன் சாதனை பற்றிக் கூறுகையில், “பன்னிரெண்டு, பதிமூணு வயசுல ஆரம்பிச்சது. தஞ்சாவூர் பக்கத்துல இருக்கிற திருச்சிணம்-பூண்டிதான் சொந்த ஊர். காலையிலேருந்து இதுதான் விளையாட்டு. அதுதான் என்னோட எதிர்காலமாகவும் இருக்கும்னு நான் நினைச்சதில்லை. ஆனால், ஆர்வம் மட்டும் இருந்துகிட்டே இருந்தது. நான் விளையாடற வேகத்தைப் பார்த்துட்டு, சன் பேப்பர் மில்லுல வேலை கொடுத்தாங்க. அவங்க அணியில விளையாடினேன். அப்புறம், தமிழ்நாடு டீம், பின்னாடி இந்திய அணின்னு தொடர்ச்சியாக முன்னேற்றம்தான்.
ஆனால், இந்த முன்னேற்றங்கள் லேசுல வந்ததில்ல. ஒவ்வொரு கட்டத்திலும் ஏராளமான சவால்கள். உழைப்பு, பயிற்சி, திடசித்தம், பொறுமை இவைதான் என்னை வழிநடத்துச்சு. கடுமையாக உழைச்சா வளர்ச்சி உண்டுங்கறது என்னோட நம்பிக்கை. ஒண்ணு இல்ல, ரெண்டு இல்ல, இருபத்தைஞ்சு வருஷமா உழைக்கிறேன். எனக்குன்னு ஒரு பெயர், ஒரு அடையாளத்தை, ஒரு இடத்தை ஏற்படுத்திக்கற போராட்டம் இது. அதுல வெற்றி அடைஞ்சிருக்கேன்னுதான் நினைக்கிறேன்.’’
“முறையான பயிற்சியும் ஒழுக்கமும்தான் கபடியில மிக முக்கியமானவை. ஸ்பீட் டிரெயினிங் என்று ஒன்று உண்டு. வேகமாகச் செயல்படுவது, உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கான பயிற்சி என்பது இன்னும் சிரமமானது. சாதாரணமா மண்தரையில விளையாடறது வேற, மேட்ல விளையாடறது வேற. பயங்கரமா அடிபடும். அதுவும் கபடிங்கறது உடல் வலுவைப் பொறுத்த விஷயம்.
பயரங்கர ஃபிட்னஸ் வேணும். காலைப் பிடிச்சு இழுப்பாங்க. உடம்பால மோதுவாங்க. இந்த விளையாட்டுல உடம்புதான் மூலதனம். வெறிதான் வழிநடத்தும். அதேசமயம், யோசிச்சு, வியூகம் வகுத்தும் விளையாடணும். உடம்பும் மூளையும் ஷார்ப்பா வேலை வெய்யணும். அதனால, காலையிலையும் சாயங்காலமும் இரண்டு மணிநேரம் ஃபிட்னஸ் வகுப்புகள் நடக்கும். அப்புறம், கபடி பயிற்சி.
ஈரான் நல்ல டீம். அவங்களோடு மோதும்போது எப்படி விளையாடணும்னு திட்டமிட்டோம். முடிந்தவரை ரைடில் பாயின்ட் எடுக்கவேண்டும் என்பதுதான் திட்டம். சரியாக கேட்ச் போட்டால்தான் எதிரணியின் ரைடர் பிடிபடுவார். இல்லை-யென்றால், நழுவிப் போயிடுவார். பாயின்டும் போயிடும். இதையெல்லாம் யோசிச்சு, அணியோட அணுகுமுறையை வகுத்துக் கொண்டோம்.
இறுதிப் போட்டியில முதல் பாதியில் ஈரான் முன்னேறிடுச்சு. இரண்டாம் பாதியில நம்ம டீம் வேகமாக விளையாடி, கோப்பையை வென்றோம்.
புரோ கபடிதான். ஏராளமானவர்கள் புரோ கபடி குழுக்களில் விளையாடுகிறார்கள். இவ்வளவு ஆர்வமா! என்று ஆச்சர்யமே ஏற்பட்டது. அதுல நல்லா விளையாடியவர்-களை அடையாளம் கண்டு, 26 பேர் கொண்ட டீம் உருவாச்சு. அதுலேருந்துதான், உலகக் கோப்பைக்கு வீரர்கள் தேர்வு செய்யப்-பட்டார்கள். புரோ கபடி இல்லன்னா, புதிய வீரர்களைக் கண்டுபிடிக்க முடிஞ்சு இருக்காது.
போதுமான அளவு ஆதரவு இல்லை. அந்தக் காலத்துல, தெற்கு ரயில்வே டீம், மின்சார வாரிய டீம் எல்லாம் இருந்தது. வேலை-வாய்ப்பும் கிடைச்சுது. அந்தந்த டீமும் ரொம்ப நல்லா விளையாடினாங்க. இப்போ அந்த டீமெல்லாம் இல்லாமயே போயிடுச்சு. அதனாலதான் நான், தென்மத்திய ரயில்வேயில ஹைதராபாத்துல இருக்கேன்.
தமிழகத்துல தனியார் துறையும் அரசுத் துறையும் ஊக்குவிக்குமானால், இங்கேயுள்ள பல வீரர்கள் முன்னுக்கு வருவார்கள்.
மனைவி அனுராதா தந்த ஆதரவுதான் எனக்குப் பெரிய பலம். வெற்றி பெற்றவுடன் ரொம்ப சந்தோஷப்பட்டார். மகன் ஆதித்யா, எட்டாவது படிக்கிறான். அவனுக்கு கபடியில் நிறைய ஆர்வம் உண்டு. வருங்காலத்தில் அவனையும் நல்ல கபடி பிளேயராக உருவாக்குற திட்டம் இருக்கு.
கபடி விளையாட எல்லோருக்கும் தெரியும். அதுவும் கிராமத்து ஏழை எளிய இளைஞர்-களக்கு நன்றாகவே தெரியும். பிரச்சினை, இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ப புதிய டெக்னிக்குகளை எப்படி கத்துக்கறதுங்கறது-தான். மேலும், மாநில அளவில், தேசிய அளவில் என்னென்ன வாய்ப்புகள் இருக்கு, அதற்கு எப்படி முன்னேறணுங்கறது பல இளைஞர்-களுக்குத் தெரியாது. நானே தட்டுத் தடுமாறித் தான் முன்னே வந்தேன்.
“அந்தக் கஷ்டம் மற்றவர்களுக்கு இனி ஏற்படக் கூடாது என்பதற்காக திருச்சியிலோ, தஞ்சாவூரிலோ கபடிக்குன்னு ஒரு பயிற்சி மையம் ஆரம்பிக்கிற எண்ணம் எனக்கு இருக்கு. அதன் மூலமா இளைஞர்களுக்கு கபடியைக் கத்துக்-கொடுத்து, பெரிய அளவுக்கு முன்னுக்குக் கொண்டு வர விரும்புகிறேன்’’ என்கிறார்.