Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

பெரியார் கொள்கையை ஏற்றுப் போற்றிய வினோபா பாவே!

 

 

 

 

மக்களின் மூடநம்பிக்கைகளையும், தவறான கண்மூடித்தனத்தையும், குருட்டுப் பழக்கங் களையும் ஒழிப்பதற்காகப் பெரியார் அவர்கள் சேவை செய்து வருவதை நான் ஆதரிக்கிறேன். நானும் அதே துறையில் பணியாற்றி வருகிறேன். சிலைகளை வணங்குவது பக்தியல்லவென்றும், ஏழைகளுக்குத் தொண்டு செய்வதுதான் பக்தியென்றும் பிரச்சாரம் செய்து வருகிறேன்!

இன்றுள்ள பிராமணர்கள் உண்மையான பிராமணர்கள் அல்லர்; போலிகள்! மண்ணினால் செய்து வர்ணம் பூசப்பட்ட வாழைப் பழத்தைப் போன்றவர்கள்.

பொதுத்தொண்டு செய்யாத ஆஸ்திகர் களைவிட பொதுத் தொண்டு செய்கிற நாஸ்திகர்களே சிறந்தவர்கள்.

குழந்தைகள் வாயில் ஊற்ற வேண்டிய பாலை கல்லின் தலை மீது ஊற்றுவது மகாபாவம்!

கோவில்களுக்கு நில தானம் செய்வது _- கோவில்களை முதலாளிகளாக்கும் பாபச் செயல்!

இராமாயணம் ஒரு கட்டுக் கதையாதலால் பல தவறுகளும், முரண்பாடுகளும் இருக்கின்றன.

நரகாசூரனைக் கிருஷ்ண பகவான் கொன்றதாகச் சொல்லப்படுவதெல்லாம் வெறும் புராணம்.

என்று நறுக்கு தைத்தாற்போல், சுருக்கென்று உரைக்க வினோபா பாவே கூறியவை, மக்கள் சிந்திக்க வேண்டிய மணிமொழிகள்!

(19.01.1956 அக்டோபர் 29ஆம் தேதி கோவை பழையகோட்டையில் பேசியபோது கூறியவை)