அஜினோ மோட்டோ அள்ளி வழங்கும் நோய்கள்

செப்டம்பர் 16-30

‘மோனோ சோடியம் குளுட்டோமேட்’ என்ற வேதிப்பெயர் கொண்ட உப்பு, அஜினோ மோட்டோ ஆகும்.

இதன் விஷத்தன்மை குழந்தைகளுக்குப் பலவித ஆபத்துக்களை உண்டாக்குகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இது கலந்த உணவைச் சாப்பிடும் குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சியைத் தூண்டும் ஹார்மோன்கள் சுரப்பு வெகுவாகக் குறையும். இதனால் உடல் வளர்ச்சி குறையும்.

மூளையில் ‘ஆர்க்குவேட் நுக்ளியஸ்’ என்னும் பகுதியை பாதிப்பதால் எடை தாறுமாறாக அதிகரிக்கும். மூளை மட்டுமன்றி இரைப்பை, குடல், கல்லீரல் போன்ற உறுப்புகளில் அழற்சியையும் இரத்தக் கசிவையும் ஏற்படுத்தும். இதனால் குழந்தைகளுக்கு காரணம் கண்டுபிக்க முடியாத வயிற்று வலி உண்டாகும்.

ஒவ்வாமை உள்ளவர்களுக்கு இதைச் சாப்பிட்டதும் மார்பில் எரிச்சலும், மூச்சுத் திணறலும் ஏற்பட்டு உடல் வியர்க்க ஆரம்பிக்கும். அஜினோ மோட்டோவைப் போன்றே விரைவு உணவுக்கடைகளிலும், 5 நட்சத்திர ஓட்டல்களிலும் பயன்படுத்தப்படும். ‘ஜீரோஏடேட் ஹைட்ரோஜெனடேட்’ என்ற எண்ணெய் பசு, எருது, பன்றி போன்ற விலங்குகளின் கொழுப்பிலிருந்து தயாரிக்கப்-படுவதாகும். இதில் உடலுக்குத் தேவையற்ற ஒருவித கொழுப்பு உள்ளது. இந்த எண்ணெய்யை பலமுறை திரும்பத் திரும்ப பயன்படுத்தினாலும் உணவின் மணம் மாறாது. பதினெட்டு மாதம் வரை உணவுப் பொருள் கெட்டுப் போகாது.
பாக்கெட்டுகளில் கிடைக்கும் உருளைக்-கிழங்கு வற்றல், பீட்சா, சாக்லெட் மற்றும் சில துரித உணவுகள் இந்த

எண்ணெயில்தான் தயாரிக்கப்படுகின்றன. இவற்றை உண்பதால் உடலில் வேண்டாத கொழுப்பு சேர்ந்து இதயநோய், புற்றுநோய் உடல் பருமன் எல்லாம் வந்துவிடும்.

விருந்துகளில் உண்போர் வயிற்று வலியால் பாதிக்கப்படுவது இதனால்தான். இவற்றால் உடலில் அனைத்துவிதமான நோய்களும் வருவதற்கு வாய்ப்புகள் அதிகமே!

தகவல்: கெ.நா.சாமி

——————————————————————————————————————————————

இந்தியாவில் குருதி பற்றாக்குறை

உலக சுகாதார நிறுவனம் (கீ.பி.ளி) ஒரு நாட்டின் மக்கட் தொகையில் ஒரு சதவீத (1%) அளவுக்கு இரத்தம் (யூனிட் அளவில்) கையிருப்பு இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளது.

இந்தியாவில் 120 கோடி மக்கள் உள்ளனர். எனவே, ஒரு கோடியே இருபது இலட்சம் யூனிட்கள் இரத்தம் கையிருப்பில் இருக்க வேண்டும். ஆனால், 90 இலட்சம் யூனிட்டுகளே கையிருப்பில் உள்ளன. இது தேவையைவிட 30 இலட்சம் யூனிட்டுகள் குறைவாகும்.

தமிழகத்தில் 7 கோடி மக்கள் இருக்கிறோம். இங்கு 288 இரத்த வங்கிகளும் 434 இரத்த சேகரிப்பு மையங்களும் உள்ளன. ஒரு ஆண்டில் அரசாங்க நிறுவனங்கள் 3.5 லட்சம் யூனிட்களும் தனியார் நிறுவனங்கள் 5 லட்சம் யூனிட்களும் இரத்தத்தை சேமிக்கின்றன. எனவே, தமிழகம் உலக சுகாதார நிறுவனத்தின் இலக்கைவிட அதிகமாகவே கையிருப்பில் வைத்துள்ளது எனக் கொள்ளலாம். எனினும் இந்திய அளவில் பற்றாக்குறை உள்ளமையால் இளைஞர்களிடம் ‘குருதிக்கொடை’ உணர்வை ஊக்குவிக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *