உண்மைக்கு நிகர் உண்மையே!
அக்டோபர் 16_31, 2016 நாளிட்ட உண்மை மாத இதழைப் படித்துப் பரவசமடைந்தேன். இதழில் வெளிவந்த செய்திகள் அனைத்தும் பாதுகாத்துப் போற்றப்பட வேண்டிய வரலாற்று ஆவணங்கள் ஆகும்.
1. ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சுட்டிக்-காட்டியபடி மதச்சார்பற்ற இந்தியாவில்தான் மத விடுமுறைகள் அதிகம் என்ற புள்ளி விவரம் அரசுகளைச் சிந்திக்க செய்யும்.
2. தமிழர் தலைவர் அவர்களின் நூற்றாண்டு காணும் வள்ளல் எம்.ஜி.ஆர்! என்ற கட்டுரை சிறப்பாகவும், சீரிய வரலாற்றுக் குறிப்புகளை உள்ளடக்கியதாகவும் இருந்தது.
3. நான் இந்து அல்ல _ திராவிட மதம் என்று எம்.ஜி.ஆர் கூறிய செய்திகளை அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் ஆணித்தர-மாக கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் வாரி வழங்கியுள்ளார்.
4. 01-_11_1936 நாளிட்ட குடிஅரசு ஏட்டில் தீபாவளிப் பண்டிகை பற்றி தந்தை பெரியார் எழுதிய கட்டுரை காலத்தின் அருமை கருதி தக்க தருணத்தில் வெளியிடப்பட்ட கருத்தாழமிக்க கருத்துக் கருவூலம் ஆகும்.
5. எழுத்தாளர் மஞ்சை வசந்தன் அவர்களின் கட்டுரை, ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகளை எம்.ஜி.ஆர் முழு மூச்சுடன் எதிர்த்து நின்ற வரலாற்றுத் தகவல்கள் மதவெறியர்களுக்குச் சரியான சாட்டை அடி.
6. கெ.நா.சாமி அவர்களின் கட்டுரைத் தலைப்பே விஷமிகளை ஒடுக்க வேண்டிய அவசர _அவசியத்தை ஒளிப்படங்களுடன் எடுத்து இயம்பிய பாங்கு அருமை.
7. பெரியார் ஒரு மகத்தான தத்துவம்! என்ற எம்.ஜி.ஆர் கட்டுரை, பேரறிஞர் அண்ணா இல்லையென்றால் இருண்டு கிடந்த தமிழ்நாட்டிற்கு ஒளி கிடைத்திருக்காது என்ற வரிகள் வைர வரிகளாக ஜொலிக்கின்றன.
இவ்வாறு, கண்கவர் வண்ணங்களில் எடுப்பாகவும், மிடுக்காகவும் செரிவான _ நிறைவான கருத்துக்களைத் தாங்கி வெளிவரு-கின்ற ‘உண்மை இதழுக்கு நிகர் உண்மையே!’
இளைஞர்கள் கட்டாயம் படித்து பரப்ப வேண்டும்!
– சீ. இலட்சுமிபதி,
தாம்பரம், சென்னை-45.