நோய் எதிர்ப்புத் திறன் அதிகரிக்க உதவும் இயற்கை உணவுகள்!

செப்டம்பர் 01-15

நாம் உண்ணும் உணவு, உள்வாங்கும் மூச்சு, அருந்தும் நீர் இவற்றின் மூலம் நுண்கிருமிகளும், பாக்டீரியாக்களும், வைரஸ்-களும் நம் உடலை எப்போது வேண்டு-மானாலும் தாக்கும்.

அவற்றிலிருந்து நம் உடலை தற்காத்துக்-கொள்ள, நோய்க் கிருமிகளை எதிர்க்கக்கூடிய சக்தி நம்மிடம் இயற்கையாய் உள்ளது. அதுவே நோய் எதிர்ப்பு சக்தியாகும்.

இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி…

இந்த நோய் எதிர்ப்பு சக்தி பிறக்கும்போதே ஒருவரது உடலில் இயற்கையாக அமையக்-கூடியது. மனித உடலில் உள்ள தோல் பரப்பு ஒரு மிகப்பெரிய தடுப்புச் சுவர் போல் செயல்பட்டு நோய்க்கிருமிகளை உடலில் சேராமல் தடுக்கிறது. அதேபோல் மூக்கு, தொண்டை மற்றும் உணவு செல்லும் பாதை போன்ற பகுதிகளில் உள்ளே உள்ள சவ்வுகளும் தடுப்புக் கவசம் போல் செயல்பட்டு நம்மை நோய்க் கிருமிகளிடமிருந்து காப்பாற்றுகின்றன.

அடுத்து, உடலுக்குள் நுழையும் நோய்த் தொற்றுக் கிருமிகளைத் தாக்கி அழிக்கக் கூடியவைகளான வெள்ளை அணுக்கள், உடலுக்குள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இம்மூன்றும் நம் உடலுக்கு இயற்கையாக அமையப்பெற்ற நோய் எதிர்ப்பு சக்திகளாகும்.

உதாரணமாக மாசடைந்த காற்றை சுவாசிக்கும்போது இயல்பாகவே உடல் அதை ஏற்றுக்கொள்ளாமல் மூச்சுத் திணறலை உண்டாக்கி, இருமல், தும்மல் ஏற்படச் செய்து, நோய்க் கிருமிகளை உடலைவிட்டு அகற்றுகிறது.

தகவமைக்கப்படும் நோய் எதிர்ப்பு சக்தி…

நம்முடைய உடல் நோய்க் கிருமிகளிட-மிருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக தாக்கும் நோய்களுக்குக் காரணமான கிருமிகளுக்குத் தகுந்தவாறு வேறுபட்ட நோய் எதிர்ப்புத் தன்மையை உருவாக்குகிறது.

அதாவது, புதிதாக ஒரு நோய் ஏற்படும்போது  அந்த நோயை எதிர்க்கும் சக்தி அப்போது உடலுக்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால், பாதிக்கப்பட்ட பிறகு அந்த நோய் பற்றி உடலில் இருக்கும் செல்கள் பதிவு செய்துகொள்ளும். இந்தக் காரணத்தால் நோய் ஏற்படுகிறது என்பதை நினைவு வைத்துக்கொண்டு இதற்கு தகுந்தாற்போல் உடல் எச்சரிக்கையாவிடும். இதற்கு “நினைவு செல்கள்” என்று பெயர். இந்த நோய் எதிர்ப்பு சக்தியில் முக்கிய பங்கு வகிப்பது இரத்தத்தில் உள்ள லிஹ்னீஜீலீஷீநீஹ்tமீs என்ற வெள்ளை அணுக்கள்.

உடன்பாட்டு நோய் எதிர்ப்பு சக்தி…

உடன்பாட்டு நோய் எதிர்ப்பு சக்தி என்பது, தேவைப்படும்போது இன்னொரு இடத்திலிருந்து எதிர்ப்பு சக்தியை தற்காலிகமாகப் பெறுதல் ஆகும்.

