பளிர்

ஜூலை 16-31

முக்காலமும் உணர்ந்த ஜோதிடர்

போடி, நரசிங்கபுரத்தில் வசித்துவரும் ஜோதிடர் சிவகுமார் 15 ஆண்டுகளாக ஜோதிடம் பார்த்து பில்லி சூனியம், செய்வினை எடுக்கும் தொழிலைச் செய்து வருபவர். கேரளாவில் உள்ள கோரம்பாறையைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் தோட்டத்தில் செய்வினைப் பொருள் இருப்பதாகக் கூறினார்.

முட்டை வடிவிலிருந்த பொருளைக் கண்டுபிடித்து பரிகாரம் செய்வதற்காக அவருடைய வீட்டிற்குக் கொண்டுவந்து பிரித்துப் பார்த்துள்ளார். பாதிப் பிரித்த நிலையில் உள்ளேயிருந்த பொருள் வெடித்ததில் அவரது கைவிரல்கள் பாதிப்படைந்தன.


பூஜையின் பலன்

பாதிப் பிரித்தபோது வெடித்ததால் தப்பித்து விட்டேன். முழுமையாகப் பிரித்த  பிறகு வெடித்திருந்தால் இறந்திருப்பேன் என முக்காலமும் உணர்ந்த ஜோதிடர் சிவகுமார் கூறியுசென்னையிள்ள புளியந்தோப்புப் பகுதியில் வசிக்கும் வர்கீஷ் (33) தனியாக வீட்டில் இருந்தபோது உடுக்கை அடித்துக்கொண்டு ஒருவர் வந்துள்ளார். அவர்,  உங்கள் வீட்டில் விரைவில் கெட்ட நிகழ்வுகள் நடக்க உள்ளன. நடக்கப் போவதைத் தடுக்க பூஜை செய்யவேண்டும் என்று கூறியுள்ளார்.

வர்கீஷ் சம்மதித்ததும் பூஜை செய்ய ஆரம்பித்துள்ளார். அப்போது, தங்க நகைகளை வைத்து பூஜை செய்ய வேண்டும். எனவே, வீட்டிலுள்ள பாத்திரத்தினுள் நகையினை வைக்கச் சொல்லி, பூஜை செய்து முடித்துவிட்டு 4 நாள்கள் கழித்து பாத்திரத்தைத் திறந்து பார்க்கச் சொல்லியுள்ளார்.

பூஜை முடித்து 4 நாள்கள் கழித்து பாத்திரத்தைத் திறந்து பார்த்தபோது நகைக்குப் பதில் கல் இருந்துள்ளது. பதற்றமடைந்த வர்கீஷ் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார்.ள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *