1 ஒவ்வாமை எதனால் உண்டாகிறது என்பதைக் கண்டறிந்து, அதை ஒதுக்க வேண்டும்.
2. குழந்தைக்கு இரண்டு வயது வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டியது கட்டாயம்.
3. தாய்ப்பால் போதவில்லை எனில், சோயா பால் தரலாம்.
4. ஒவ்வாமை உள்ள குழந்தைகளுக்கு நான்கு மாதம் முடிந்ததுமே திட உணவுகளை அறிமுகப்படுத்திவிட வேண்டும்.
5. அரிசியில் தயாரிக்கப்பட்ட உணவு-களையும், வாழைப்பழம், வேகவைத்த ஆப்பிள் போன்ற உணவுகளையும், படிப்படியாக அறிமுகப்படுத்த வேண்டும்.
6. கடலை கலந்த சத்துமாவு பல குழந்தை-களுக்கு ஒவ்வாமை ஆகிறது. இதைத் தவிர்ப்பது நல்லது.
7. குளியலுக்கு தோலுக்கு இதமான சோப்பைப் பயன்படுத்த வேண்டும்.
8. இளஞ்சூடான நீரில் குளிக்கவைத்த பின் தோலில் நீர்ச்சத்தை நீட்டிக்க உதவும் மாய்ச்சரைசர் க்ரீமை மருத்துவரின் பரிந்துரையின் அடிப்படையில் பயன்-படுத்தலாம்.
9. பருத்தித் துணிகளை மட்டும் உபயோகிக்க வேண்டும்.
10. குழந்தைகளுக்கு இறுக்கமான ஆடை-களைத் தவிர்த்து, தளர்வான ஆடைகளை அணிவிக்க வேண்டும்.