ஆசிரியர் பதில்கள்

செப்டம்பர் 16-30

ஒருபானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்

கேள்வி: சட்டமன்றத்தில் பெரும்பாலும் 110ஆவது விதியின்கீழ் அறிவிப்பை முதல்வர் செய்வதற்கு வரம்பு ஏதும் கிடையாதா?
– தமிழினியன், சென்னை-15

பதில் : சட்டமன்றத்தில் எப்போதாவது மிகவும் அவசியம் ஏற்படும்போது பயன்படுத்த வேண்டிய விதி அது. அதன் வாசகங்களே அதற்குச் சான்று. என்ன செய்வது? விலக்குகளே விதியாவது என்ற பரிதாப நிலை இன்று. மேலும் எதிர்த்தோ, விமர்சித்தோ கருத்துக்-களைக் கூற அவ்விதியின்கீழ் வாய்ப்பும் இல்லாத விதி 110 ஆகும்!

கேள்வி: நூறு கோடி ரூபாய் செலவழித்தும் ஒலிம்பிக்கில் ஒரு தங்கம்கூட பெறமுடியாமைக்கு ஜாதியும், மதமும், உட்புகுந்தது காரணமா?
– நெய்வேலி தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்

பதில் : அதில் கூடுதலாக அரசியலையும் இணைத்துக் கொள்ளுங்கள்.

கேள்வி: பசு மாட்டுப் பிரச்சினையில் மோடியின் பேச்சுக்கு விஸ்வஹிந்து பரிஷத் எதிர்ப்பு தெரிவித்திருப்பது பற்றி…
– கெ.நா.சாமி, சென்னை-72.

பதில் : இம்மாதிரி விரிசல்கள் கொஞ்சம் கொஞ்சமாக அக்கட்டிடத்தில் வருகின்றன. ஷியிவி என்ற ஜனஜாக்-ரான்மஞ்ச் _ சுதேசி இயக்கமும், கடும் விமர்சனத்தை திஞிமி வெளிநாட்டு மூலதன வரவேற்புக்கு எதிராகக் கூறின. ஸிஷிஷி தலைவர் எல்லா-வற்றையும் பூசிமெழுகி பார்ப்பன நரித்தனத்தைப் பயன்படுத்தி உள்ளுக்குள் எரிச்சல் _ வெளியே சிரித்தல் என்ற நாடகத்தை சிறப்பாக அரங்கேற்றி வருகிறார்!

கேள்வி: தமிழக சட்டமன்றத் தலைவர் போக்கு, இந்திய அரசியல் சட்டத்தையும், அவைத்தலைவர் மாண்பையும் சீர்குலைப்பதுதானே?
– நாத்திகன் சா.கோ., பெரம்பலூர்.

பதில் : அதுபற்றி நாட்டிலுள்ள ஊடகங்கள்- _ கருத்துரையாளர்கள் மட்டுமல்ல, உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் கருத்துக்களை கூறத் துவங்கியுள்ள நிலை ஜனநாயகத்திற்கு நல்ல அம்சம் அல்லவே!

கேள்வி: கார்ப்பரேட் கம்பெனிகளுக்காக ஆட்சி நடத்தி, ஏழைகளை வஞ்சிக்கும் மோடி அரசு, இடஒதுக்-கீட்டில் ஏழைக்காக கிரீமிலேயர் பேசுவது ஏமாற்று, மோசடியல்லவா?
– அறநெறி, ஆத்தூர்.

பதில் : அதிலென்ன சந்தேகம்? உலகின் 10வது பணக்கார, செல்வம் மிகுந்த நாடு என்ற செய்தி வந்தது சில நாள்களுக்கு முன். இன்று வந்துள்ள செய்தி அச்செல்வம் ஒரு சிலரிடம் மட்டுமே குவிந்துள்ளது என்பதும் ஆகும். இந்த லட்சணத்தில் பிற்படுத்தப்பட்டவருக்கு மட்டும் கிரிமிலேயர் என்பது நியாய விரோதம்; அரசியல் சட்ட விரோதம். மறைமுக பொருளாதார அளவு-கோல் திணிப்பும் ஆகும்!

கேள்வி : காவிரி நீர் தொடர்பாக உச்சநீதி-மன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் சூழலில், தமிழக முதல்வரின் பேச்சுக்கு எதிராக தமிழக அமைச்சரே பேசியது விவசாய விரோத செயல் அல்லவா?
– சீத்தாபதி, சென்னை – 45

பதில் : என்ன செய்வது? நமது மந்திரிகள் எப்படி உள்ளனர் என்பதற்கு ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போன்றது இது!

கேள்வி : மாணவராய் இருந்தபோது இந்தியை எதிர்த்துப் போராடியதற்காக இப்போது வருத்தப்படுகிறேன் என்று மேனாள் துணைவேந்தர் பாலகுருசாமி போன்றோர் பேச்சு சரியா?
– குணசீலன், சென்னை-6

பதில் : மாணவராக இருந்தபோது வேட்டி கட்டியும் இருந்தேன் என்று வருத்தப்படுகிறார் போலும்! மத்தியில் வேறு எதையோ எதிர்பார்க்கிறவர்கள் பேச்சு போல அது தொனிக்கிறதே!

கேள்வி:    உள்ளாட்சித் தேர்தலில் மக்களின் நேரடித் தேர்வை மாற்றுவதன் உள்நோக்கம் என்ன?
– வீரசோழன், மதுரை-2.

பதில் : நேரடித் தேர்தல் முறை இருந்தால் வெற்றி வாய்ப்பு ஆளுங்கட்சிக்குக் குறைவு. கவுன்சிலர்களை விலைக்கு வாங்கி, ஆள்தூக்கி, பிறகு தலைமைப் பொறுப்பை கைப்பற்ற வசதி என்பதே உண்மைக் காரணம் என்பது யாருக்கும் தெரியுமே!

கேள்வி: உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காத  மாநில அரசுகளைக் கலைக்க நடவடிக்கையில்லையா?
– நன்மாறன், சேலம் – 1.

பதில் : கலைக்கும் அதிகாரம் உச்சநீதி-மன்றத்திற்குக் கிடையாது. கண்டிக்-கலாம் அவ்வள வே! அரசியல் சட்டப்படி அவ்வதிகாரம் அமைச்சர-வைக்கும், குடிஅரசுத் தலைவருக்கும் மட்டும்தான் உண்டு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *