கழிவுகளை காசாக்கி வழிகாட்டும் இளைஞர்!

செப்டம்பர் 16-30

இந்தியா முழுக்க ஒவ்வொரு ஆண்டும் 43 மில்லியன் டன் கழிவுகளை வீசி எறிகிறோம். இதன் மதிப்பு சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய். இதை முறையாகப் பயன்படுத்தினால் நாடும் சுத்தமடையும் நமக்கும் காசு கிடைக்கும் என்கிறார் கேரளாவின் எர்ணாகுளத்தைச் சேர்ந்த மேத்யூ.

இவர் செய்யும் பணி தொழிற்சாலைகள், பள்ளிகள், வீடுகள்… என 3,200 இடங்களில் இந்த நிறுவனத்தின் பைகள் வைக்கப்பட்டுள்ளன. கழிவுப் பொருட்கள் அனைத்தையும் இந்தப் பைகளில் சேகரிப்பார்கள். பைகள் நிரம்பியதும், இணையதளம் அல்லது பேப்பர் மேன் நிறுவனத்தின் டோல் ஃப்ரீ எண்ணில்தகவல் தெரிவிக்கப்படும்.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் 270 காயலான் கடைக்காரர்களை ஒருங்கிணைத்து, வாடிக்கையாளர்களைக் கனிவோடு அணுகுவதற்கான பயிற்சியும், அய்.டி. கார்டும் கொடுத்து பேப்பர் மேன் இணைய-தளத்தோடு இணைத்திருக்கிறார் மேத்யூ. எந்தப் பகுதியில்இருந்து தகவல் வருகிறதோ, அங்கு இருக்கும் காயலான் கடைக்காரர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் செய்தி அனுப்பப்படும். அவர் உடனே, அந்த வீட்டுக்குச் சென்று கழிவுப் பொருட்களை எடைபோட்டு எடுத்துக்கொண்டு அதற்கு உரிய ரசீதை அவர்களிடம் தருவார். விரும்பினால் கழிவுப் பொருட்-களைத் தருவோர் பணம் பெற்றுக் கொள்ளலாம். இல்லை என்றால், தொகை பேப்பர் மேன் நிறுவனம் மூலம், குழந்தைக் கல்வி, இளைஞர் மேம்பாடு, முதியோர் பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளில் ஆக்க-பூர்வமாகச் செயல்படும் 38 தொண்டு நிறுவனங்களில், ஏதேனும் ஒன்றுக்குப் போய் சேரும். யாருக்கு இந்தப் பணம் போய்ச் சேர வேண்டும் என்பதை, கழிவுப் பொருட்களைத் தருபவரே முடிவு செய்யலாம்.

“சென்னையில் ஒரு நாளுக்கு 4,500 டன் குப்பைகள் சேருது. அதை அப்படியே அள்ளிப்போய் கொடுங்கையூரிலும், பள்ளிக்-கரணையிலும் கொட்டுறாங்க. உண்மையில், கழிவுகள்னு நாம அள்ளிட்டுப் போய் கொட்டுற எல்லாமே பணம், 40 சதவிகிதப் பொருட்கள் மறுசுழற்சி செய்யக்கூடியவை; 55 சதவிகிதப் பொருட்கள் மக்கக்கூடியவை; வெறும் 5 சதவிகிதமே ஒதுக்கவேண்டிய கழிவுகள், உருவாகிற இடத்திலேயே கழிவுகளைச் சரியாப் பிரிச்சுட்டா கழிவுனு ஒண்ணு சேரவே சேராது. ஆனா, நிறையப் பேர் அதைப் பொறுப்பா செய்றது இல்லை. கை போன போக்குல தூக்கி வீசுறாங்க. தெருக்கள், கால்வாய்கள்னு எங்கே பார்த்தாலும் குப்பைகள்… கொசு.. சுகாதாரக் கேடு… சூழல் பாதிப்பு!

நம் நாட்டுல, சூழலியல் பாதிப்பு, வேஸ்ட் மேனேஜ்மென்ட், மறுசுழற்சி பற்றி எல்லாம் நிறையப் பேசுறாங்க. ஆனால், அதையே வாழ்க்கையா அமைச்சு செயல்படுறவங்க காயலான் கடைக்காரங்க. அவங்களுக்கு இந்தச் சமூகத்தில எந்த அங்கீகாரமும் கிடைக்கலை. அதை யாரும் ஒரு வணிகமாகக் கூடக் கருதுறது இல்லை. இதை எல்லாம் யோசிச்சுத்தான் நிறுவனத்தை ஆரம்பிச்சேன்.

‘இதை ஒரு தொழிலா, லாபகரமா செய்ய முடியுமா?’னு நிறைய நண்பர்கள் கேட்டாங்க. லாபத்தைவிட ஒரு நல்ல முன்னுதாரணம்தான் முக்கியம். ரெண்டரை வருஷத்துக்கு முன்னாடி இதுக்கான விதையை விதைச்சேன். ஒரு சின்ன டீம்.. வீடுவீடாப் போய்ப் பேசினோம். பள்ளிகள், தொழிற்சாலைகள்னு நிறையப் பேர் இதுல இணைய முன்வந்தாங்க. காயலான் கடைக்காரர்களுக்கு முதல்ல விஷயத்தைப் புரியவைக்க கொஞ்சம் சிரமம் இருந்தது. ஒரு கட்டத்துக்கு மேல அவங்களும் படிப்படியாக விரும்பி இணைஞ்சாங்க. இன்னைக்கு, எங்க களம் விரிவு அடைஞ்சிருக்கு. எங்களின் மாதப் பரிவர்த்தனைகள் லட்சம் ரூபாய்களைக் கடந்திருக்கு. இன்னும் நிறையக் கனவுகள் வெச்சிருக்கோம்…’’ _ புன்னகை மாறாமல் பேசுகிறார் மேத்யூ ஜோஸ்.

காயலான் கடைக்காரர்களிடம், மொத்த வணிகத்தில் அய்ந்து சதவிகிதமும், தொண்டு நிறுவனங்களிடம் மொத்த நிதியில் 10 சதவிகிதமும் நிறுவனத்துக்காக வாங்குகிறார் மேத்யூ. சம்பளம், அலுவலக நிர்வாகம், லாபம் எல்லாம் அவற்றில்தான்.

“பி.காம் முடிச்சவுடனே வேலைக்குப் போயிருந்தா இப்போ 40 ஆயிரம் ரூபா சம்பளம் வாங்குவேன். இதுலயும் அது கிடைக்கத்தான் செய்யுது. அதையும் கடந்து, கிடைக்கிற திருப்திக்கு, பெருமிதத்துக்கு அளவே இல்லை. இதுவரைக்கும், 1 லட்சத்து 48 ஆயிரத்து 755 கிலோ பொருட்களை மறுசுழற்சிக்கு அனுப்பியிருக்கோம். இதன் மூலம், 2,479 மரங்களைக் காப்பாத்தியிருக்கோம்; கிட்டத்-தட்ட 40 லட்சம் லிட்டர் தண்ணீர் பாதுகாக்கப்-பட்டிருக்கு. 38,676 கிலோ காற்று மாசு அடையாமல் பாதுகாக்கப்பட்டிருக்கு.

சென்னையைக் கடந்து, இந்தியா முழுவதுக்கும் எங்க நெட்வொர்க்கைக் கொண்டுபோகத் திட்டமிட்டிருக்கோம். மக்கும் கழிவுகளை அந்தந்தப் பகுதிகள்லயே இயற்கை உரமா மாத்தற திட்டம் வெச்சிருக்கோம். 2040ஆம் ஆண்டு, எங்க இலக்கு… குப்பை மேடு இல்லாத இந்தியா!’’ ஸீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *