Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

மாதுளையின் மகத்துவம்

மாதுளை இரத்த விருத்திக்கும், இரத்த சோகையைத் தடுக்கவும் உதவுகிறது. இதில் உள்ள இரும்புச் சத்தும், விட்டமின் சி யும் மிகவும் பயன்தரக்கூடியது. அதிக அளவு நார் சத்து உள்ளது. பாஸ்ரசும், கால்சியமும் உள்ளன.

புற்றுநோய் தீர்க்கும்:

தினம் ஒரு மாதுளை சாப்பிட்டால் ஒரு சில மாதங்களில் புற்றுநோய் குணமாகும்.

மாதவிடாய் போக்கு:

மாதவிடாய் நிற்கும் பருவத்தில் அதிக இரத்தப் போக்கு இருக்கும். சிலருக்கு மாதவிடாய் தள்ளிப் போகும். மாதுளை நாள்தோறும் சாப்பிட்டால் இச்சிக்கல்கள் தீரும். மாதுளை தோலை அலசி, நீரில்போட்டு கொதிக்க வைத்து அதன்  சாற்றைப் பருகலாம்.

வயிற்றுப் புண்:

வயிற்றுப்புண்ணை ஆற்றும், குடல் சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகளை மாதுளம்பழம் தீர்க்கும்.