சுமன் தோய்போடே என்ற இந்த 37 வயது துப்புரவு தொழிலாளர் மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தில் பணி புரிகிறார். அக்டோபர் 28 அன்று ஒரு கழிப்பறையில் 40 லட்ச ரூபாய் மதிப்புள்ள 4 வைர மோதிரங்களைக் கண்டெடுத்தார். அதை விமான நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். இதற்கிடையில் மோதிரத்தைத் தொலைத்த பெண்மணி ‘காணவில்லை’ என்று புகார் தெரிவித்ததை அடுத்து மோதிரங்கள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டன. சுமனின் நேர்மையைப் பாராட்டி விமான நிலையமும் அந்த பயணியும் பரிசுத் தொகை வழங்கினார்கள். இரண்டு குழந்தைகளுக்கு தாயான சுமனின் கணவர் செக்யூரிட்டியாக பணிபுரிகிறார். குடும்பத்தைக் காப்பாற்று-வதற்காக திருமணமானதிலிருந்து சுமன் வேலைக்குச் செல்கிறார்.
Leave a Reply