ஆசிரியர் பதில்கள்

நவம்பர் 01-15

 

 

 

கே:       வெடிப்பொருட்களை ஒதுக்குப் புறத்தில் வைக்காமல், மக்கள் மிகுந்த இடங்களில் வைக்க அனுமதியளித்த அலுவலர்தானே முதன்மைக் குற்றவாளி?

                – சு.காந்திமதி, விழுப்புரம்

ப:           நிச்சயமாக! ‘நோய்நாடி நோய் முதல் நாடுதல்தான்’ நம் நாட்டில் இல்லையே! அதன் விளைவே இது!

கே:       இடஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட தகுதித் தேர்வுகளை மத்திய அரசு அறிமுகம் செய்வதை நாடுதழுவிய அளவில் ஒருங்கிணைந்து எதிர்க்க தாங்கள் முயற்சி மேற்கொள்வீர்களா?

                – அ.யாழினி, தூத்துக்குடி

ப:           தமிழ்நாடு முதலில் காப்பாற்றப்பட வேண்டும். நம் கவனம் இதில்தான் முதலில். பிறகே மற்றவை. மற்றவர்களின் பக்குவம் _ சமூகநீதி உணர்வு பாலபாடம்; நாம் ‘மேல் பட்டதாரி’அதில். எனவே, இப்பணியின் துவக்கம் முக்கியம்.

கே:       சல்லிக்கட்டு வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்திய மத்திய அரசு, காவிரி நீர்ப் பங்கீட்டில் செயல்படுத்தாது சூழ்ச்சியாகச் செயல்படுவது மோசடிச் செயல் அல்லவா?

                – கு.சீத்தாபதி, சென்னை-18

ப:           முழுக்க முழுக்க மோசடி; அரசியல் பார்வை _ அப்பட்டமாக. 2017 கர்நாடக சட்டமன்றத் தேர்தல் பார்வை _ கனவு!

கே:       கடவுளால் எதுவும் இவ்வுலகில் நிகழ்வதில்லை யென்று நன்கு தெரிந்தும் அந்த நம்பிக்கையை விடாமல் மக்கள் மந்தைகளாய் செயல்பட என்ன காரணம்?

                – நாத்திகன் ச.கோ., பெரம்பலூர்.

ப:           பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக ஊறிப்போன போதை இது; இதை அசைத்து விட்டோம்; அறவே ஒழிப்பது அவ்வளவு எளிதான பணியா? விஞ்ஞானிகள், டாக்டர்கள்கூட இந்த ‘வியாதி’யிலிருந்து விடுபட-வில்லையே!

கே:       உயிரிழப்பு, விலங்கு வதை என்று சொல்லி சல்லிக்கட்டைத் தடுக்கும் நீதிமன்றங்கள், அதைவிட அதிகம் பலிகொள்ளும் பட்டாசு தயாரிப்பு-களுக்குத் தடை விதிக்காதது ஏன்?

– நா.கலைச்செல்வி, புதுவை-1

ப:           மிலியன் டாலர் கேள்வி! பதில் வெளிப்படை! (லாபநோக்கம்தான்!)

கே:       அரசியலமைப்புச் சட்டத்தை ஆட்சியாளர்களே புறக்கணிக்கும் நிலையை மாற்ற சரியான நடவடிக்கை என்ன?

                – நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்

ப:           அதைத்தான் ‘வேலியே பயிரை மேயும் நிலை’ என்று கூறுவது!

கே:       வடமாநிலத்தில் முதல் மதிப்பெண் பெற்ற தாழ்த்தப்பட்ட மாணவனை உயர்ஜாதி மாணவர்கள் தாக்கியிருப்பது எதைக் காட்டுகிறது?

                – க.மணிமாறன், சேலம்-1

ப:           இன்னமும் உள்ள ஜாதி ஆணவத் திமிர் _ தாழ்த்தப்பட்டோர் உயருவதை உயர் ஜாதி, _ இடைப்பட்ட ஜாதியினர்க்கு சகிக்க மனம் வரவில்லையே! அங்கு பெரியார் பிறக்காததே மூலகாரணம்!

கே:       பெண்கள் முக அழகைப் பராமரிக்க பசு மூத்திரம் சிறந்தது என்று குஜராத் பசுப் பாதுகாப்பு வாரியம் அறிவுரை வழங்கியுள்ளது ஏற்புடையதா?

                – கு.இலட்சுமி, சென்னை-63.

ப:           முந்தைய “மொரார்ஜியின்’’ வைத்தியத்தை விட (Auto Urine Theropy) இது ஒருவகை புது சிகிச்சை முறைபோலும்!

                இதிலும்கூட எருமை மூத்திரம்  பாரபட்சமா? _ ஏனெனில் அது கருப்பு போலும்!

கே:       வரப்போகும் உ.பி. தேர்தல் களத்தில் ஆரிய பார்ப்பன ஆர்.எஸ்.எஸ். சதியை முறியடிக்க வலுவான அணி அமைக்க தாங்கள் முயற்சிப்பீர்களா?

                – இல.சங்கத்தமிழன், செங்கை

ப:           உ.பி.யில் இயல்பாகவே அது நடந்துவருகிறது; நாமும் அங்கே செல்ல வேண்டிய தேவை; ஏற்கனவே பெரியார் சென்று-விட்டார்! ஸீ

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *