மனிதர்களாகிய நம் இரைப்பையில் சுரக்கும் அமிலம் எவ்வளவு தெரியுமா?
24 மணி நேரத்தில் 68 அவுன்ஸ். அதாவது
2 லிட்டர் இரைப்பை அமிலம் சுரக்கிறது. இந்த அமிலத்தின் இராசயனப் பெயர் ஹைட்ரோகுளோரிக் அமிலம் என்பதாகும். இந்த அமிலத்தில் நாம் முகம் மழிக்கப் பயன்படுத்தும் ஒரு பிளேடைப் போட்டு வைத்தால் 24 மணி நேரத்தில் அந்த பிளேடின் 40% பாகம் கரைந்துபோய் இருக்கும். தொழிற்சாலைகளில் இந்த ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை உலோகங்களில் உள்ள துருவைப் போக்கப் பயன்படுத்துகிறார்கள்.