உதாரணமாக, தாய்ப்பால் அருந்தும் குழந்தைக்கு தாய்ப்பாலில் இத்தகைய நோய் எதிர்ப்பு சக்தி தற்காலிகமாகக் கிடைக்கிறது. மேலும், மஞ்சள் காமாலை நோய் எதிர்ப்பு மருந்து போட்டுக்கொள்வது, டெட்டானஸ் நோய் எதிர்ப்பு மருந்து போட்டுக்கொள்வது போன்றவையும் இந்த வகையைச் சார்ந்ததே.

நோய் எதிர்ப்பு சக்தி செயல்படும் விதம்

நோய்க் கிருமிகள் உடலினுள் நுழையும்-போது, அதனை எதிர்த்து போரிடுவதற்கான நுட்பமான கட்டமைப்பு நமது உடலில் செயல்படுகிறது. இந்த செயல்பாட்டின்போது உயிரணுக்கள், திசுக்கள், நுண்ணுயிரிகள் அனைத்தும் ஒன்றுக்கொன்று ஒத்துழைப்போடு விரைந்து செயல்படுகின்றன. நாளமில்லா சுரப்பிகள், மண்ணீரல், எலும்புகளின் அடியில் உள்ள மஜ்ஜை ஆகிய உறுப்புகள் இந்த செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள், பாதுகாப்பு அரணாக செயல்படுகின்றன. வெவ்வேறு வகையான வேதிப் பொருள்களும் சுரப்பிகளும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் உறுதுணையாக இருக்கின்றன. இவை இரத்தம் மற்றும் நிணநீர் வழியாக பயணித்து, நோய்க்குக் காரணமான கிருமிகளை அழிக்கின்றன.

நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி 24 மணி நேரமும் செயல்படுகிறது. அதன் பெரும்பாலான செயல்பாடுகள் நம்மை அறியாமலே நிகழ்கின்றன. சில நேரங்களில் நோய்க் கிருமிகளை எதிர்க்க முடியாமல், எதிர்ப்பு சக்தி தோல்வியைடயும் போதுதான் அதன் அறிகுறிகள் நமக்குத் தெரியத் தொடங்குகின்றன.

அதாவது காய்ச்சல், சளி, மூக்கில் நீர் ஒழுகுதல் இவையெல்லாம் நோயை எதிர்த்து நம் உடல் போராடுகிறது என்பதற்கான அடையாளங்கள். அப்போது ஏற்படும் அதிகபட்ச வெப்பநிலைதான் காய்ச்சலாக உணரப்படுகிறது. சளியின் வழியாக கிருமிகள் அப்போது வெளியேற்றப்படுகின்றன.

புண், கட்டி, ரணம் போன்றவை ஏற்படும்போது அந்தப் பகுதியில் நோயை எதிர்ப்பதற்கான செல்கள் அதிக அளவில் வந்து குவிகின்றன. இவை அந்த புண்ணின் வழியாக கிருமிகள் தொற்றுவதைத் தடுக்கின்றன.

நோய் எதிர்ப்பு சக்தி குறையக் காரணம் என்ன?

சரிவிகித உணவு சாப்பிடாததால் ஏற்படும் சத்துக்குறைபாடு, பலவீனமான உடலமைப்பு, மன அழுத்தத்தைக் கொடுக்கும் வேலைகள், ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடிய சூழலில் வாழ்வது, மது, போதைப்பொருள் பழக்கம், புகைப்பழக்கம், தூக்கமின்மை, சர்க்கரை நோய் போன்ற காரணங்களால் நோய் எதிர்ப்புத் திறன் குறைகிறது.

ஆர்கானிக் உணவு

இயற்கை உரம், இயற்கையான பூச்சிக்-கொல்லியைப் பயன்படுத்தி விளைவிக்கப்படும் ஆர்கானிக் _ இயற்கை விளைபொருட்களை உண்பதால் நம் உடல்நலம் கெடுவதில்லை. ஆரோக்கியம் மேம்படுகிறது.

இயற்கை வேளாண்மை பொருட்கள் வழக்கமாகச் சந்தையில் கிடைக்கும் உணவுப் பொருட்களைவிட சற்றே அதிக விலையில் விற்கப்படுகின்றன. பாதுகாப்பற்ற உணவுப் பொருட்களைக் குறைந்த விலையில் வாங்கி உண்டு பின்னர் மருத்துவமனையில் பல ஆயிரங்கள் செலவழிப்பதை விட பாதுகாப்பான தரமான இயற்கை விளைபொருட்களை வாங்கி உண்டு உடல்நலம் காப்பது சிறந்ததாகும்.

இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட பழங்கள், காய்கறிகள், மற்றும் தானியங்கள், பருப்பு வகைகள் உடலில் நோய் எதிர்புத் திறனை அதிகரிக்கின்றன. அவற்றில் தாதுக்கள், வைட்டமின்கள் அதிக அளவில் உள்ளன. இவை நம் உடலுக்கு ஊட்டச் சத்தாக அமைகின்றன. நாம் உண்ணும் சில உணவுப் பொருட்களில் உள்ள நோய் எதிர்ப்புத் திறன் எவ்வாறு நம்மை பலவித நோய்களில் இருந்து பாதுகாக்கிறது என்று பார்ப்போம்.

பூண்டு

பூண்டில் முக்கிய மூலப்பொருளாக விளங்கும் அல்லிசின்_ல் பாக்டீரியா, நுண்ணுயிர், பூஞ்சை போன்றவற்றை எதிர்க்கும் திறன் மற்றும் ஆன்டி_ஆக்ஸிடெண்ட் குணங்கள் உள்ளன.

வெங்காயம்

வெங்காயம், ஜலதோஷத்தை ஏற்படுத்தும் நச்சு நுண்மங்களையும் புற்றுநோய், இதய நோய்களையும் தடுத்து நிறுத்துகிறது. நோய்த் தொற்றை தடுத்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வெங்காயத்தில் உள்ள லிலின் என்ற இராசாயனப் பொருள் பாக்டீரியாக்கள், நச்சு நுண்மங்கள், காளான் போன்றவை உடலில் சேராமல் தடுக்கின்றது. இத்துடன் புற்றுநோய்க் கட்டிகள் வளராமலும் தடுக்கின்றது.

காரட்

நோய் எதிர்ப்பு சக்தி நன்கு உறுதிபட காரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் உதவுகிறது. குறிப்பாக உடல் தோலிலும், சளிச் சவ்விலும் நோய் எதிர்ப்புப் பொருட்கள் நன்கு செயல்படும்படி செய்கிறது.

ஆரஞ்சு

ஆரஞ்சில் வைட்டமின் சி ஒருமுகப்-படுத்தப்பட்டு சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. இன்டர்பெரான் என்ற இரசாயனத் தூதுவர்களை அதிகம் உற்பத்தி செய்கிறது. வைட்டமின் சி. காற்று மற்றும் நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றுக் கிருமிகளை இந்த இன்டர்பெரான்கள் எதிர்த்துப் போராடி உடலில் அவை சேராமல் அழிக்கின்றன. ஆரஞ்சு கிடைக்காத போது எலுமிச்சையை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

பருப்பு வகைகள்

பாதாம் பருப்பு, வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளில் உள்ள வைட்டமின் ஈ, வெள்ளை இரத்த அணுக்கள் சிறப்பாகச் செயல்படத் தூண்டுகின்றது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

முட்டைகோஸ்

குடல் புண்கள் ஆறு மடங்கு வேகத்தில் குணம் பெற முட்டைக்கோஸில் உள்ள குளுட்டோமைன் என்ற அமிலம் உதவுகிறது. மேலும் உணவின் மூலம் உள்ளே சென்றுள்ள நோய்த் தொற்றும் நுண்ணுயிர்கள் முட்டைக்கோஸால் அகற்றப்படுகின்றன.

உடற்பயிற்சி: நல்ல உணவோடு, போதிய உடற்பயிற்சியும் நோய் தடுப்பாற்றலை வளர்க்கும். எனவே, நாள்தோறும் ஒரு மணிநேர உடற்பயிற்சி அவசியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *