உச்சி முதல் உள்ளங்கால் வரை
புற்றுநோய் செல்கள் – புரோகோலி
நம் உடலில் தினசரி புற்றுநோய் செல்கள் உருவாகின்றன. அதை, நம் நோய் எதிர்ப்பு சக்தி அழித்துவிடுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது, புற்றுநோய் செல்கள் வளர்ச்சியடைகின்றன. இதற்கு, நம்முடைய தவறான வாழ்வியல் பழக்கங்களும் உணவுப் பழக்கமும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
புரோகோலியில் நார்ச்சத்து, வைட்டமின் ஏ, பி6, சி, பொட்டாசியம், நுண்ணூட்டச் சத்துகள், ஆன்டி ஆக்ஸிடன்கள் நிறைந்துள்ளதால், புற்றுநோயை எதிர்க்கும் வல்லமை புரோகோலிக்கு உண்டு. புரோகோலியில் உள்ள சல்ஃபரோபேன், கந்தகம் போன்ற சத்துக்கள் புற்றுநோய் செல்களை அழிக்கும். புற்றுநோய் வரவிடாமல் தடுக்கும்.
புற்றுநோய் செல்களை அழிக்கும் உணவுகள்:
புரோகோலி, வெங்காயம், குடமிளகாய், தக்காளி, மாதுளை, ஆரஞ்சு, மீன், பூண்டு, மிளகு, மஞ்சள், கேரட், நட்ஸ்.