கா.சு.பிள்ளை தந்தை பெரியாரின் பார்ப்பன எதிர்ப்புக் கொள்கையில் தம்மை முற்றாக ஒப்படைத்துக் கொண்டவர். தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக முடிவெடுத்த தமிழறிஞர்களில் முதன்மையானவர்.
அந்தக் காலத்திலேயே எம்.எல். படித்த ஒரே ஆரியரல்லாதார் என்பதால் எம்.எல்.பிள்ளை என்று அழைக்கப்பட்டவர். தமிழில் 120க்கு மேற்பட்ட நூல்களை எழுதியவர். தென்கிழக்கு ஆசியாவின் முதல் குற்றவியல் சட்ட நூலை எழுதி முதல் பரிசு பெற்றவர்.
தாகூர் சட்ட விரிவுரையாளர் பட்டம் பெற்றவர்.
(கா.சு.பிள்ளை பிறந்த நாள் 05.11.1888)