‘இந்தியாவில் சுமார் 8.4 கோடி குழந்தைகள் ‘பள்ளிக்கூடம் செல்வதில்லை’ என்ற அதிர்ச்சியான தகவலை, மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. ஆனால், பள்ளி முடிந்து மாலை மற்றும் விடுமுறை நாட்களில் பகுதி நேரமாக வேலை செய்யும் குழந்தைகளின் எண்ணிக்கையோ சுமார் 78 லட்சம். நமது கல்வி உரிமைச் சட்டத்தின்படி 5_17 வயது வரைக்குமான கு£ந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்கப்பட வேண்டும். ஆனால், பெரும்பாலான குழந்தைகள் வேலைக்குச் செல்லும் நிலைமைதான் இங்கு நிலவுகிறது. ஆண் குழந்தைகளுக்கு நிகராகப் பெண் குழந்தைகளும் வேலைக்குச் செல்வதாக இந்தக் கணக்கெடுப்பு சொல்கிறது. வேலைக்குச் செல்கின்ற வளர்ந்த பெண்களைவிட, பெண் குழந்தைகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கிறது. இதற்கு முக்கியக் காரணம், அவர்களுக்குப் போதிய கல்வி சரியாக சென்றடையாததுதான் என்கிறது இந்தக் கணக்கெடுப்பு. சுதந்திரமடைந்து இவ்வளவு ஆண்டுகளாகியும் இன்னும் சரியான கல்வியையே மக்களுக்கு கொடுக்க முடியாதபோது வல்லரசு கனவு காண்பது கேலிக் கூத்தாகும்.
கார்ப்பரேட் வளர்ச்சி மக்கள் வளர்ச்சியோ நாட்டின் வளர்ச்சியோ ஆகாது என்பதை மத்திய அரசு மனதில் கொள்ள வேண்டும்.